தினசரி மன்னா
1
0
337
மற்றவர்களுக்காக ஜெபியுங்கள்
Friday, 3rd of January 2025
Categories :
பிரார்த்தனை (Prayer)
மன்றாட்டு (Intercession)
“அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.”
அப்போஸ்தலர் 12:1-5
மேலே உள்ள வேத வசனத்தில், அப்போஸ்தலனாகிய யாக்கோபு கொல்லப்பட்டதைக் காண்கிறோம். இருப்பினும், அப்போஸ்தலனாகிய பேதுரு தேவனின் அற்புதமான வல்லமையால் காப்பாற்றப்பட்டார். கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலைக்குள் பிரவேசித்து, பேகுருவை தனிப்பட்ட முறையில் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
எது வித்தியாசத்தை காண்பிக்கிறது?
யாக்கோபு ஏன் கொல்லப்பட்டார், அதேநேரத்தில் பேதுரு ஏன் காப்பாற்றப்பட்டார்?
அதற்கான திறவுகோல், "பேதுரு சிறையில் இருந்தபோது, சபை ஜனங்கள் அவருக்காக மிகவும் ஊக்கமாய் ஜெபித்தது" என்று நான் நம்புகிறேன்.
ஜெபத்தின் வல்லமையை நமது சொந்த வாழ்க்கைக்காக மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும் ஜெபிப்பது மிகவும் முக்கியம். நமது தேசத்திலும் நமது சபையிலும் உள்ள நமது தலைவர்களுக்காக ஜெபிக்க வேதத்தில் கட்டளையிடப்பட்டுள்ளோம். ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம்.
கிறிஸ்துவின் சரீரமாக நாம் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம், மேலும் அந்த சவால்களில் பெரும்பாலானவை ஊக்கமாய் மன்றாடி ஜெபிப்பதின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்.
பல ஆண்டுகளாக, தீர்க்கதரிசனம், சுகமாளிக்கும்ஆராதனை அல்லது விடுதலை கூட்டம் இருந்தால், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். இருப்பினும், மன்றாட்டு ஜெப ஆராதனையாக இருக்கும்போது, பெரிதளவில் கலந்து கொள்வதில்லை. நாம் ஆழமான குழிகளில் இருக்கும்போது நமக்காக யாராவது ஜெபிப்பார்களா அல்லது அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மற்றவர்கள் ஜெபத்திற்காக நம்மை தொடர்புகொள்ளும் போது அந்த ஜெபத்திற்கான அழைப்பிற்கு நாம் பதிலளிப்பதில்லை.
ஆகவே, நம்முடைய போதகர்கள், சபை தலைவர்கள், கிறிஸ்துவில் உள்ள சகோதர சகோதரிகள் அல்லது வேறு யாரேனும் நம்முடைய சொந்த வாழ்க்கையைப் போல கர்த்தர் நம் இருதயங்களில் வைக்கிறவர்களுக்காக ஊக்கமாக ஜெபிப்போம்.
பேச்சு மலிவானது, ஆனால் நமக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் நமது ஜெப வாழ்க்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவருடைய ஆவியின் அழைப்புக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா?
Bible Reading : Genesis 8 -11
ஜெபம்
1. “உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; (ஏசாயா 61:7)
2. என் வம்சாவழியின் மூலம் வரும் மூதாதையர் சாபங்கள் இயேசுவின் நாமத்தில் இயேசுவின் இரத்தத்தால் என்றென்றும் உடைக்கப்படும்.
3. எனது செழிப்பு, வேலை, வணிக தொடர்புகள், பதவி உயர்வு அல்லது முன்னேற்றங்கள் என்னைக் கண்டுபிடிப்பதைத் தடுக்க எதிரி என் மீது வீசிய இருளின் ஒவ்வொரு நிழலையும் நான் இயேசுவின் நாமத்தில் அக்கினியால் அகற்றுகிறேன்.
Join our WhatsApp Channel

Most Read
● நீங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்ந்தீர்களா?● அக்கினி விழ வேண்டும்
● தேவன் கொடுத்த சொப்பனம்
● சாந்தம் பலவீனத்திற்கு சமமானதல்ல
● நாள் 18: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● ஆண்டவரே, கவனச்சிதறல்களிலிருந்து என்னை விடுவியும்
● தீர்க்கதரிசனத்தின் ஆவி
கருத்துகள்