தினசரி மன்னா
ஜெபம்யின்மையின் பாவம்
Saturday, 17th of August 2024
0
0
227
Categories :
பிரார்த்தனை (Prayer)
யாராவது ஒருவர் உங்கள் சிறந்த நண்பராக இருப்பதாகக் கூறி, உங்களுடன் ஒருபோதும் பேசவே மாட்டார் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? தற்போதுள்ள நட்பில் எதுவாக இருந்தாலும், அது நிச்சயமாக சிதைந்துவிடும். இதேபோல், தேவனுடனான உறவும் தொடர்பு இல்லாமல் வெறுமையில் உள்ளது.
ஜெபம்யின்மையின் பாவம். இதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும். சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களுக்காக ஜெபிப்பதாக வாக்களித்தபோது இதைத் தெளிவாக்கினார்:
“நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.”
1 சாமுவேல் 12:23
தேவனுடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கத் தவறியது தேவனுக்கு எதிரான பாவம் என்பதை சாமுவேல் உணர்ந்தார். நீங்கள் ஒரு போதகராகவோ, குழு மேற்பார்வையாளராகவோ அல்லது J-12 தலைவராகவோ இருந்தால், தேவன் உங்களுக்குக் கொடுத்த ஜனங்களுக்காக ஜெபிக்கத் தவறுவது, நீங்கள் மனம்திரும்பப் வேண்டிய பாவம் என்பதை நான் உங்களுக்கு முன்கூட்டியே சொல்கிறேன்.
தலைவர்கள் தேவனுடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்காதபோது, நாம் வழிநடத்தும் ஜனங்களை நாம் உண்மையில் பொருட்படுத்துவதில்லை என்று ஆவி மண்டலத்தில் ஒரு சமிக்ஞையை அனுப்புகிறோம். கர்த்தராகிய இயேசு அப்படிப்பட்டவர்களை “மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல” பார்த்தார் (மத். 9:36) பரிசேயர்கள் தேவனுடைய பிள்ளைகளை பற்றி உண்மையில் கவலைப்படுவதற்கு தங்கள் சொந்த காரியங்களில் மிகவும் அலுவளாக இருந்தனர்.
ஜெபிக்கத் தவறுவது தேவனிடம் அன்பின்மையின் குறிகாட்டியாகும். ஜெபம்யின்மைய என்பது உலகத்தன்மை மெல்ல மெல்ல கவனிக்கப்படாமல் உள்ளே நுழைந்ததைக் குறிக்கிறது.
சுகமாக்குதால், விடுதலை மற்றும் தீர்க்கதரிசனக் கூட்டங்கள் மிகப்பெரிய கூட்டத்தை வரவழைப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன், ஏனென்றால் எல்லோருக்கும் சுகம், விடுதலை, தீர்க்கதரிசனம் போன்றவற்றை எதிர்பார்க்கிறார்கள் (அதில் தவறில்லை). இருப்பினும், ஜெபங்களில் கலந்துகொள்ளுமாறு மக்களைக் கேளுங்கள், மேலும் அவர்கள் எதையாவது இழக்க நேரிடும் என்பது பொதுவான உணர்வு.
நான் உங்களுக்கு ஒன்று சொல்லலாமா? ஜெபம்யின்மை நம் வாழ்வில் அதிகமாக இருக்கும்போது, ஒருவரையொருவர் நேசிக்கத் தவறியதற்காகவும் நாம் குற்றவாளிகளாக இருக்கிறோம், மேலும் இது பெரும்பாலும் ஒருவருக்கொருவர் பரிந்து பேசும் பற்றாக்குறையில் நிரூபிக்கப்படுகிறது.
கர்த்தராகிய இயேசு மத்தேயு 26:41 இல் நம்மை எச்சரித்தார்: “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.” ஜெபம்யின்மை சோதனையின் அம்புகள் நம்மைத் தாக்க அனுமதிக்கும், இது நம்மை மேலும் மேலும் ஆழமாக பாவச் சேற்றில் கொண்டு செல்லும்.
ஜெபம்
1. பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கத் தவறிய நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, என் வாழ்க்கையில் ஜெபத்திற்குத் தடைகள் அனைத்தும் வேரோடு பிடுங்கப்படட்டும்.
3. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, என் வாழ்க்கையில் ஜெபமில்லாத ஆவி உமது அக்கினியால் எரிக்கப்படட்டும்.
4. பிதாவே, இயேசுவின் நாமத்தில், இயேசுவின் இரத்தத்தால் என் ஜெப வாழ்க்கைக்கு இடையூறாக திறக்கப்பட்ட ஒவ்வொரு அசுத்த கதவையும் மூடுகிறேன்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, என் வாழ்க்கையில் ஜெபத்திற்குத் தடைகள் அனைத்தும் வேரோடு பிடுங்கப்படட்டும்.
3. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, என் வாழ்க்கையில் ஜெபமில்லாத ஆவி உமது அக்கினியால் எரிக்கப்படட்டும்.
4. பிதாவே, இயேசுவின் நாமத்தில், இயேசுவின் இரத்தத்தால் என் ஜெப வாழ்க்கைக்கு இடையூறாக திறக்கப்பட்ட ஒவ்வொரு அசுத்த கதவையும் மூடுகிறேன்.
Join our WhatsApp Channel
Most Read
● நாள் 40:40 நாட்கள் உபவாச ஜெபம்● பெருந்தன்மை பொறி
● உங்களைத் தடுக்கும் வரம்புக்குட்பட்ட நம்பிக்கைகள்
● காலத்தின் அடையாளங்களை பகுத்தறிவீர்களா?
● பொருளாதார முன்னேற்றம்
● மாற்றத்திற்கான தடைகள்
● தேவன் பெரிதும் அநுகூலமுமான கதவுகளைத் திறக்கிறார்
கருத்துகள்