“ஆனாலும் செருபாபேலே, நீ திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன் கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” ஆகாய் 2:4
எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயம் நீண்ட காலமாக பாழடைந்து கிடந்தது. யூதர்கள் அதை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை முன்னரே தொடங்கினர், ஆனால் அவர்கள் மிகப்பெரிய சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டனர், அவர்கள் அடுத்த 14 ஆண்டுகளுக்கு திட்டத்தை நிறுத்திவிட்டு கைவிட்டனர்.
இதை நினைவில் கொள்ளுங்கள்; எப்பொழுதெல்லாம் ஒரு நல்ல காரியத்தைச் செய்யத் தொடங்குகிறீர்களோ, அப்போதெல்லாம் சவால்களும் விமர்சனங்களும் இருக்கும். இந்தி மொழியில் ஒரு பழமொழி உள்ளது: "கனிகள் நிறைந்த மரங்களில் தான் எப்போதும் கற்கள் வீசப்படும்."
எனவே இந்தப் பின்னணியில் தான் தேவன் ஆகாய்யை அவர்களுடன் பேசவும், அவர்கள் செய்யாத மிக முக்கியமான, உற்சாகமான வேலைக்காக அவர்களைத் திரட்டவும் அனுப்பினார்! தீர்க்கதரிசன வார்த்தை, ரேமா வார்த்தை (அந்த சூழ்நிலைக்கான தேவனுடைய வார்த்தை), அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை சமாளிக்க அவர்களுக்கு உதவியது. இதே ரேமா வார்த்தை ஒவ்வொரு சவாலையும் சமாளிக்க உதவும்.
கர்த்தராகிய இயேசு வனாந்தரத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அவர் ஒரு "ரேமா" வார்த்தையைப் பேசி ஒவ்வொரு சோதனையையும் எதிர்த்தார். மத்தேயு 4:4ல், "'மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்டுகிற [பேசப்படும் (Rhema)] ஓவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று எழுதப்பட்டிருக்கிறது" என்று அவர் கூறினார். "இயேசு சூழ்நிலைக்கான தேவையான எழுதப்பட்ட வார்த்தையைப் பேசினார். எனவே ஒரு ரேமா வார்த்தை தேவனின் பேசப்படும் வார்த்தையாக இருக்கலாம்.
எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை நமக்கு அடித்தளமாகத் தேவை, ஆனால் வழிநடத்துதலுக்காகப் பேசும் வார்த்தையும் (Rhema) தேவை. எங்களிடம் எழுதப்பட்ட வார்த்தை உள்ளது, அதில் நிற்க்கும்படியாய். ஆனால் நமக்கு பேசப்படும் வார்த்தையான ரேமா உள்ளது, எனவே வார்த்தையும் அவசியம் ஆகவே எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரியும்.
ஆனால் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமிட்டப்பிறகு சிலர் மிகவும் சோர்வடைந்தனர். எஸ்ரா 3:12, "... பல ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் மற்றும் பிதாக்களின் வீடுகளின் தலைவர்கள், முதல் ஆலயத்தை பார்த்த முதியவர்கள், இந்த ஆலயத்தின் அஸ்திவாரம் தங்கள் கண்களுக்கு முன்பாகப் போடப்பட்டபோது உரத்த குரலில் அழுதனர்."
புதிய ஆலயம் கட்டி முடிக்க இன்னும் வெகு தொலைவில் இருந்தது, ஆனால் சிலர், தேவன் என்ன செய்கிறார் என்று புகழ்ந்து கொண்டாடுவதற்குப் பதிலாக, அழுதுகொண்டே, சோர்வு அவர்களைத் தாக்க அனுமதித்தனர்!
தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக சத்துரு பயன்படுத்தும் மிகவும் வல்லமைவாய்ந்த ஆயுதங்களில் ஒன்று ஊக்கமின்மையாகும். உங்களுக்கு தேவையானது ஆராதனையும் தேவனுடைய வார்த்தையுமே. நீங்கள் இதைச் செய்யும்போது, தேவன் உங்களோடு பேசத் தொடங்குவார். தேவன் பேசத் தொடங்கும் போது, அந்த வார்த்தையை (ரேமா) உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இது சத்துருவின் ஒவ்வொரு தடையையும் கடக்க உதவும்.
ஜெபம்
இயேசுவின் நாமத்தில், நான் பலமாகவும் தைரியமாகவும் இருப்பேன்! நான் போகும்மிடமெல்லாம் என் தேவனாகிய கர்த்தர் என்னுடனே இருக்கிறார், நான் பயப்படேன்!
Join our WhatsApp Channel
Most Read
● சுய ஏமாற்றுதல் என்றால் என்ன? - I● சரியான நோக்கத்தை பின்தொடருங்கள்
● பலிபீடத்தில் அக்கினியை எப்படி பெறுவது
● சமாதானத்திற்கான தரிசனம்
● தேவதூதர்கள் சுற்றிலும் பாளையமிறங்கியிருக்றார்கள்.
● இயேசு உண்மையில் பட்டயத்தை கொண்டுவர வந்தாரா?
● உங்கள் விதியை மாற்றவும்
கருத்துகள்