தினசரி மன்னா
இயேசுவைப் பார்க்க ஆசை
Friday, 8th of November 2024
0
0
81
Categories :
ஒழுக்கம் (Discipline)
சீடத்துவம் (Discipleship)
வேதத்தில் உள்ள பலர் கர்த்தரைக் காண ஏங்கினார்கள். யோவான் 12ல், பஸ்காவைக் கொண்டாட கலிலேயாவுக்கு வந்த சில கிரேக்கர்களைப் பற்றி வாசிக்கிறோம். இத்தகைய சிறப்பான அற்புதங்களை நிகழ்த்திய ஆண்டவர் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட அவர்கள், அவரை நேரில் பார்க்க விரும்பினர். இதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவரான பிலிப்பிடம் வந்து, "ஐயா, இயேசுவைப் காண விரும்புகிறோம் என்று அவனை கேட்டுக்கொண்டார்கள். (யோவான் 12:21).
இயேசுவைப் பார்ப்பது ஒரு 'ஆசையுடன்' தொடங்குகிறது. இந்த ஆசை பரிசுத்த ஆவியானவராலேயே நம்மில் பிறக்கிறது. தேவ மனிதர்கள் பலரும் அவரை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையுடன் நீண்ட நேரம் ஜெபித்திருக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றம் அடையவில்லை என்பது நற்ச்செய்தி. அவர்களின் வாழ்க்கை ஆயிரக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக மாறியது.
“அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.”
லூக்கா 19:1-4
இயேசுவைப் பார்ப்பது எளிதானது அல்ல, உங்கள் பங்கில் சில ஒழுங்குமுறைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சக்கேயுவைப் பொறுத்தவரை, அவர் கூட்டத்திற்கு முன்னால் ஓடி ஒரு காட்டத்தி மரத்தின்மேல் ஏறினார். அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அது நிச்சயமாக எளிதானது அல்ல.
தாவிது ராஜா, பின்வரும் வசனங்களில், தேவனை தேடுவதற்கான ஒரு உத்தியை (ஒரு திட்டம்) கோடிட்டுக் காட்டுகிறார். “அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.”
சங்கீதம் 55:17
கிரேக்கர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, அவர் மிகவும் ஆழமான ஒன்றைச் சொன்னார். பலருக்கு அது புரியவில்லை. “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.” என்று இயேசு சொன்னார். (யோவான் 12:24)
இது இயேசுவைப் பார்ப்பதற்கு எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? இயேசுவின் அர்த்தம் என்னவென்றால், ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையில் சிலுவையை சுமந்து தனது ஆசைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு மரிக்கவில்லை என்றால், அந்த நபர் உண்மையாகப் அவரை பார்க்க முடியாது.
ஜெபமும் ஆராதனையின் போது உங்கள் உள்ளன மனக் கண்களால் இயேசுவைப் பார்ப்பது உங்களை உண்மையிலேயே மாற்றும் அதுமட்டும்மல்லாமல் ஆயிரக்கணக்கானோருக்கு உங்களை ஆசீர்வாதமாக மாற்றும்.
ஜெபம்
1. தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே, கர்த்தராகிய இயேசுவை நேருக்கு நேர் காண வேண்டும் என்ற ஆசை என்னுள் பிறப்பியும்.
2. பிதாவே, ஒழுக்கமான ஜெப வாழ்க்கையைப் பெற உமது கிருபையையும் வல்லமையும் எனக்குக் தாரும். இயேசுவின் நாமத்தில்.
Join our WhatsApp Channel
Most Read
● என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே● உங்கள் பிரச்சனைகலும் உங்கள் மனப்பான்மையும்
● சர்வ வல்ல தேவனுடன் ஒரு சந்திப்பு
● பயத்தின் ஆவி
● இயேசுவின் கிரியைகளிலும் பெரிய கிரியைகளையும் செய்வது என்றால் என்ன?
● குற்றத்தின் பொறியில் இருந்து விடுபடுதல்
● விசுவாசம்: கர்த்தரைப் பிரியப்படுத்த ஒரு உறுதியான பாதை
கருத்துகள்