தினசரி மன்னா
துதி பெருக்கத்தை கொண்டுவரும்
Saturday, 25th of January 2025
0
0
44
Categories :
பாராட்டு (Praise)
“தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.”சங்கீதம் 67:5-6
கவனமாகக் கவனியுங்கள்,தேவ பிள்ளைகள் அவரைத் துதிக்கும் போதுதான், பூமி வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்பதை இந்த வசனம் சொல்லுகிறது.
நம்முடைய பலன் வரும்வரை நாம் தேவனைத் துதிக்கக் காத்திருக்கக்கூடாது; மாறாக, அதை அனுபவிப்பதற்கு முன்பே நாம் அவரைத் துதிக்க வேண்டும். துதி பெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து முணுமுணுப்பவர்களும் குறைக்கூருபவர்களும் தேவனிடமிருந்து வரும் இந்த பெருக்கத்தை அனுபவிக்க முடியாது. முணுமுணுப்பதும் குறை கூறுவதும் அதிகரிப்பதற்குத் தடையாக இருக்கிறது. தெய்வீக ஏற்பாடு எப்போதும் தேவனுடைய பிள்ளைகளின் துதிக்கு பதிலளிக்கும்.
இயேசு பிதாவுக்கு துதியையும் நன்றியையும் தெரிவித்து அப்பங்களையும் மீன்களையும் ஆசீர்வதித்தபோது, பெருக்கத்தின் அற்புதம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவளிக்க வழிவகுத்தது.
“அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, இந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள்.”மாற்கு 8:6-8
அதுபோலவே, நம் வாழ்வில் பெருக்கத்தையோ, அதிகரிப்பையோ காண வேண்டுமென்றால், நம்மிடம் இருப்பதற்காக தேவனை துதிக்கவும் நன்றி செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
“பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்;”யோவேல் 3:13
அரிவாள் இல்லாமல் அறுவடை செய்ய முடியாது. அறுவடை நேரத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். (ஏசாயா 9:3). துதியும் மகிழ்ச்சியும் கைகோர்த்துச் செல்கின்றன. எனவே, துதி என்பது அறுவடைக்கு பயன்படும் அரிவாள்.
இன்று முதல், இந்த வெளிப்பாட்டின் மூலம் தேவனை துதித்து, அற்புதமான பலன்களைப் பெறுங்கள்.
Bible Reading: Exodus 21-22
வாக்குமூலம்
கர்த்தர் என் மேய்ப்பர். அவர்தான் என்னை வழிநடத்துகிறார். எனவே செல்வத்தை அதிகரிப்பதற்கான அனைத்து வழிகளும் இன்று இயேசுவின் நாமத்தில் எனக்கு திறக்கப்பட்டுள்ளன. ஆண்டவராகிய நீர் ஒருவரே தேவன். எனவே, வளர்ச்சியையும் அதிகரிப்பையும் பெருக்கதையும் கொண்டுவரும் தெய்வீகமாக ஈர்க்கப்பட்ட யோசனைகள் இப்போது இயேசுவின் நாமத்தில் என்னிடம் வருகின்றன.
Join our WhatsApp Channel
Most Read
● விசுவாசத்தால் கிருபையை பெறுதல்● தேவாலயத்தில் உள்ள தூண்கள்
● நாள் 11: 40 நாட்கள் உபவாசம் & பிரார்த்தனை
● விசுவாசத்தின் குணப்படுத்தும் வல்லமை
● தேவனுக்கு முதலிடம் கொடுப்பது #1
● உண்மையுள்ள சாட்சி
● தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் ஐந்து விதமான நன்மையின்
கருத்துகள்