தினசரி மன்னா
தெய்வீக ஒழுக்கத்தின் தன்மை-2
Thursday, 31st of October 2024
0
0
87
Categories :
ஒழுக்கம் (Discipline)
சீடத்துவம் (Discipleship)
“பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.” 1 கொரிந்தியர் 9:25
நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவுக்கு அடிபணிந்து இருக்க, நம்மை ஆளாமல் இருக்க நம் சரிரத்தை பயிற்றுவிக்க வேண்டும். பண்டைய கிரேக்கத்தில், பயிற்சிக்கான சொல் கம்னோஸ். இந்த வார்த்தையின் அர்த்தம் "நிர்வாணம்". உண்மையில், இந்த கிரேக்க வார்த்தையிலிருந்துதான் நாம் "ஜிம்னாசியம்" என்ற ஆங்கில வார்த்தையைப் பெற்றோம்.
பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில், தங்களுக்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றிலிருந்தும் தங்களை விடுவிப்பதன் மூலம், அவர்கள் தங்கள் முழுத் திறனைப் பயிற்றுவிக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். எனவே, அவர்கள் நிர்வாணமாக உடற்பயிற்சி செய்வார்கள் அல்லது நிர்வாணமாக பயிற்சி செய்வார்கள். நான் நிச்சயமாக இதை எந்த வடிவத்திலும் பரிந்துரைக்கவில்லை என்றாலும், கொள்கை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவர்களாகிய நாமும் தேவபக்தியை நோக்கி நம்மைப் பயிற்சி செய்வதற்காக, மாம்சத்தின் காரியங்களிலிருந்து நம்மைக் களைந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நல்ல சரிர வடிவம் பெற கடின உழைப்பு தேவை, மேலும் நல்ல சரிர நிலையை பராமரிக்க அர்ப்பணிப்பு தேவை. அதுபோலவே, ஒரு நல்ல ஆவிக்குரிய நிலையைப் பராமரிக்க கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை.
பெரிய ஆசைகள் மற்றும் கனவுகள் இருப்பது ஒரு தொடக்க புள்ளியாகும், ஆனால் எல்லாவற்றின் முடிவில் நல்ல ஆவிக்குரிய வடிவத்தை பெற விரும்பும் எவரும் ஆவிக்குரிய ரீதியில் பயிற்சி செய்ய விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். அதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு சொன்னார்,
“தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு,”
[உங்களை ஆவிக்குரிய ரீதியில் பொருத்தமாக வைத்திருத்தல்] 1 தீமோத்தேயு 4:7-8 தெய்வீகத்தை நோக்கி நம்மைப் பயிற்றுவிப்பது நம்மை ஆவிக்குரிய ரீதியில் பொருத்தமாக வைத்திருக்கும்.
“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;”
எபிரெயர் 12:1
மாம்சத்தின் கிரியைகளை நீக்கிவிடுவதன் மூலம், தெய்வபக்தியில் நம்மை நாமே சிறப்பாக ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும். பலர் சுலபமான வழியைத் தேடிக்கொண்டிருக்கையில், உங்கள் விசுவாசத்தைப் பிரயோகிக்கவும், கர்த்தரில் பலப்படவும் இந்தப் பருவத்தை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்!
ஜெபம்
நான் கர்த்தருக்குள் மேலும் பலமடைந்து வருகிறேன் என்று அறிக்கைச்செய்கிறேன். என் விசுவாசத்தை பயன்படுத்துவதற்கும் ஆவிக்குரிய ரீதியில் என்னை மேம்படுத்துவதற்கும் என் வாழ்க்கையில் வரும் அனைத்தையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த நான் தேர்வு செய்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● துளிர்விட்ட கோல்● அதிகாரப் பரிமாற்றத்திற்கான நேரம் இது
● அசாதாரண ஆவிகள்
● நாள் 17: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● அந்த காரியங்களை செயல்படுத்துங்கள்
● தலைப்பு: பாவத்தின் தொழுநோயைக் கையாளுதல்
● மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்கள்
கருத்துகள்