“உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்.”
உபாகமம் 20:4
யாத்திராகமம் புத்தகம் அற்புதங்களின் கதை. இஸ்ரவேல் புத்திரரை விடுவிப்பதற்காக மோசே முதன்முதலில் பார்வோன் முன் நின்றபோது, யாரோ ஒருவர் தங்களுக்கு விடுதலையைப் பெற உதவ முயற்சித்ததற்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் பார்வோனிடம் மனு கொடுத்ததர்காக மோசே மீது கோபமடைந்தனர்.
அவர்கள் மோசே மீது கோபம் கொண்டதற்குக் காரணம், பார்வோன் அவர்களுடைய வேலைகளை அதிகப்படுத்தினான். அவர்களின் அடிமைத்தனத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால், விரைவில் நெருங்கி வரும் சுதந்திரத்தைப் புரிந்து கொள்ளவோ அல்லது பாராட்டவோ அவர்கள் முற்றிலும் தவறிவிட்டனர்.
ஆம், ஒரு தற்காலிக விலை இருந்தது: அதிகரித்த கஷ்டங்களும், பெரும் அழுத்தமும் அவர்களின் இறுதி விடுதலைக்கு மேடை அமைக்கும். பசியும் தாகமும் இருந்த காலங்கள் இருந்தன. தேவன் தங்களைக் கைவிட்டுவிட்டார் என்றும், தங்களைக் கவனிக்கவில்லை என்றும் அவர்கள் நினைத்த நேரங்களும் உண்டு. ஆனால் எல்லாவற்றின் மூலமும், தேவன் தம் மக்களுக்கு ஒரு வழியை உருவாக்கினார். நம்பி விசுவாசத்துடன் தொடர்ந்தவர்கள் இறுதியாக அவர்கள் விரும்பிய சுதந்திர இலக்கை - வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடைந்தனர்.
நமக்கும் அப்படியே நடக்கலாம். "இந்த இருண்ட இரவு என்பது விடியலுக்கு சில மணி நேரம் வரை தான்" என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. ஒருவேளை எதிரி தனது தோல்வியை நெருங்கிவிட்டதை உணர்ந்து, நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் விடுவிக்கபடுவதை அவன் விரும்பாததால், உங்களுக்கு எதிராகப் போராடுவான். உண்மையில் வியத்தகு உச்சக்கட்ட முடிவிற்கும், அவரது நாமத்திற்கு மகிமையை கொண்டுவரும் ஒரு நல்ல கதையை தேவன் விரும்பலாம். நல்ல கதை யாருக்குத்தான் பிடிக்காது?
“நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும். அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.”
யோபு 22:21-22
எதிரி தனது மோசமான ஆயுதங்களை உங்களுக்கு எதிராக வீசும்போது, நாம் ஆழமாக நிலைத்துநிற்க வேண்டும். தேவ மனுஷர் ஒருமுறை கூறியது போல், "பிசாசின் யுத்தத்திற்கு எதிராக நாம் யுத்தத்தை அறிவிக்க வேண்டும்" இதை எப்படி செய்வது?
பிதாவுடன் நீங்கள் எவ்வளவு அதிகமாகப் ஐக்கியம் கொள்கிரிகளோ, அவ்வளவு அதிகமாக அவருடைய சித்தம், அவருடைய சமாதானம் மற்றும் அவருடைய நோக்கம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும். மறுபக்கம் நீங்கள் இதைச் செய்யும்போது, பிசாசின் சூழ்ச்சிகளும் கன்னிகளும் அழிக்கப்படுகின்றன.
இரகசியம் என்னவென்றால், எந்த வகையான அடிமைத்தனத்திற்கும் நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள அனுமதிக்க கூடாது, மாறாக அவருடைய பிரசன்னத்தால் செல்வாக்கு பெறவேண்டும். இதைச் செய்யும்போது, அவர் வாக்களித்த நன்மை வெளிப்படும்.
வாக்குமூலம்
மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும், நான் பயப்படடேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர். அவர் என் வெளிச்சமும் என் ஜீவனுமானவர்.
Join our WhatsApp Channel
Most Read
● வார்த்தையின் உண்மைதன்மை● நீதியின் வஸ்திரம்
● மனிதர்களின் பாரம்பரியம்
● அவர்களை இளமையாகப் இருக்கும்போதே பிடிக்கவும்
● விசுவாசத்தின் வல்லமை
● உண்மையுள்ள சாட்சி
● கவலையுடன் காத்திருப்பு
கருத்துகள்