தினசரி மன்னா
0
0
91
நித்தியத்தை மனதில் கொண்டு வாழ்வது
Friday, 10th of January 2025
Categories :
துக்கம் (Grief)
ஜெபம் முடிந்து, ஒரு நாள் இரவு உறங்கச் சென்றபோது, எங்கள் குழு உறுப்பினரின் மகள் ஒருவரிடமிருந்து எனக்கு பாதட்ற்றமான அழைப்பு வந்தது, "பாஸ்டர், தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்; என் அப்பாவிற்கு சுகமில்லை; மருத்துவர்கள் நம்பிக்கையை விட்டுவிட்டார்கள்." நான் அதிர்ச்சியடைந்தேன் மற்றும் விரக்தியில் ஜெபிக்க முழங்காலில் சென்றேன். அப்போது, "பாஸ்டர், அப்பா மறித்துப்போனார்" என்று மிக சோகமான செய்தி வந்தது.
முந்தைய நாள், இந்த அற்புதமான சகோதரரையும் அவருடைய குடும்பத்தாரையும் சந்தித்தேன், என்ன ஒரு அற்புதமான ஐக்கியம் இருந்தது. இந்த சகோதரனும் நானும் புத்தகங்களையும் இசையையும் விரும்பினோம், எங்கள் நேரம் போகிறதே தெரியாது. இப்போது அவர் இல்லை என்று கேட்க - என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றும் நான் அவர் இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறறேன்.
யோவான் 11:35 நமக்கு சொல்கிறது, "இயேசு கண்ணீர்விட்டார்"
இயேசுவும் தான் நேசித்தவர்களின் மரணத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இயேசு தம் நண்பரான லாசருவை நினைத்து அழுதது போல், அவரும் நம் துயரத்தில் அழுகிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது.
வாழ்க்கை எவ்வளவு பலவீனமானதும் விரைவானதும் என்பதை இதுபோன்ற தருணங்களில் நாம் உணர்கிறோம். வேதம் இந்த உண்மையை நமக்கு நினைவூட்டுகிறது:
“மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.”
1 பேதுரு 1:24-25
அதே சமயம், இந்த பூமியில் நமது வாழ்க்கை குறுகியது, ஆனால் கிறிஸ்துவில் நம் வாழ்க்கை நித்தியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த பூமியில் உள்ளவைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நித்தியத்தில் நிற்பதை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். நித்தியத்தை மனதில் கொண்டு வாழ்க்கையை வாழ வேண்டும். உங்கள் நேரத்தையும் அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதையும் பட்டியலிடுங்கள்.
சங்கீதக்காரன் செய்த உறுதிமொழிகளில் ஒன்றைப் பாருங்கள்: "நான் உயிரோடிருக்கும்போது கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைத் கீர்த்தனபண்ணுவேன். (சங்கீதம் 146:2) கர்த்தரை ஆராதிப்பதில் தினமும் நேரத்தைச் செலவிடுங்கள், அவர் மட்டுமே. ஒரு நாள், நாம் அனைவரும் அவரை நேருக்கு நேர் காண்போம்.
Bible Reading : Genesis 30 - 31
ஜெபம்
தகப்பனே, வாழ்வின் ஈவுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இயேசு எனக்காக தந்த இரட்சிப்பின் இலவச பரிசிற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். நித்தியத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில்.
ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே, நீர் உண்மையிலேயே எனக்கு ஆறுதல் அளிப்பவர். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், வேதனையிலும் துக்கத்திளும் உள்ள அனைவருக்கும் ஆறுதல் தாரும்.
Join our WhatsApp Channel
![](https://ddll2cr2psadw.cloudfront.net/5ca752f2-0876-4b2b-a3b8-e5b9e30e7f88/ministry/images/whatsappImg.png)
Most Read
● தெய்வீக ஒழுக்கத்தின் தன்மை-1● என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே
● உங்கள் இரட்சிப்பின் நாளைக் கொண்டாடுங்கள்
● கர்த்தரிடம் திரும்புவோம்
● இயேசு ஏன் அத்தி மரத்தை சபித்தார்?
● அவரது வலிமையின் நோக்கம்
● இயேசுவைப் பார்க்க ஆசை
கருத்துகள்