தினசரி மன்னா
0
0
335
மூன்று மண்டலங்கள்
Saturday, 12th of October 2024
Categories :
இயேசுவின் பெயர்(Name of Jesus)
நரகம் (Hell)
பின்வரும் வசனங்களை மிகவும் கவனமாகப் வாசியுங்கள்:
“புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.”
வெளிப்படுத்தின விசேஷம் 5:2-3
“இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,”
பிலிப்பியர் 2:10
மேற்கண்ட வேதம் வாசம் நமக்கு மூன்று மண்டலங்களை வெளிப்படுத்துகிறது:
- பரலோகம்
- பூமி
- பூமியின் கீழ்
பரலோகத்தில் உள்ள காரியங்கள் - தேவனின் சிம்மாசனம் அமைந்துள்ள ஆவிக்குரிய மண்டலத்தைக் குறிக்கிறது, இது "மூன்றாவது வானம்" என்றும் அழைக்கப்படுகிறது (2 கொரிந்தியர் 12:2). இது தேவன், தேவதூதர்கள் மற்றும் பரிசுத்தவான்கள் இருக்குமிடம்.
பூமியில் உள்ள காரியங்கள் - மனிதர்கள், விலங்குகள் போன்றவை அடங்கும்.
பூமியின் கீழ் உள்ள விஷயங்கள் (பாதாள உலகம் அல்லது நரகம்) - பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டட்ருக்கும் இடம்.
(2 பேதுரு 2:4-ஐ வாசியுங்கள்)
புதிய ஏற்பாட்டின் படி, இங்கு பிரிந்த ஆண் மற்றும் பெண்களின் அநீதியான ஆத்த்துமாக்கள் மற்றும் ஆவிகள் உள்ளன.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, தேவன் (பிதா) அவரைத் தமது வலது பாரிசத்தில் கனத்திற்குரிய நிலைக்கு உயர்த்தி, எல்லாப் நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குக் தந்தருளினார் என்று வேதம் கூறுகிறது (எபேசியர் 1:20; பிலிப்பியர் 2:9-11 வாசியுங்கள்)
ஆதலால் தேவன் (பிதா) எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் (பரலோகம்) பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய (நரகம்) முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
தேவன் கர்த்தராகிய இயேசுவை பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த நிலையில், அவருடைய சொந்த வலது பாரிசத்தில் அமரவைத்தார், மேலும் அவரை எல்லாவற்றின் மீதும் தலைவராக்கினார் (எபேசியர் 1:19-22 வாசியுங்கள்).
அதாவது இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது மிகவும் வல்லமைவாய்ந்தது. நாம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது, மூன்று பகுதிகளிலும் அவருடைய அதிகாரத்துடன் ஜெபிக்கிறோம். உங்களுக்கும் எனக்கும் வேறு பெயர் தேவையில்லை - இயேசுவின் பெயரைத் தவிர.
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில், நான் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாக இருக்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் எங்கு சென்றாலும் தேவனின் தயவு என்னை ஒரு கேடயமாக சூழ்ந்துள்ளது. என் வாழ்க்கை இனி ஒருபோதும் இருந்தவன்னமாய் இருப்பதில்லை.
Join our WhatsApp Channel

Most Read
● நாள் 10: 40 நாட்கள் உபவாச ஜெபம்● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● சுய மகிமை என்னும் கண்ணி வலை
● விடாமுயற்சியின் வல்லமை
● நிலவும் ஒழுக்கக்கேடுகளுக்கு மத்தியில் உறுதியுடன் இருப்பது
● நாள் 13: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
● தெளிந்த புத்தி ஒரு ஈவு
கருத்துகள்