தினசரி மன்னா
ஆராதனைக்கான எரிபொருள்
Tuesday, 8th of October 2024
0
0
83
Categories :
தேவனின் வார்த்தை ( Word of God )
“நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.”
வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18
“விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.”
நீதிமொழிகள் 26:20
என்னுடைய ஜெப நேரத்தில், நான் கர்த்தரை ஆராதிப்பதிலும், அவரை நேசிப்பதிலும் நேரத்தை செலவிட பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டிருக்கிறேன். பெரும்பாலும், நமது ஆராதனை நேரங்களை ஒரு கருத்தரங்கு, ஒரு ஞாயிறு ஆராதனை அல்லது ஒரு அனுபவத்திற்கு எளிதில் மட்டுப்படுத்தலாம். கருத்தரங்கு முடிந்ததும், ஆராதனை முடிந்ததும், நெருப்பும் ஆர்வமும் மங்கிவிடும்.
நெருப்பை எரிக்கத் தவறியதால் இது பெரும்பாலும் நிகழ்கிறது என்று நான் முழுமையாக நம்புகிறேன். நமது ஆராதனை எளிதில் அணைந்து போனால் அதற்கு எரிபொருள் இல்லாததே காரணம்.
ஆராதனைக்கு எரிபொருள் என்ன?
அப்போஸ்தலனாகிய யோவானின் ஆராதனையை உன்னிப்பாகப் பார்த்தால், பற்றவைத்தது எது என்பதை, அந்த ரகசியம் நமக்குப் புலப்படும். நமது ஆராதனைக்கு எரிபொருளே தேவனைக் குறித்த வெளிப்பாடே! இது சமீபத்திய இசைக்குழு, புதிய அனுபவம் அல்லது கருத்தரங்கு, ஒரு குறிப்பிட்ட ஆராதனை வீரர் அல்லது இசை நிகழ்ச்சி, சிறந்த பிரசங்கியார் என்பது அல்ல! இவை அனைத்தும் நல்லவை, நான் நிச்சயமாக அவர்களுக்கு எதிரானவன் அல்ல. இருப்பினும், தேவனை உண்மையாகக் காணும்போதுதான் உண்மையான ஆராதனை வரும்!
தேவனை உண்மையாகவே யார் என்பதை அறிந்து ஆராதித்தவர்களில் சிலர். மோசே விழுந்து ஆராதித்தார். (யாத்திராகமம் 34:5-8). யோசுவா விழுந்து ஆராதித்தார். (யோசுவா 5:13-15). எல்லா ஜனங்களும் விழுந்து ஆராதிபார்கள் (பிலிப்பியர் 2:10-11). நாம் தேவனை ஆராதிப்பதில் பதிலளிக்கவில்லை என்றால், ஒரு காரணம் இருக்கிறது; அவர் உண்மையில் யார் என்பதை அரிய நீங்கள் அவரைப் பார்க்கவில்லை. தேவனை காண்பது என்பது அவரை ஆராதிப்பதாகும் .
ஆராதனைவீரரும் எழுத்தாளருமான மாட் ரெட்மேன் கூறியது போல்: 'எனது ஆராதனை அடிக்கடி வறண்டு போனால், தேவனின் வெளிப்பாட்டின் மழையில் நான் என்னை நனைக்கவில்லை.' என்று அர்த்தம்.
“கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.”
கொலோசெயர் 3:16-17
நாம் தேவனுடைய வார்த்தைக்கு இடமளித்து, அது நம் அன்றாட வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கும்போது, அது தேவன் யார் என்பதை வெளிப்படுத்தும். இது, நன்றியுள்ள இருதயத்துடன், சில சமயங்களில் ஆவியானவரால் தானாகவே நமக்குக் கொடுக்கப்படும் தீர்க்கதரிசனப் பாடல்களுடனும் அவரை ஆராதிக்க நம்மை வழிநடத்தும்.
ஜெபம்
பரலோக பிதாவே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், ஏனென்றால் நீரே என் கர்த்தர். என் துதிக்கும் ஆராதனைக்கும் உரியவர். நீ யார் என்பதைஅறிந்து உன்னை ஆராதிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்! (அவரை ஆராதிபதில் சிறிது நேரம் செலவிடுங்கள்)
Join our WhatsApp Channel
Most Read
● பொருளாதார முன்னேற்றம்● உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 1
● உங்களை வழிநடத்துவது யார்?
● தெய்வீக ஒழுக்கத்தின் தன்மை-2
● விசுவாசத்தில் அல்லது பயத்தில்
● நாள் 19: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● இன்று தேவனால் எனக்கு வழங்க முடியுமா?
கருத்துகள்