தினசரி மன்னா
இரகசிய வருகையும் ரோஷ் ஹஷானாவும்
Sunday, 29th of September 2024
0
0
168
Categories :
இரகசிய வருகை (Rapture)
இரகசிய வருகை எப்போது நிகழும் என்று வேதம் சரியாகச் சொல்லவில்லை.
“அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.”(மாற்கு 13:32)
இரகசிய வருகை நடக்குமா இல்லையா என்பது பற்றி எந்த விவாதமும் இல்லை; அந்த கேள்வியில் வேதம் தெளிவாக உள்ளது. இரகசிய வருகை எப்போது நடைபெறும் என்பது குறித்து, நிகழ்வின் சரியான நேரம் யாருக்கும் தெரியாது. கர்த்தராகிய இயேசு லூக்காவில் இதை உறுதிப்படுத்துகிறார், “அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.”
(லூக்கா 12:40).
மத்தேயு 24:6-7 இல், கர்த்தருடைய வருகை எப்போது இருக்கும் என்பதை அறிய நாம் எதிர்பார்க்கக்கூடிய பல்வேறு அடையாளங்களைப் பற்றி கர்த்தராகிய இயேசு பேசினார்.
“யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” மத்தேயு 24:6-7
இந்த அடையாளங்களில் பெரும்பாலானவை நாம் வாழும் காலங்களில் நடைபெறுவதைக் காணுகிறோம், எனவே கர்த்தருடைய வருகைக்கு அதிக காலம் இருக்காது என்று நாம் எதிர்பார்க்கலாம்.
இரகசிய வருகை எப்போது நிகழும் என்பதற்கு வேதம் மற்றொரு சுவாரசியமான காரியத்தை வெளிப்படுத்துகிறது.
“சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:”
லேவியராகமம் 23:4
தேவனின் ஏழு பண்டிகைகள் பின்வருமாறு:
- பாஸ்கா பண்டிகை
- புளிப்பில்லாத அப்பபண்டிகை
- முதர்ப்பலன் பண்டிகை
- பெந்தெகொஸ்தே அல்லது வார பண்டிகை
- எக்காள பண்டிகை
- பரிகார பண்டிகை
- கூடார பண்டிகை
ஏழு பண்டிகைகளில், முதல் நான்கு பண்டிகைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்டது.
- பஸ்கா பண்டிகையில் இயேசுவை தேவன் ஆட்டுக்குட்டியாக பலி செய்தல்
- புளிப்பில்லாத அப்பத்தின் பண்டிகையில் இயேசுவின் அடக்கம்
- முதற்பலன் பண்டிகை இயேசு உயிர்த்தெழுதல்
- பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் வருகை
மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பலி, அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரிசுத்த ஆவியின் வருகை அனைத்தும் இந்த பண்டிகைகள் கொண்டாடப்பட்ட சரியான நாளில் நடந்தது.
இப்போது இன்னும் மூன்று பண்டிகைகள் நிறைவேற உள்ளன. அவை:
- எக்காளம் பண்டிகை
- பரிகார பண்டிகை
- கூடார பண்டிகை
தேவன் நோவாவை நினைத்தளுறினார் (ஆதியாகமம் 8:1), தேவன் அவரை மறந்துவிட்டார் என்று வேதம் சொல்லவில்லை. இல்லை, நோவாவின் கீழ்ப்படிதலின் காரணமாக, தேவன் அவர் சார்பாக பேசும் நேரம் வந்துவிட்டது என்று வேதம் கூறுகிறது.
நோவாவின் சார்பாக அவர் பேச ஆரம்பித்தபோது, வெள்ளம் குறைய ஆரம்பித்தது. விந்தை என்னவென்றால், நோவா பேழையின் மூடியை அகற்றி, நிலத்தின் மேற்பரப்பு வறண்டு இருப்பதைக் கண்டுபிடித்த நாள் "முதல் மாதம், மாதத்தின் முதல் நாள்" (ஆதியாகமம் 8:13). இந்த குறிப்பிட்ட நாள் பின்னர் எக்காளங்களின் பண்டிகை என்று அறியப்பட்டது. எக்காள பண்டிகை ரோஷ் ஹஷானா என்றும் அழைக்கப்படுகிறது, இது யூத சிவில் ஆண்டின் தொடக்கமாகும்.
