தினசரி மன்னா
நேரத்தியான குடும்ப நேரம்
Sunday, 13th of October 2024
0
0
55
Categories :
விசுவாசம்(Relationship)
“பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.”யோவான் 13:1
நம் குடும்ப அங்கத்தினர்களிடத்தில் கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவிப்போம். நாளை, அத்தகைய தருணங்களின் பாக்கியம் நமக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.
ஒரு நாள், ஒரு பிரபலமான போதகர் தனது ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தைத் ஆயத்தப்படுத்துவதில் மும்முரமாக இருந்தார். அவரது சிறிய மகள் அமைதியாக பின்னால் இருந்து அவரைப் "அப்பா" என்று அணைத்துக் கொண்டாள். போதகர் அவளை மெதுவாகக் கடிந்துகொண்டு நான் கொஞ்சம் அளுவலாய் இருக்கிறேன் என்று சொன்னார்.
இந்த நிலையில், போதாகரின் மனைவி, சிறுவயதில் அவர் மீது பொழிந்த அன்பும் பாசமும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இருக்காது என்பதை மெதுவாக நினைவுபடுத்தினார். அந்த தருணத்தை அனுபவிக்கும்படி அவள் அவருக்கு அறிவுரை கூறினார்கள். அந்தக் கூற்றின் உண்மையையும், தீவிரத்தையும் உணர்ந்த போதாகர், உடனே தன் வேலையை ஒதுக்கிவிட்டு, தன் சிறிய மகளுடன் நேரத்தைக் கழித்தார்.
பல நேரங்களில் "பிஸி" என்பது "நன்மை" என்பதற்கு சமமானதல்ல என்பதை நான் எப்போதும் எனக்கு நினைவூட்டுவேன். வெறும் செயல்பாடு சாதனைக்கு சமமாகாது. வெறும் செயல்பாடு பலனைத் தராது.
உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் செலவிடும் தருணங்கள் விலைமதிப்பற்ற தருணங்கள். அவை வீணாகக் கூடாது. யாருக்குத் தெரியும், நாளை நாம் அவற்றைப் பெறாமல் போகலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் (உங்கள் மனைவி, குழந்தைகள், உங்கள் பெற்றோர்) இருக்கும்போது, சமூக ஊடகங்களில் அறிவிப்புகளைச் சரிபார்ப்பதில் மும்முரமாக இருக்க வேண்டாம். அவை வேறு சில நேரத்திற்கு விட்டு விடுங்கள். வலுவான குடும்பங்களின் சிறப்பியல்பு அவர்கள் ஒன்றாக செலவிடும் தரமான நேரம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
கர்த்தராகிய இயேசு சிலுவைக்குச் செல்வதற்கு முன்பு அவருடைய அப்போஸ்தலர்களுடன் நேரத்தை செலவிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்தார். நம் குடும்ப உறுப்பினர்களுக்கு தரமான நேரத்தை ஒதுக்கி, அத்தகைய தருணங்களை ஒன்றாக அனுபவிப்போம்.
ஜெபம்
பரலோகத் தந்தையே, என் குடும்ப உறுப்பினர்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். அவர்களை உமது கண்மணியாக வைத்துக் கொள்ளும். எனது குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட எனக்கு கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● பரிசுத்தப்படுத்துதல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது● இயற்கைக்கு அப்பாற்பட்டதை வளர்ப்பது
● பந்தயத்தில் ஓடுவதற்கான உத்திகள்
● அக்கிரமத்திற்கு முழுமையான தீர்வு
● நீங்கள் எளிதில் காயப்படுகிறீர்களா?
● யூதாஸின் வீழ்ச்சியிலிருந்து மூன்று பாடங்கள்
● நாள் 05:40 நாட்கள் உபவாச ஜெபம்
கருத்துகள்