தினசரி மன்னா
உங்கள் மறுருபத்திற்கு எதிரி அஞ்சுகிறான்
Saturday, 1st of February 2025
0
0
55
Categories :
மாற்றம்(transformation)
“அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.”
(சங்கீதம் 18:45)
கொடுங்கோல் ஹிட்லரும் நாஜி வதை முகாம் தளபதிகளும் கூட எஸ்தர் புத்தகத்தின் வல்லமைக்கு பயந்ததாக ஒருமுறை படித்தேன். இவர்கள் மனித வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதவர்கள், ஆனால் அவர்கள் தேவனின் வல்லமையான தலையீட்டின் வல்லமைக்கு அஞ்சினார்கள். உண்மையில், அவர்கள் அதை மிகவும் பயந்தார்கள், அவர்கள் அதை தங்கள் மரண முகாம்களில் தடை செய்தனர். தேவ பிள்ளைகள் மீட்கப்பட்ட எஸ்தர் புத்தகத்தில் நடந்த நிகழ்வு மீண்டும் நிகழும் என்று அவர்கள் பயந்தார்கள், எதிரியின் திட்டம் எதிரிக்கே திரும்பியது.
மனிதனுக்குள் மறைந்திருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதால் இன்றும் எஸ்தரின் கதைக்கு தீங்கு விலைவிப்பவர்களுக்கு பயமாக இருக்கிறது என்பதை இது எளிமையாகச் சொல்கிறது. 2 கொரிந்தியர் 4:7 கூறுவதைப் பாருங்கள், “இந்த மகத்துவமுள்ள [அசாதாரண; ஆழ்நிலை] வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் [களிமண் பாண்டம்] பெற்றிருக்கிறோம்.”
உங்கள் பலவீனம் உங்களுடைய முடிவு அல்ல என்பதை பிசாசு நன்கு அறிவான். உங்களில் ஒரு மாபெரும் எழுச்சிக்கான சரியான நேரத்திற்காக காத்திருப்பதை அவன் அறிவான். கர்த்தராகிய இயேசு உங்களுக்காகவும் எனக்காகவும் சிலுவையில் செய்தவற்றின் காரணமாக, தேவன் நம்மை கிருபையின் மூலம் பார்க்கிறார். எனவே, அவர் நமது மனித பலவீனங்கள் மற்றும் தோல்விகளை சமாளிக்க கிருபையின் மீது கிருபையை தருகிறார், நமது நிலையையும் ஸ்தானத்தையும் அவரது சிம்மாசனதிருக்கு உயர்த்துகிறார்.
எதிரியின் பயத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதே பெரும்பாலான நேரங்களில் சவால். பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல, இவரை விழுங்கலாம் என்று தேடுகிறான் என்று வேதம் சொல்கிறது. (1 பேதுரு 5:8). நாம் அனுமானித்து தப்பி ஓடுவது போல் அவன் சிங்கம் அல்ல; அப்படிஇருக்கும் ஒருவனாக மட்டுமே நடிக்கிறான். பிள்ளைகளின் நிகழ்ச்சிகளில் ஜனங்கள் எப்படி மிக்கி மவுஸின் வெவ்வேறு ஆடைகளை அணிவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், பிசாசு அதைத்தான் செய்கிறான். உங்களை பயமுறுத்துவதற்காகவே வேஷம் போடுகிறான். அவர் வேறுயாரும் அல்ல தோற்கடிக்கப்பட்ட எதிரி.
தாவீது ராஜா சங்கீதம் 18:43-45 இல் எழுதினார், “ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள். அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள். அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.”
எஸ்தர் ஒரு காலத்தில் பலவீனமான சிறுமியாக இருந்தாள். அவள் ராணியாக மாறிய தருணத்தில், எல்லா நரகமும் உடைந்தது. ஆனால் ஏன்? அவள் யாரையும் புண்படுத்தும் வகையில் எதையும் செய்யவில்லை, ஆனாலும் ஏன் இந்த சச்சரவுகள்? ஆமான் திடீரென்று அச்சுறுத்தப்பட்டதாக உணர ஆரம்பித்தான். அவன் ஏன் பாதுகாப்பற்றவராக இருந்தான் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவள் ஒரு ராணி, அவன் அரசனின் தலைமை ஆலோசகர். "ஆமானால் ராணி ஆக முடியாது, அதனால் என்ன பிரச்சனை?"
ஒருவேளை நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்கள். ஏன் இந்த சவால்கள் எல்லாம் என்னை எதிர்கொள்கின்றன? நான் துரதிர்ஷ்டவசமாக இருப்பது போல் ஏன் தோன்றுகிறது, எனக்கு சாதகமாக எதுவும் செயல்படவில்லை? தேவன் என்மீது கோபமாக இருப்பதாக நான் ஏன் உணர்கிறேன், அல்லது வேறு என்ன காரணங்களால் இந்தச் சவால்களின் வழியாக என்னைப் பார்க்க வைக்க முடியும்? என் நண்பரே, இது உங்களைப் பற்றியது அல்ல; எதிரி உங்களை குன்றிலிருந்து தள்ள முயற்சிக்கிறான், ஏனென்றால் அவன் உங்களின் எதிர்கால மாற்றத்திற்கு பயப்படுகிறான்.
ஏரோது அரசனும் இயேசுவின் மாற்றத்திற்கு பயந்தான்; ஆதரவற்ற சிறுவனாக இருந்தபோதும், தனது வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்டான். உங்கள் சொந்த கொடுங்கோல் "ராஜாவின்" கீழ் நீங்கள் சிக்கியிருக்கலாம். ஒருவேளை இது மாம்சிக பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் ஒரு காரணத்திற்காக இந்தப் பருவத்தில் இந்த வெளிப்பாடு உங்களுக்கு வருகிறது என்று நான் நம்புகிறேன்.
எஸ்தரின் வெளிப்பாடு உங்களைப் பாதுகாக்கும், ஆம், ஆனால் அது உங்களுக்கு "முன்வைக்க" மற்றும் உங்கள் எதிர்காலத்தை மாற்றும். எஸ்தரின் கதை எதிரியின் திட்டங்களுக்கு எதிர்கால அழிவு பற்றிய தீர்க்கதரிசனம். ஆனால், இது உங்களுக்கு தெய்வீக மாற்றம் மற்றும் உயர்வு பற்றிய தீர்க்கதரிசனம். உங்கள் எதிர்காலம் பாதுகாப்பானது, எனவே பிசாசின் கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருங்கள்.
Bible Reading: Exodus 39-40
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் முற்றிலும் ஜெயம் கொள்கிறாவனாக இருப்பதால் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நீர் எனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்தீர் என்பதற்காக உமக்கு நன்றி கூருகிறேன். உமது வலுவாக இருக்க எனக்கு உதவுமாறு நான் ஜெபிக்கிறேன். என் வாழ்க்கையில் பிசாசு மேலோங்கக்கூடாது என்று நான் கட்டளையீடுகிறேன். நான் எப்போதும் எல்லா நேரங்களிலும் ஜெயிப்பேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● நித்தியத்தில் முதலீடு● எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள்
● வீழ்ச்சியிலிருந்து மீட்புக்கு ஒரு பயணம்
● உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 5
● வேர்களை கையாள்வது
● உங்கள் தெய்வீக சந்திப்பின் அடையாளம் கொள்ளுங்கள்
● இயற்கைக்கு அப்பாற்பட்டதை வளர்ப்பது
கருத்துகள்