தினசரி மன்னா
ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்?
Sunday, 5th of January 2025
0
0
96
பெரும்பாலும், நமது ஜெபங்களும் விண்ணப்பங்களும் பட்டியலைப் போல ஒலிக்கின்றன. "ஆண்டவரே, இதை சரிசெய்யவும்," "ஆண்டவரே, என்னை ஆசீர்வதியும்," "ஆண்டவரே, அந்த சிக்கலை நீக்கும்." நம்முடைய தேவைகளை நாம் அவரிடம் கொண்டு வர வேண்டும் என்று தேவன் நிச்சயமாக விரும்புகிறார் (பிலிப்பியர் 4:6), ஜெபத்திற்கு ஒரு ஆழமான, முதிர்ந்த அணுகுமுறை உள்ளது: "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்?" இந்தக் கேள்வி நம் சுய சித்ததிலிருந்து தேவனிடம் கவனம் செலுத்துகிறது. அது நம்முடைய ஜெபங்களின் மையமாக இருந்து தேவனுடைய சித்தத்தை மையமாக வைப்பதற்கு நம்மைத் தூண்டுகிறது.
இதைக் கவனியுங்கள்: தமஸ்க்குவிற்கு செல்லும் வழியில் இயேசுவை சவுல் சந்தித்தபோது, அவருடைய முதல் பதில், "ஆண்டவரே, இந்தக் குருட்டுத்தன்மையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" அல்லது "ஆண்டவரே, நீர்யார்என்பதை விளக்கும்" என்று அல்ல. மாறாக, அப்போஸ்தலனாகிய பவுலாக மாறிய சவுல், "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்?" என்று ஜெபித்தார். (அப்போஸ்தலர் 9:6). அந்தக் கேள்வி அவரது வாழ்க்கையில் ஒரு தீவிர மாற்றத்தின் தொடக்கத்தைக் குறித்தது.
தேவனுடைய சத்ததிற்கு செவி கொடுப்பது
நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவனிடம் கேட்பது நாம் அவருக்கு செவிக் கொடுக்கவேண்டும், கவனச்சிதறல்கள் நிறைந்த உலகில் நம்மில் பலர் போராடுகிறோம். ஏசாயா 30:21 இல், தேவன் வாக்குக்கொடுக்கிறார், “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”
ஆனால் அந்தக் குரலைக் கேட்க, நாம் நம் இருதயங்களை அமைதிப்படுத்தி, தேவன் பேசுவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.
நான் ஒருமுறை, ஊழிய பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட சவால்கள் நிமித்தம் திணறினேன். எனது ஜெபங்கள் தேவனுக்காண அறிவுரைகளால் நிரப்பப்பட்டன: “ஆண்டவரே, இதைச் செய்யுங்கள்! ஆண்டவரே, இந்த நிலையை மாற்றுங்கள்!” ஒரு நாள், "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்?" என்று கேட்பதற்கு என் உள்ளத்தில் ஒரு நெருடல் ஏற்பட்டது. பதில் மெதுவாக ஆனால் வல்லமைவாய்ந்ததாக வந்தது: “இதை என்னிடம் ஒப்புக்கொடு. என் நேரத்தை நம்பு." கீழ்ப்படிதலின் அந்த தருணம் பல வாரங்களாக நான் அனுபவிக்காத தெளிவையும் அமைதியையும் தந்தது.
கீழ்ப்படிதலுக்கான வேத எடுத்துக்காட்டுகள்
தேவனுக்கு நமது திட்டங்களைக் கட்டளையிடுவதற்குப் பதிலாக, தேவனுடைய வழிநடத்துதலைக் கேட்ட அதை பின்பற்றியவர்களின் எடுத்துக்காட்டுகள் வேதத்தில் ஏராளம் உள்ளன. இயேசுவின் தாயான மரியாளை எடுத்துக் கொள்ளுங்கள். அவள் தேவனுடைய குமாரனைப் பெறுவேன் என்று தேவதூதன் அவளிடம் சொன்னபோது, அவளுடைய பதில், "ஆனால் என் திட்டங்களைப் பற்றி என்ன?" என்பது அல்ல. மாறாக, அவள் பணிவுடன், “அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். ” (லூக்கா 1:38). தேவனின் விருப்பத்துடன் தன் வாழ்க்கையை சீரமைக்க அவள் விரும்பியது வரலாற்றின் போக்கை மாற்றியது.
