தினசரி மன்னா
நமக்கு பின்னால் எரியும் பாலங்கள்
Saturday, 5th of October 2024
0
0
259
Categories :
சீடத்துவம் (Discipleship)
விடுதலை (Deliverance)
“தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:”
1 கொரிந்தியர் 1:1-2
கிரேக்க பாஷையில், சபை என்ற சொல் "அழைக்கப்பட்ட ஜனங்கள்" என்பதைக் குறிக்கிறது. ஒவ்வொரு சபைக்கும் இரண்டு அஞ்சல் முகவரிகள் உள்ளன:
1. ஒரு புவியியல் முகவரி ("கொரிந்தில்") மற்றும்
2. ஒரு ஆவிக்குரிய முகவரி ("கிறிஸ்து இயேசுவில்").
சபை பரிசுத்தர்களால் ஆனது, அதாவது தேவனால் "சுத்திகரிகப்பட்ட" அல்லது "பிரித்தெடுக்கப்பட்ட" ஜனங்கள். ஒரு பரிசுத்தவான் தனது பரிசுத்த வாழ்வின் காரணமாக மனிதர்களால் மதிக்கப்பட்ட இறந்தவர் அல்ல. இல்லை, இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலம் தேவனின் விசேஷ வேலைக்காக பிரித்தெடுக்கப்பட்டு, வாழும் பரிசுத்தர்களுக்கு பவுல் எழுதினார்.
இன்று காலை எனக்கு வாட்ஸ்அப் செய்தி வந்தது.
நான் செய்தியை மேற்கோள் காட்டுகிறேன்: "அன்புள்ள போதகரே, என் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவது போல் உணர்கிறேன், காரியங்கள் எனக்குச் எதுவும் செயல்படவில்லை. தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்"
நல்ல பழைய நாட்களில் (அவர்கள் சொல்வது போல்), மேலும் வேதத்தின் படி, ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை உறுதியளித்தபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள், மேலும் திருமணத்தைத் தவிர வேறு எந்த உறவும் ஒழுக்கக்கேடானதாகக் கருதப்படுகிறது.
அதே வழியில், ஒரு கிறிஸ்தவர் முற்றிலும் இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்; அவர் அவருக்காகவும், அவருக்கென்றும் பிரித்தெடுக்கப்பட்டடுள்ளார். திரும்ப செல்லவது என்பது சாத்தியம் இல்லை.
ஒரு இராணுவ ஜெனரலின் கதை உள்ளது, அவர் தனது மிகப்பெரி, மிகவும் சக்திவாய்ந்த எதிரியை எதிர்கொள்ளவிருந்தார், அவர் தனது இராணுவத்தை விட அதிகமாக இருந்தார். அவர் தனது வீரர்களை படகுகளில் ஏற்றி, எதிரி பிரதேசத்திற்குச் சென்றார், வீரர்களையும் உபகரணங்களையும் இறக்கினார், பின்னர் அவர்களைக் கொண்டு சென்ற கப்பல்களை அழிக்க உத்தரவு பிறப்பித்தார். முதல் சண்டைக்கு முன், அவர் தனது ஆட்களை நோக்கி, "நமது படகுகள் தீப்பிடித்து எரிவதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதன் பொருள் நாம் வெல்லும் வரை இந்த கரையிலிருந்து உயிருடன் தப்பிக்க முடியாது! வெல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை அல்லது அழிந்து போவதுதான்!"
நற்ச்செய்தி என்னவென்றால், கிறிஸ்து இயேசுவில், நமக்கு ஏற்கனவே வெற்றி சிறந்திருகிறோம். நாம் முன்னேறி சென்றால் போதும்.
கடந்த வாரம் நான் இந்த சாட்சியத்தைப் பெற்றேன்:
ஹலோ பாஸ்டர் மைக்கேல்,
நான் சந்தீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நீங்கள் பிரசங்கம் செய்யும் போது, புகைபிடிப்பதன் மூலம் என் உடலை சரியாக கவனித்துக் கொள்ளாத என் பாவத்தை ஆண்டவர் எனக்கு உணர்த்தத் தொடங்கினார். (I கொரிந்தியர் 3:16-17) இருப்பினும், புகைபிடிப்பதை விட்டுவிடுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
மீண்டும், தேவன் வெளிப்படுத்துதல் 12:11 மூலம் என் சாட்சியைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், சத்துருவை வெல்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் என்னிடம் பேசினார். நான் புகைபிடிப்பதை விட்டுவிட்டேன் என்று என் நண்பர்களிடம் சொன்னால், நான் சொன்னதைத் திரும்பப் பெறுவது சற்று சங்கடமாக இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். திரும்பி வராத ஒரு புள்ளி போல் இருந்தது. (பாலங்களை எரித்தல்) நான் அதைச் செய்தேன், அது உதவியது.
ஜெபம்
1. பிதாவே, இயேசு கிறிஸ்து என்னை நிறைவேற்ற அழைத், நான் கண்டுபிடிக்க விரும்பும் நோக்கத்தை அடைய, உமது மிகுதியில் ஆர்வத்துடன் ஓட எனக்கு உதவும்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், யாரும் பார்க்காதபோதும் சரியானதைச் செய்ய கிறிஸ்துவின் தன்மை என்னில்வளர எனக்கு உதவி செய்யும்.
3. பிதாவே, இயேசுவின் நாமத்தில், தேவபக்தியற்ற எல்லாவற்றிலிருந்தும் என்னைப் பிரித்தெடுன் .
2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், யாரும் பார்க்காதபோதும் சரியானதைச் செய்ய கிறிஸ்துவின் தன்மை என்னில்வளர எனக்கு உதவி செய்யும்.
3. பிதாவே, இயேசுவின் நாமத்தில், தேவபக்தியற்ற எல்லாவற்றிலிருந்தும் என்னைப் பிரித்தெடுன் .
Join our WhatsApp Channel
Most Read
● நல்ல வெற்றி என்றால் என்ன?● கடனில் இருந்து வெளியேறவும்: Key # 2
● உங்கள் இலக்கை நாசமாக்காதீர்கள்!
● கோபத்தின் பிரச்சனை
● இன்றைய காலத்தில் இதைச் செய்யுங்கள்
● உங்கள் சொந்த கால்களைத் தாக்காதீர்கள்
● தூரத்தில் பின்தொடர்கிறது
கருத்துகள்