தினசரி மன்னா
நாள் 02 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
Saturday, 23rd of November 2024
0
0
97
Categories :
உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை ( Fasting & Prayer)
சாத்தானின் வரம்புகளை உடைத்தெரிதல்
“அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.”யாத்திராகமம் 8:28
இஸ்ரவேலர்கள் பார்வோனால் எப்படி அடிமைகளாக நடத்தப்பட்டார்கள் என்பதை இன்றைய வேதம் வெளிப்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, பல கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் வைக்கப்பட்டுள்ள சாத்தானின் வரம்புகளின் செயல்பாட்டைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
சாத்தானின் வரம்புகள் என்ன?
சாத்தானின் வரம்பு என்பது ஒரு நபர், இடம் அல்லது பொருளின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒருவருக்கு நன்மைகள் வராமல் தடுக்கலாம்.
இந்த பிசாசின் செயல்பாடு ஒரு நபரின் முன்னேற்றத்தை நிறுத்தலாம் அல்லது மெதுவாக்கலாம்.
பிசாசின் சூழ்ச்சிகளை நாம் அறியாமல் இருக்கக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். (2 கொரிந்தியர் 2:11) மேலும், பிசாசின் கிரியைகள் அழிக்கப்படுவதற்காக கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டார் (1 யோவான் 3:8). எனவே, பிசாசின் கிரியைகளை பற்றி நாம் பேசும் போதெல்லாம், அது பிசாசை பெரிதாக்குவதற்கு அல்ல, மாறாக அவற்றைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு அறிவூட்டி அவைகளை அழிக்க வேண்டும் என்பதே.
உங்கள் வேலை, சரிரசுகம், குடும்பம் அல்லது வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் எந்தவொரு சாத்தானின் வரம்புகளும் இன்று இயேசுவின் நாமத்தினாலே அழிக்கப்படும்.
3 முக்கியமான சாத்தானின் வரம்புகளின் வகைகள்
1. தனிப்பட்ட வரம்பு
இது ஒரு தனி நபர் கட்டுப்படுத்தப்படும் போது. வரம்பு சுயமாக (அறியாமையால்) அல்லது பிசாசின் வல்லமைகளால் விதிக்கப்படலாம்.
ஒருமுறை இந்தியாவின் வேறொரு மாநிலத்தில் நற்செய்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக
ஒரு நபர் எங்களுடன் பயணம் செய்தார். நாங்கள் எங்கள் செக்-இன் மற்றும் பிற சம்பிரதாயங்களை முடித்துவிட்டு விமானத்தில் ஏறக் காத்திருந்தோம். விமானத்தில் ஏறும் நேரம் வந்தவுடன், இந்த நபருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது, அவருக்கு ஏதோ நடக்கத் தொடங்கியது. நாங்கள் அவரை அவரது மனைவியுடன் விட்டுச் சென்றோம், அவருக்கு சில தொழில்முறை மருத்துவ நிபுணர்கள் உதவினார்கள். அது ஒரு குறுகிய நேர விமானம், நாங்கள் தரையிறங்கியவுடன், அவர் எப்படி இருக்கிறார் என்று விசாரிக்க அவரது மனைவியை அழைத்தேன். எனக்கு ஆச்சரியமாக, அவர் தொலைபேசியை எடுத்து, "விமானம் புறப்பட்டவுடன், நான் ஆச்சரியப்படத்தக்க வகையில் சரியாக இருந்தேன்." என்று கூறினார்.
நமது விடுதலை கூட்டங்களில் ஒன்றின் போது, இந்த மனிதன் முற்றிலும் விடுவிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தில் இதுவரை யாரும் விமானத்தில் பயணம் செய்யவில்லை, மேலும் அவரது வாழ்க்கையில் ஒரு சாத்தானின் வரம்பு இருந்தது என்பதை தேவ ஆவியானவர் வெளிப்படுத்தினார்.
2. கூட்டு வரம்பு
இது ஒரு குடும்பம், கிராமம், நகரம் அல்லது ஒரு தேசம் போன்ற மக்கள் குழுவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு. “இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான். அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்.”(2 இராஜாக்கள் 6:24-25)
3. பொருளாதார அல்லது நிதி வரம்பு
பொருளாதார வரம்புகளின் அறிகுறிகள் வேலையின்மை, வறுமை, தொடர்ச்சியான கடன்கள் மற்றும் நெருக்கடிகள் ஆகியவை அடங்கும்.
தேவனுடைய வல்லமையால், உங்கள் வாழ்க்கைக்கு எதிரான எந்தவொரு சாத்தானின் வரம்பும் இயேசுவின் நாமத்தில் பரிசுத்த ஆவியின் அக்கினியால் அழிக்கப்படும் என்று நான் கட்டளையிடுகிறேன்.