மறுபுறம், யோனா தேவனுடைய சித்தத்தை எதிர்த்தார், அவருடைய அழைப்பின் எதிர் திசையில் ஓடினார். யோனா ஒப்புக்கொடுத்து கீழ்ப்படிந்த வரை, தேவனுடைய திட்டம் அவரது வாழ்க்கையிலும் நினிவே ஜனங்களிடமும் தன் வாழ்க்கையிலும் வெளிப்பட்டது (யோனா 3:1-3).
அர்ப்பணிக்கபட்ட இருதயம்
“ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்?” என்று கேட்பது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது. அதன் மையத்தில், இந்த கேள்விக்கு பணிவு மற்றும் சரணடைதல் தேவை. தேவனின் வழிகள் நம் வழிகளை விட உயர்ந்தவை என்பதை அது ஒப்புக்கொள்கிறது (ஏசாயா 55:8-9). இது விசுவாசத்தின் செயல், அவருடைய திட்டம் சிறந்தது மட்டுமல்ல, நமது இறுதி நன்மைக்காகவும் இருக்கிறது. (ரோமர் 8:28).
ஒரு பெரிய மனிதர் ஒருமுறை எழுதினார், "தேவனை பற்றிய குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நீங்கள் தேவனுக்கு பயப்படும்போது, வேறு எதற்கும் பயப்படத்தேவையில்லை, அதே சமயம் நீங்கள் தேவனுக்கு பயப்படவில்லை என்றால், நீங்கள் அனைத்திற்கும் பயப்படுகிறீர்கள்." நாம் தேவனுடைய சித்தத்திற்குச் அர்ப்பணிக்கும் போது, அவருடைய திட்டங்களைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவை சரியானவை என்று நம்பி, அவருடைய சமாதானத்திற்குள் நுழைகிறோம்.
தேவனின் விருப்பத்துடன் இணைவதற்கான நடைமுறை படிகள்
1.இடைநிறுத்தி ஜெபம் செய்யுங்கள்
"தேவனே, இன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்?" என்று ஒவ்வொரு நாளும் கேட்பதன் மூலம் தொடங்குங்கள். இந்த எளிய ஜெபம் உங்கள் இருதயத்தை அவருடைய திசையில் திறக்கிறது.
2.வேதத்தை தியானியுங்கள்
தேவன் எப்பொழுதும் தம் வார்த்தையின் மூலம் பேசுகிறார். நீங்கள் முடிவெடுப்பதற்கு வழிகாட்டும் வேதவசனங்களைப் படிப்பதிலும் சிந்திப்பதிலும் நேரத்தை செலவிடுங்கள். உதாரணமாக, நீதிமொழிகள் 3:5-6 கூறுகிறது, “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
3.கேளுங்கள, காத்திருங்கள்
அமைதி வல்லமை வாய்ந்தது. தேவனின் வழிகாட்டுதலை நீங்கள் கேட்கக்கூடிய அமைதியான தருணங்களை உருவாக்குங்கள். சங்கீதம் 46:10 “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.” என்று நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:
- நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்று தேவனிடம் கடைசியாக எப்போது கேட்டேன்?
- தேவனின் விருப்பத்திற்கு சரணடைவதற்குப் பதிலாக என் வாழ்க்கையில் நான் கட்டுப்படுத்தும் பகுதிகள் உள்ளதா?
- தேவனுடைய சத்தத்தை கேட்பதற்கு என் வாழ்க்கையில் அதிக இடத்தை எவ்வாறு உருவாக்குவது?
Bible Reading : Genesis 16 -18
ஜெபம்
தந்தையே, நான் தாழ்மையான இருதயத்துடன் உம் முன் வருகிறேன். என் திட்டங்களின்படி நீர் செல்ல வேண்டும் என்று நான் அடிக்கடி ஜெபித்தேன். இன்று, நான் கேட்கிறேன், "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?" உமது வழிகளில் என்னை நடத்தும், உமது ஆவியால் என்னை வழிநடத்தும், கீழ்ப்படிவதற்கு எனக்கு தைரியம் தாரும். என் திட்டங்களையும், என் அச்சங்களையும், என் ஆசைகளையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் என் வாழ்விலும் செய்யப்படுவதாக. இயேசுவின் நாமத்தில், ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● நாள் 31 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்● இழந்த ரகசியம்
● நாள் 12: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● உங்கள் இருதயத்தை எவ்வாறு பாதுகாப்பது
● கவனச்சிதறல் காற்றின் மத்தியில் உறுதி
● யூதாஸ் காட்டிக்கொடுத்ததற்கான உண்மையான காரணம்
● உங்கள் முழு திறனை அடையுங்கள்
கருத்துகள்