தினசரி மன்னா
தெளிவான உபதேசத்தின் முக்கியத்துவம்
Saturday, 26th of October 2024
0
0
180
Categories :
கோட்பாடு ( Doctrine)
தேவனின் வார்த்தை ( Word of God )
அப்போஸ்தலனாகிய பவுல் இளம் தீமோத்தேயுவுக்குக் கட்டளையிட்டது போல், “உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.”
(1 தீமோத்தேயு 4:16).
இன்று பலர் பொய்யான, ஏமாற்றும் போதனைகளுக்கு இரையாகி இருப்பதற்குக் காரணம், அவர்கள் தங்கள் உபதேசம் தெளிவாக கொண்டிருக்காததுதான்.
உங்கள் உபதேசத்தை நீங்கள் தெளிவாக வைத்திருந்தால், வேதம் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் தவறான போதனைகளை மறுத்து உங்கள் விசுவாசத்தை பாதுகாக்க முடியும். இதை யூதா கிறிஸ்தவர்களை “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.” (யூதா 1:3).
கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் வேதத்தின் உபதேசங்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்களை உங்களுக்குத் தர என்னை அனுமதியுங்கள்.
1. ஏனென்றால் நாம் தேவனை நேசிக்கிறோம்
நீங்கள் ஒருவரை நேசிப்பீர்களானால், அவர்களைப் பற்றி உங்களால் முடிந்தவரை தெரிந்து கொள்ள ஆசைபடுவீர்கள் - அவர்களின் விருப்பு வெறுப்புகள். அதேபோல், நாம் தேவனை உண்மையாக நேசித்தால், அவரைப் பற்றி - அவரது இயல்பு, அவரது குணம், அவரது படைப்புகள் போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பசி நமக்குள் இருக்கும். எளிமையான வார்த்தைகளில் பேசுவது, இது உபதேசத்தை படிப்பது என்று அழைக்கப்படுகிறது.
ஒரு வருடத்தில் வேதத்தை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை படிப்பதை உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். “உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம்”
(சங்கீதம் 119:160) என்று தாவீது கூறியதைக் கவனமாகப் பாருங்கள். எளிமையான வார்த்தைகளில், நீங்கள் வேதத்தை அட்டையிலிருந்து அட்டை வரை படிக்கும்போது, வேதத்தின் தேவனையும, அவர் என்ன சொல்கிறார் என்பதையும், அவரது முழுப் படத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
2. ஏனென்றால் நீங்கள் நம்புவது உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை வடிவமைக்கும்
தேவனை பற்றி நீங்கள் நினைக்கும் விதம் தேவனுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதத்தை பாதிக்கும். நான் என்ன சொல்கிறேன்? உதாரணமாக: நல்லது நடக்கும் போது மட்டுமே தேவன் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால், விஷயங்கள் எதிர்மறையாக நடக்கும் காலங்களில் நீங்கள் அவரை நம்ப மாட்டீர்கள். உபதேசத்தை படிப்பது என்பது தேவனை பற்றிய சத்தியத்தை கண்டுபிடிப்பதாகும். நாம் அதைச் செய்ய வேண்டும், இதன் மூலம் நாம் தேவனுடன் சரியாகப் ஐக்கியம்கொள்ள முடியும், அவர் யார் என்று நாம் கற்பனை செய்யும் விதத்தில் அல்ல.
ஜெபம்
ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே, இயேசுவின் நாமத்தில் உம்மை வரவேற்கிறேன். எல்லா சத்தியத்திற்குள்ளும் எங்களை வழிநடத்துபவர் நீரே. எனக்கு வார்த்தையைக் கற்றுக் தாரும். உமது வார்த்தையிலிருந்து எனக்கு அருமையான சத்தியங்களை காட்டும். நான் இயேசுவை அறிய விரும்புகிறேன். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தேவனுக்காக மற்றும் தேவனுக்கும்● உங்கள் இரட்சிப்பின் நாளைக் கொண்டாடுங்கள்
● எண்ணங்களின் போக்குவரத்தை வழிநடத்துதல்
● குற்றமில்லா வாழ்க்கை வாழ்வது
● கொடுப்பதன் கிருபை - 2
● அன்பு - வெற்றியின் உத்தி - 1
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
கருத்துகள்