சாத்தானிய வரம்புகளுக்கு வேதத்தின் எடுத்துக்காட்டுகள்
- யோசுவா மற்றும் இஸ்ரவேலர்கள்
“எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.” (யோசுவா 6:1-2)
இஸ்ரவேலர்கள் கணிசமான பின்னடைவை எதிர்கொண்டனர் அதுமட்டுமல்லாமல் எரிகோவை தகற்க முடியவில்லை, ஏனெனில் நகரத்தின் வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன, மற்றும் அதின் மதில் வலிமையானதாக இருந்தது. தேவ உதவியின்றி, வரம்பு அழிக்கப்பட முடியாது; அது இராணுவ வலிமைக்கு அப்பாற்பட்டது.
- யூதாவுக்கு எதிரான கொம்புகள்
“பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார். இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக்கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.” (சகரியா 1:20-21)
சாத்தானின் கொம்புகள் ஜனங்கள் எழுவதைத் தடுத்தன; இந்த வரம்புகள் தான் மக்களின் விதியை மட்டுப்படுத்தியது. ஆவிக்குரிய உலகில் என்ன நடக்கிறது என்பதையும், ஜனங்கள் தங்கள் நிதி, சரிரசுகம் மற்றும் தொழில் ஆகியவற்றில் மாம்சிக ரீதியாக ஏன் போராடுகிறார்கள் என்பதையும் தேவன் தெய்வீகமாக தீர்க்கதரிசிக்கு காண்பித்தார்.
தெய்வீக வெளிப்பாடு இல்லாமல், சாத்தானின் வரம்புகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்.
Bible Reading Plan : Matthew 8-12
ஜெபம்
1. ஆண்டவரைப் போற்றி ஆராதியுங்கள். (உங்களுக்கு உதவ சில ஆராதனை பாடல்களை கேட்களாம்)
2. எனது பணம், சரிரசுகம் மற்றும் முன்னேற்றத்திற்கு எதிராக வைக்கப்பட்டுள்ள எந்தவொரு வரம்பும் இயேசுவின் நாமத்தில் அக்கினியால் அழிக்கப்படும். (ஏசாயா 54:17, நஹூம் 1:9)
3. ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் என் வாழ்க்கைக்கு எதிராக செயல்படும் எந்த மறைக்கப்பட்ட வரம்புகளையும் தெரியப்படுத்தும்.
(யோபு 12:22, லூக்கா 8:17)
4. இயேசுவின் இரத்தத்தால், இயேசுவின் நாமத்தில் என் வாழ்க்கைக்கு எதிராக செயல்படும் எந்த சாத்தானின் வரம்புகளையும் உடைக்கிறேன்.
(வெளிப்படுத்துதல் 12:11, கொலோசெயர் 2:14-15)
5. தேவ ஆவியால், என் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதையும் நான் இயேசுவின் நாமத்தில் சிதறடிக்கிறேன்.
(ஏசாயா 59:19, சகரியா 4:6-7)
6. நன்மைகள் என்னிடம் வருவதைத் தடுக்கும் எதையும், இப்போது இயேசுவின் நாமத்தில் அக்கினியால் அழிக்கிறேன்.
(உபாகமம் 28:12, சங்கீதம் 84:11)
7. ஆண்டவரே, இயேசுவின் நாமத்தினாலே களைப்படையாமல் ஓடவும், நடக்கவும், தடுமாறாமல் இருக்கவும் எனக்கு அதிகாரம் தந்தருளும். (ஏசாயா 40:29-31, பிலிப்பியர் 4:13)
8. இயேசுவின் நாமத்தில் எல்லா தடைகளையும் வரம்புகளையும் உடைக்க நான் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை பெறுகிறேன். (மீகா 2:13, எபேசியர் 6:10)
9. இயேசுவின் இரத்தத்தால், நான் இயேசுவின் நாமத்தில் முன்னேறுவதைத் தடுக்கும் ஒவ்வொரு பலிபீடத்தையும் விசித்திரமான குரல்களையும் அமைதிப்படுத்துகிறேன். (எபிரெயர் 12:24, 1 இராஜாக்கள் 18:38-39)
10. குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அந்நியபாஷையில் ஜெபம் செய்யுங்கள்.
Join our WhatsApp Channel
Most Read
● தேவனின் எச்சரிக்கைகளை புறக்கணிக்காதீர்கள்● ஆசீர்வதிக்கப்பட்ட நபர்
● தேவனோடு நடப்பது
● உங்கள் ஆவிக்குரிய பலத்தை எவ்வாறு புதுப்பிப்பது -3
● இறுதி சுற்றில் வெற்றி பெறுவது
● உங்கள் திருப்புமுனையை நிறுத்த முடியாது
● இயேசு பகிர்ந்த திராட்சரசம்
கருத்துகள்