தினசரி மன்னா
0
0
134
காவலாளி
Sunday, 6th of October 2024
Categories :
தீர்க்கதரிசன வார்த்தை (Prophetic word)
“மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி, ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது. இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.”
எசேக்கியேல் 33:30-32
தேவன் எசேக்கியேலை இஸ்ரவேல் தேசத்தின் காவலாளியாக அழைத்தார். வரவிருக்கும் நீயாயதீர்ப்பைப் பற்றி ஜனங்களை எச்சரித்து, ஜனங்கள் தேவனிடம் திரும்பச் செய்ய வேண்டும். எசேக்கியேல் தேவன் செய்ய விரும்பியதை உண்மையாகச் செய்தாலும், பலர் அவரை வேறொரு நபராகவே பார்த்தார்கள். அவர்கள் அவருடைய செய்தியைக் கேட்டு, அதின்படி ஒன்றும் செய்யவில்லை. மாறாக, அவருடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை பொழுதுபோக்காகக் கருதினார்கள்.
இப்போழுதெல்லாம் ஒவ்வொரு வாரமும், நேரலையில் சபை ஆராதனைகள் நடக்கின்றன. இந்த சபைகளில் உள்ள அநேக போதகர்கள் மற்றும் தலைவர்கள் கர்த்தருடைய வார்த்தையை உண்மையாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.
பெரும்பாலான ஜனங்கள் பிரசங்கிக்கப்பட்ட அல்லது கற்பிக்கப்படும் தேவனின் வார்த்தையைக் கேட்டு, அது ஒரு சிறந்த பிரசங்கம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். சிலர் 'ஆமென்' என்று சத்தமிட்டு, போதகர் பேசும்போது ஊக்கமளிக்கும் கருத்துக்களைத் தட்டச்சு செய்து அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். பலர் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் கூட தங்கள் போதகர் சொல்வதைக் கேட்க அழைக்கிறார்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக, பிரங்கம் மிகவும் அருமையாக உள்ளது என்று சொல்லுவார்கள். இருப்பினும், அவர்கள் பிரேங்கிக்கபட்ட வார்த்தையுடன் எதுவும் செய்யவில்லை. இது அவர்களுக்கு இன்னொரு வகையான பொழுதுபோக்கு போன்றது.
“அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.”
எசேக்கியேல் 33:32
தினசரி அடிப்படையில் வேதத்தை வாசிக்கும் நமக்கு இது ஒரு தீர்க்கதரிசன எச்சரிக்கையாகும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி படிக்கலாம், ஆனால் நமக்குத் தெரிந்ததைத் தொடர்ந்து செய்யாவிட்டால், அது வீணானது என்று இந்த வசனம் நமக்குச் சொல்கிறது.
சில நாட்களுக்கு முன்பு, ஒரு பைக் ஓட்டுநர், இரவில் கடுமையான மூடுபனி காரணமாக, சாலையில் எண்ணெய் கசிவைக் காண முடியாமல், அதன் மீது ஓட்டிச் சென்றது பற்றிய செய்தியைப் படித்தேன். அவரது பைக் கான்கிரீட் வேலியில் மோதியது. அவர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார், ஆனால் அவர் எந்த காயமும் இல்லாமல் அதிசயமாக காப்பாற்றப்பட்டார். அவர் உடனடியாக எழுந்து, முன்னால் ஓடி, கைகளை அசைத்து, மற்ற பைக்கர்களை எண்ணெய் கசிவு பற்றி எச்சரித்தார்.
பலர் அவரைப் பார்த்தும், கேட்டும் காப்பாற்றப்பட்டனர், ஆனால் சிலர் அவரை வெறித்தனமாக கைகளை அசைத்து மற்றொரு பைத்தியக்காரன் என்று நினைத்து தங்கள் வாகனத்தை ஓட்டிச் சென்றனர். ஆவிக்குரிய ரீதியிலும் இது போன்ற நிலை உள்ளது. நாமும் பார்க்கிறோம், கேட்கிறோம், ஆனால் நாங்கள் செவிக்கொடுபதில்லை.
ஒவ்வொரு மனிதனும் நித்தியத்தில் அவருடன் இருக்க வேண்டும் என்று தேவனின் இருதயம் ஏங்குகிறது, எனவே அவர் நம்மை எச்சரிக்கவும் நம்மைத் திருத்தவும் ஜனங்களை எழுப்பியுள்ளார். நாம் அவர்களை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஜெபம்
1. பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது வார்த்தை என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. உமது வார்த்தையை எப்போதும் நடைமுறைப்படுத்த எனக்கு உதவும்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், என் வாழ்வின் அழைப்பை நிறைவேற்ற எனக்கு உதவ என் வாழ்க்கையில் நீர் வைத்த வழிகாட்டிகளுக்கு நன்றி கூறுகிறேன். அவற்றை ஒருபோதும் பொருட்படுத்தாமல் இருக்க எனக்கு உதவும்.
3. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, இந்த நாளிலும் வரும் நாட்களிலும் நான் சந்திக்கும் அனைவரிடமும் உமது உண்மையை அன்புடன் பேச எனக்கு அருளும். ஆமென்!
2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், என் வாழ்வின் அழைப்பை நிறைவேற்ற எனக்கு உதவ என் வாழ்க்கையில் நீர் வைத்த வழிகாட்டிகளுக்கு நன்றி கூறுகிறேன். அவற்றை ஒருபோதும் பொருட்படுத்தாமல் இருக்க எனக்கு உதவும்.
3. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, இந்த நாளிலும் வரும் நாட்களிலும் நான் சந்திக்கும் அனைவரிடமும் உமது உண்மையை அன்புடன் பேச எனக்கு அருளும். ஆமென்!
Join our WhatsApp Channel
![](https://ddll2cr2psadw.cloudfront.net/5ca752f2-0876-4b2b-a3b8-e5b9e30e7f88/ministry/images/whatsappImg.png)
Most Read
● குற்றமில்லா வாழ்க்கை வாழ்வது● வல்லமை வாய்ந்த முப்புரிநூல்
● உள்ளான அறை
● சர்ப்பங்களின் தன்மைகளை நிறுத்துதல்
● கொடுப்பதன் கிருபை - 3
● யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் - 1
● விசுவாசத்தில் அல்லது பயத்தில்
கருத்துகள்