“நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.” கொலோசெயர் 3:1-3
இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. உதாரணமாக, ஒரு பன்றி எப்போதும் பன்றியாகவே இருக்கும். எந்த ஒரு நல்ல நடத்தை அல்லது பயிற்சி ஒரு பன்றியை புதிய இனமாக மாற்ற முடியாது. வேதம் நம்மை எச்சரிக்கிறது: “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.”மத்தேயு 7:6
நீங்கள் பன்றியைக் கழுவி, அதன் தலையில் ஒரு சிறிய க்ரீடம் உடுத்தலாம், ஆனால் நீங்கள் அதை விடுவித்தவுடன், அது ஒரு சேற்று குட்டைக்கு நேராக செல்லும். மீண்டும், வேதம் இதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
“நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.” 2 பேதுரு 2:22
மனிதர்களாகிய நாமும் பிறக்கும்போதே ஒரு பொதுவான இயல்பைப் பெற்றிருக்கிறோம். நாம் வீழ்ந்த, பாவமான உலகில் வாழ்வதால், நாம் அனைவரும் வீழ்ந்த இயல்புடன் தொடங்குகிறோம்.
சங்கீதம் 51:5 சொல்கிறது, “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.”
எபேசியர் 2:2, கிறிஸ்துவில் இல்லாத எல்லா ஜனங்களும் "கோபாக்கினையின் பிள்ளைகள்" என்று கூறுகிறது.
தேவன் மனித இனத்தை பாவமாகப் படைக்கவில்லை, நேர்த்தியாய் படைத்தார். ஆனால் நாம் பாவத்தில் விழுந்து ஆதாமின் பாவத்தினால் பாவம் ஆனோம். இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான முடிவை நீங்கள் எடுக்கும்போது, நீங்கள் அதிசயமாக ஒரு புதிய இயல்பைப் பெறுவீர்கள். முடியாதது சாத்தியமாகிறது.
ஆகையால், எந்த ஒரு நபரும் கிறிஸ்துவில் (மேசியா) [இணைக்கப்பட்ட] இருந்தால், அவன் புதுசிருஷ்டியாயிருக்கிறான் (முற்றிலும் ஒரு புதிய உயிரினம்); பழையவைகள் [முந்தைய தார்மீக மற்றும் ஆவிக்குரிய நிலை] ஒழிந்து போயின. இதோ, எல்லாம் புதிதாயின! (2 கொரிந்தியர் 5:17)
நீங்கள் இனி வீழ்ந்த-மனித-இயல்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; இப்போது, நீங்கள் தேவனின் குடும்ப உறுப்பினர். மாறிவரும் இனங்களுடன் ஒப்பிடக்கூடிய நிகழ்வு இது.
நாம் இப்போது ஒரு புதிய தன்மையைக் கொண்டிருப்பதால், நாம் வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் ஆவி மனிதன் புதிதாக்கப்பட்டான், ஆனால் நம் மனம் இன்னும் புதுப்பிக்கப்பட வேண்டும். இதில் ஒரு செயல்முறை உள்ளது, அது தானாக நடப்பதில்லை.
கொலோசெயர் 3:1-3 இல், இந்த செயல்முறையை எவ்வாறு தொடங்குவது என்பதற்கான வழிமுறைகளை பவுல் நமக்குத் தருகிறார்: மேலானவைகளைத் தேடுங்கள். நீங்கள் நித்தியத்தை பரலோகத்தில் கழிப்பீர்கள் என்ற உணர்வு பூமியில் உங்கள் கவனத்தை மாற்றுகிறது. இனிமேல் அந்த எண்ணத்தை கொண்டிருங்கள். இது நீங்கள் திட்டமிடும் முறையை மாற்றலாம்.
Bible Reading : Genesis 32-33
வாக்குமூலம்
நான் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய வாழ்க்கைக்கு எழுப்பப்பட்டிருக்கிறேன். தேவனின் வலது புறத்தில் கிறிஸ்து கணத்திற்குரிய இடத்தில் அமர்ந்திருக்கும் பரலோகத்தின் சத்தியத்தின் மீது நான் என் கவனத்தை (சரீரம, ஆத்துமா இரண்டிலும்) வைப்பேன். பூமியின் விஷயங்களைப் பற்றி அல்ல, பரலோகத்தைப் பற்றி சிந்திப்பதை நான் தினமும் ஒரு தேர்வாக செய்வேன். ஏனென்றால், நான் இந்த பாவத்திற்கு மரித்துவிட்டேன், என் நித்திய வாழ்க்கை கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
Join our WhatsApp Channel
![](https://ddll2cr2psadw.cloudfront.net/5ca752f2-0876-4b2b-a3b8-e5b9e30e7f88/ministry/images/whatsappImg.png)
Most Read
● அவருடைய நீதியை அநிந்திரிக்கிறோம்● தேவனின் ஏழு ஆவிகள்: வல்லமையின் ஆவி
● தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்
● உங்கள் இரட்சிப்பின் நாளைக் கொண்டாடுங்கள்
● நாள் 03 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
● மன்னிப்பின் செங்குத்து மற்றும் கிடைமட்ட
● உங்கள் பெலவீனத்தில் தேவனுக்கு அடிபணியக் கற்றுக்கொள்வது
கருத்துகள்