தினசரி மன்னா
தெய்வீக ஒழுக்கம் - 1
Saturday, 2nd of November 2024
0
0
44
Categories :
தெய்வீக ஒழுக்கம் (Divine Order)
வேதம் 1 கொரிந்தியர் 14:33 ல் கூறுகிறது, “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்;”
குழப்பம் அல்லது கலகம் என்றால் என்ன? குழப்பம் என்பது தெய்வீக ஒழுங்கு இல்லை என்பதை தவிர வேறில்லை. இன்று அநேக வீடுகள், பல குடும்பங்கள், நிறுவனங்கள், வணிகங்கள், சபைகள் மற்றும் ஜெபக் குழுக்கள் குழப்பம், சச்சரவு மற்றும் பிரிவினையின் ஆவியால் தாக்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய குழப்பத்திற்கு என்ன காரணம்?
ஒரே காரணம் தெய்வீக ஒழுங்கு இல்லாததுதான். சுற்றிலும், மிகுந்த மன அழுத்தம் மற்றும் விரக்தியுடன் இருப்பவர்களை நீங்கள் பார்க்கிறீர்கள். மீண்டும், காரணம் அவர்களின் வாழ்க்கையில் தெய்வீக ஒழுங்கு இல்லாதே.
“அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.” ஏசாயா 38:1
எசேக்கியா ராஜாவிடம் அவனுடைய குடும்பம் ஒழுங்காக இல்லை என்றும், அவன் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்றும் தேவன் சொன்னார். தேவ ஜனங்களே, நம் வாழ்க்கை தெய்வீக முறைப்படி (தேவனின் விருப்பம்) அமைக்கப்படாதபோது, நாம் எங்கும் மரணத்தையும் தோல்வியையும் மட்டுமே காண்போம். என்னை விளக்க அனுமதியுங்கள்.
அந்த நாட்களில், சீஷர்களின் எண்ணிக்கை பெருகியபோது, கிரேக்கரானவர்கள் எபிரேயர்களுக்கு எதிராக புகார் கொடுத்தனர், [யூதர்கள் தான் ஆனால் கிரேக்க மொழி பேசும் யூதர்கள்] ஏனெனில் அவர்களின் விதவைகள் தினசரி விநியோகத்தில் புறக்கணிக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 6:1)
ஆதித்திருசபையில், தினசரி உணவு வழங்குவதில் ஒரு சிக்கல் எழுந்தது, இது பெரும் குழப்பத்தையும் சச்சரவையும் ஏற்படுத்தியது. தேவ ஆவியால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலர்கள் வேலையை மேற்பார்வையிட ஏழு பேரை நியமித்தனர், மேலும் அவர்கள் தொடர்ந்து ஜெபத்திலும் வார்த்தையிலும் தங்களை அர்ப்பணித்தனர்.
அப்போஸ்தலர் 6:7 சொல்கிறது, “தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.”
நிச்சயமாக, ஏருசலேமில் உள்ள சபையின் வளர்ச்சியில் விளைந்த வேறு பல காரணிகளும் இருந்தன. ஆனால் மறுக்கமுடியாதபடி, காரியங்களை ஒழுங்குபடுத்துவது சபையின் வளர்ச்சியில் விளைந்தது.
உங்கள் முன்னுரிமைகளில் வேலை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வீக ஒழுங்கு பாயும்.
ஜெபம்
பிதாவே, சரியான நேரத்தில் சரியான காரியங்களைச் செய்ய உமது தெய்வீக ஞானத்தையும் புரிதலையும் எனக்குக் தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Sent from Dalton’s iPhone
ஜெபம்
பிதாவே, சரியான நேரத்தில் சரியான காரியங்களைச் செய்ய உமது தெய்வீக ஞானத்தையும் புரிதலையும் எனக்குக் தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● அந்நிய பாஷைகளில் பேசி முன்னேறுங்கள்● நாள் 19: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● அன்பு - வெற்றியின் உத்தி -2
● மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்கள்
● அகாப்பே அன்பில் எப்படி வளருவது
● கனத்துக்குரிய வாழ்க்கையை வாழுங்கள்
● நித்தியத்திற்காக ஏக்கங்கள், தற்காலிகமானது அல்ல
கருத்துகள்