தினசரி மன்னா
தேவனை துதிப்பாதற்கான வேதத்தின் காரணங்கள்
Thursday, 23rd of January 2025
0
0
55
Categories :
பாராட்டு (Praise)
நீங்களும் நானும் ஏன் தேவனை துதிக்க வேண்டும்?
இன்று நாம் இந்தக் கேள்வியை இன்னும் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
துதி ஒரு கட்டளை
“சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.”
(சங்கீதம் 150:6)
உயிருள்ளவை, சாகாதவை தேவனை துதிக்கட்டும் என்று வேதம் சொல்கிறது. தேவனின் வார்த்தை நமக்கு ஒரு பரிந்துரை அல்ல. தேவனுடைய வார்த்தை ஒரு கட்டளை. ஒரு பரிந்துரை புறக்கணிக்கப்படலாம், ஆனால் ஒரு கட்டளையை புறக்கணிக்க முடியாது. நீங்கள் ஒரு கட்டளையை புறக்கணித்தால், அதற்கான விளைவுகள் இருக்கும்.
நாம் "உணரும்போது" தேவனை துதிக்க வேண்டும் என்று வேதம் சொல்லவில்லை. அவ்வாறு செய்ய நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். துதி என்பது ஒரு தேர்வு, ஒரு உணர்வு அல்ல.
தேவனுடைய வார்த்தையில் துதி ஏன் ஒரு கட்டளையாக இருக்கின்றது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஏனென்றால், எந்த ஒரு உடற்பயிற்சியும் சரிர ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும், துதியை படிப்பதையும் பயிற்சி செய்வதையும் விட அதிக குணமாக்காது என்பதை தேவன் புரிந்துகொள்கிறார்!
உலகம் முழுவதும் கிறிஸ்துவின் சரீரத்திற்கு தேவன் துதியை மீட்டெடுக்கிறார்.
துதி தேவனை அணுகுவதை எளிதாக்குகிறது
“அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.” (சங்கீதம் 100:4)
இங்கே இரண்டு வித அணுகல் உள்ளது, முதலில் தேவனின் வாசல் வழியாகவும் பின்னர், அவரது பிராகாரம் வழியாகவும் பிரவேசிப்பது. அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள் என்று கூறுகிறார்.
வெளிப்படையாக, இயேசு கிறுஸ்துவின் இரத்தமே பாவ மன்னிப்புக்கும், தேவனுடனான நமது உறவுக்கும் வழி வகுக்கும் (எபிரேயர் 10:19). அப்படிச் சொல்லப்பட்டால், நம்முடைய நிரந்தரமான துதி அவருடைய முன்னிலையில் தெளிவான தடையற்ற பாதையை வழங்குகிறது.
நீங்கள் ஜெபத்தைத் தொடங்கும் போதெல்லாம், உங்கள் வேண்டுதலின் பட்டியலை உடனடியாக அவரிடம் கொண்டு வராதீர்கள். இது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள தேவனை அணுகுவதற்கான தவறான வழி. அவரது வாசல்களில் துதியோடும், அவருடைய பிராகரங்களில் புகழ்ச்சியோடும் ஸ்தோத்திரத்தோடும் பிரவேசிப்பத்தின் மூலம் உங்கள் ஜெபத்தைத் தொடங்குங்கள்.
தேவனுடைய பிராகாரங்களில் வருவதற்கான உற்சாகமும் சிலாக்கியமும், அப்போஸ்தலர் 3 ஆம் அதிகாரத்தில் அலங்கார வாசல் என்று அழைக்கப்படும் தேவாலய வாசலில் முடவனை குணப்படுத்துவதன் மூலம் விளக்கப்படுகிறது.
அப்போஸ்தலனாகிய பேதுரு அலங்கார வாசலில்உட்கார்டிருந்த மூடவன் சுகமான பிறகு, “அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.” (அப்போஸ்தலர் 3:8)
தன் வாழ்நாள் முழுவதும், முடமான மனிதனால் மக்கள் கடந்து செல்வதையும், வாயில்கள் வழியாக தேவாலயத்தின் பிரகாரங்களில் செல்வதையும் மட்டுமே பார்க்க முடிந்தது. இருப்பினும், அவன் பேதுருவையும் யோவானையும் சந்தித்த நாளில், எல்லாம் மாறியது. இப்போது அவன் குணப்படுத்தியதற்காக தேவனுக்கு நன்றி சொல்ல முடியும் மற்றும் பிரகாரங்களின் வழியாக ஆலயத்திற்குள் முற்றங்களுக்குள் செல்ல முடியும்.
இப்போது அவன் வெளியிருந்து பார்க்கவில்லை, மாறாக உள்ளேச்சென்று பங்கேற்க முடிந்தது. அவனுடைய மகிழ்ச்சி நமக்கு ஒரு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பு: நோவா செயலியில் உள்ள துதி பகுதியைப் பார்க்க உங்களை ஊக்குவிக்கிறேன். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரைப் துதிப்பதற்கு இது உங்களுக்கு உதவும்.
Bible Reading: Exodus 14-16
வாக்குமூலம்
ஆண்டவரே, நீர் பெரியவர், துதிக்கு மிகவும் பாத்திரர்; நீர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறீர்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் நீரே.”
அல்லேலூயா! (சங்கீதம் 96:4) உங்கள் கைகளை உயர்த்தி, கர்த்தரைத் துதிப்பதில் சிறிது நேரம்
Join our WhatsApp Channel
Most Read
● முன்மாதிரியாய் இருங்கள்● காரணம் இல்லாமல் ஓடாதே
● மறக்கப்பட்டக் கட்டளை
● உங்கள் வாழ்க்கையில் நீடித்த மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவது -1
● சரிசெய்
● ஏழு மடங்கு ஆசீர்வாதம்
● இந்த ஒரு காரியத்தை செய்யுங்கள்
கருத்துகள்