சந்திரனின் கட்டங்கள்
ரோஷ் ஹஷானா ஒரு அமாவாசை அன்று நிகழும் ஒரே பண்டிகை நாள், மேலும் ஏபிரெய நாட்காட்டி சந்திரன் என்பதால், இந்த பண்டிகை நமது நாட்காட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் நிகழாது. ரோஷ் ஹஷனா 2024 செப்டம்பர் 2 October அன்று மாலை தொடங்கி செப்டம்பர் 4 october, செவ்வாய் அன்று மாலை முடிவடைகிறது.
“நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.”
லேவியராகமம் 23:24
எக்காளப் பண்டிகை நாளில், ஏக்காளம் ஊதப்படும். வேத வல்லுநர்கள் நீண்ட காலமாக எக்காளங்களின் பண்டிகையை சபையின் இரகசிய வருகையுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்,
“இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.”
1 கொரிந்தியர் 15:51-52
ஒவ்வொரு ஆண்டும் யூதர்கள் எக்காளப் பெருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். எக்காளங்களின் பண்டிகை நெருங்கும் போது உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். இரகசிய வருகை எப்போது நிகழும் என்பது நமக்கு தெரியாது, ஆனால் ஒன்று நிச்சயம், அது எக்காளப் பண்டிகை நாளில் நடக்கும். ஆயத்தமாக இருப்பதே நமது வேலை.
ஜெபம்
ஒவ்வொரு ஜெப குறிப்பையும் உங்கள் இருதயத்திலிருந்து வரும் வரை மீண்டும் ஜெபியுங்கள் . அதன் பிறகுதான் அடுத்த ஜெபகுறிப்பிற்கு செல்ல வேண்டும். அதை மீண்டும் செய்யவும், தனிப்பயனாக்கவும், ஒவ்வொரு ஜெப குறிப்பையும் குறைந்தபட்சம் 1 நிமிடம் ஜெபியுங்கள்.]
1. இயேசுவின் நாமத்தில், பிதாவே, எவரும் அழிந்து போவது உமது சித்தம் அல்ல என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், உம்மை பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை ... (நபரின் பெயரைக் குறிப்பிடவும்) தாரும்.
3. கர்த்தரைப் பெறுவதிலிருந்து ... (நபரின் பெயரைக் குறிப்பிடவும்) மனதை மறைக்கும் எதிரியின் ஒவ்வொரு கோட்டையும் இயேசுவின் நாமத்தில் அழிகபடட்டும்.
4. ஆண்டவரே, உமது ஒளி பிரகாசிக்கட்டும் (நபரின் பெயரைக் குறிப்பிடவும்). அவர்களைக் காப்பாற்றும், ஆண்டவரே.
1. இயேசுவின் நாமத்தில், பிதாவே, எவரும் அழிந்து போவது உமது சித்தம் அல்ல என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், உம்மை பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை ... (நபரின் பெயரைக் குறிப்பிடவும்) தாரும்.
3. கர்த்தரைப் பெறுவதிலிருந்து ... (நபரின் பெயரைக் குறிப்பிடவும்) மனதை மறைக்கும் எதிரியின் ஒவ்வொரு கோட்டையும் இயேசுவின் நாமத்தில் அழிகபடட்டும்.
4. ஆண்டவரே, உமது ஒளி பிரகாசிக்கட்டும் (நபரின் பெயரைக் குறிப்பிடவும்). அவர்களைக் காப்பாற்றும், ஆண்டவரே.
Join our WhatsApp Channel
Most Read
● அப்பாவின் செல்ல மகள் - அக்சாள்● தேவன் - எல்ஷடாய்
● ஜீவன் இரத்தத்தில் உள்ளது
● மலைகலும் பள்ளத்தாக்குகளின் தேவன்
● நாள் 25: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● மத ஆவியை அடையாளம் காணுதல்
● உங்கள் பழிவாங்கலை தேவனிடம் கொடுங்கள்
கருத்துகள்