தினசரி மன்னா
நீங்கள் தேவனை எதிர்க்கிறீர்களா?
Sunday, 8th of September 2024
0
0
212
Categories :
விடுதலை (Deliverance)
ஒருமுறை நமது சபை உறுப்பினர் ஒருவர் தீர்க்கதரிசன வரங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட தனது போதகரிடம் சென்று, “பாஸ்டர், எந்த ஆவி என்னை எதிர்க்கிறது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார். சபை உறுப்பினர் மிகவும் கவர்ச்சியான பதிலை எதிர்பார்த்து, "தேவனின் ஆவியே உங்களை எதிர்க்கிறது, ஏனென்றால் நீங்கள் தேவனை எதிர்க்கிறீர்கள்" என்று போதகர் பதிலளித்தபோது தடுமாறினார்.
பின்வரும் வசனங்களை கவனமாக படிக்கவும்:
“ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”
யாக்கோபு 4:7
“விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.”
1 பேதுரு 5:9
ஒரு கிறிஸ்தவன் முதலில் தேவனுக்கு கீழ்படிந்து பிசாசை எதிர்க்க வேண்டும் என்பதை மேலே உள்ள வசனங்கள் நமக்கு தெளிவாகக் கூறுகின்றன. எதிரியின் ஒவ்வொரு தீய திட்டத்தையும் இப்படித்தான் நாம் முறியடிக்க முடியும்.
நற்செய்தி என்னவென்றால், கிறிஸ்தவர்களில் இளம் கிறிஸ்தவரகள் வலுவாக நிற்பதன் மூலம் எதிரியின் மிகவும் இருண்ட சக்திகளை வெற்றிகரமாக எதிர்க்க முடியும். இருப்பினும், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு அம்சம் உள்ளது, அங்குதான் எல்லா பிரச்சனைகளும் எழுகின்றன.
“அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.” யாக்கோபு 4:6
“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” 1 பேதுரு 5:5
கர்த்தருடைய பலத்தில் நாம் பிசாசை எதிர்க்க வேண்டும் என்பதே உண்மை. இருப்பினும், பல நேரங்களில் கிறிஸ்தவர்கள் தேவனையே எதிர்க்கிறார்கள். பெருமை என்பது தேவனுக்கும் அவருடைய வழிகளை எதிற்கும் காரியம். இந்த நேரத்தில் தேவன் தாமே நம்மை எதிர்த்து நிற்கிறார்.
எண்ணாகமம் 22ல் பிலேயாம் என்ற மனிதனைப் பற்றி பேசுகிறது.
வெளிப்படையாக, பிலேயாம் ஒரு பெரிய நற்பெயரைப் பெற்றிருந்தார்! சாபமிட்டால் சாபம் என்றும், ஆசிர்வதித்தால் ஆசீர்வாதம் என்றும் கூறப்பட்டது. பிலேயாம் கர்த்தரை அறிந்திருந்தார், ஜனங்களும் அதை அறிந்திருந்தார்கள். இப்போது மோவாபியர்களோடு போகவேண்டாம் என்று கர்த்தர் பிலேயாமிடம் தெளிவாகச் சொல்லியிருந்தார், ஆனாலும் பிலேயாம் அவர்களுக்கு பின்சென்ட்றார் . (எண்ணாகமம் 22:21)
பிலேயாம் போனதால், தேவனுடைய கோபம் (பிலேயாம் மீது) எழுந்தது, கர்த்தருடைய தூதன் அவனுக்கு விரோதியாக வழியில் நின்றான். கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார், கர்த்தருடைய தூதன் கையில் உருவிய பட்டயத்துடன் வழியில் நிற்பதைக் கண்டார்... (எண்ணாகமம் 22:22,31)
நாம் தேவனை எதிர்க்கும்போது, அவர் நம்மை எதிர்க்கிறார். இத்தகைய சூழ்நிலைகளில் நமது எதிர்ப்பு முற்றிலும் பயனற்றது. பணிவு என்பது பெருமைக்கு எதிரானது.
உங்கள் வாழ்க்கை முறையின் சில பகுதிகளை மாற்றுவதைப் பற்றி தேவன் உங்களிடம் பேசியிருக்கலாம், மேலும் நீங்கள் மாற்றத்தை காலவரையின்றி ஒத்திவைத்திருக்கலாம். ஒரு சிறப்பு நிதி விதையை விதைக்க வேண்டியதன் அவசியத்தை, யாரையாவது மன்னிக்க வேண்டும் அல்லது ஜெபத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டியதன் அவசியத்தை தேவன் உங்கள் மீது பதிந்து இருக்கலாம். எதுவாக இருந்தாலும், தேவனை எதிர்க்காமல் தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் முன்னேற்றங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம், பெருமையின் காரணமாக தேவனிடமிருந்தே எதிர்ப்பு வரக்கூடும் என்ற நிலையில், அதற்குப் பிசாசைக் குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்கள் எந்த வகையிலும் தேவனை எதிர்க்கிறீர்களா?
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, உம்முடைய வார்த்தையைக் கேட்காமல், உம்மை எதிர்த்ததற்காக என்னை மன்னியும். உமது வார்த்தைக்கு உடனடியாகக் கீழ்ப்படிகிற இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● வாசல் காக்கிறவர்கள்● அவரது பரிபூரண அன்பில் சுதந்திரத்தைக் கண்டறிதல்
● உச்சக்கட்ட இரகசியம்
● வேதாகம செழிப்புக்கான இரகசியங்கள்
● இது எவ்வளவு முக்கியம்?
● தைரியமாக இருங்கள்
● பொறுமையை தழுவுதல்
கருத்துகள்