english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. எதிராளி இரகசியமானவன்
தினசரி மன்னா

எதிராளி இரகசியமானவன்

Friday, 21st of February 2025
0 0 165
Categories : எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series)

“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” 1 பேதுரு‬ 5:8


எஸ்தர்‬ ‭7‬:‭6ல்‬ வேதம் சொல்கிறது, “அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.” எஸ்தர் ஆமானைப் பற்றிய உண்மையை அம்பலப்படுத்தினாள் - அவர் ராஜாவின் உண்மையுள்ள வேலைக்காரன் அல்ல, மாறாக அவன் ஒரு எதிரி, ராஜாவின் நன்மையை விட தனது சொந்த புகழ் மற்றும் அந்தஸ்தில் அதிக அக்கறை கொண்டிருந்தான். அதற்கு அகாஸ்வேருஸ் ராஜா பதிலளித்து, எஸ்தர் ராணியிடம், "அவன் யார், அவன் எங்கே?


வல்லமை வாய்ந்தவராகவும், அநேகமாக பல ரகசிய முகவர்களுடன் இருந்தாலும், உண்மையான எதிரியை ராஜா இன்னும் அறியவில்லை. எதிரி எவ்வளவு ரகசியமாக இருக்கிறான் என்பதை இது நமக்குச் சொல்கிறது. ராஜா எப்போதும் தேவ ஜனங்களின் எதிரியுடன் உணவருந்தினார், ஆனால் அவருக்குத் தெரியாது. யூதர்களைக் கொல்வதற்கான ஆணையை அரசனிடம் முழு விவரமும் கூறாமல் ராஜாவை ஏமாற்றி கையொப்பமிட்டான். அவனது திட்டங்கள் அனைத்தும் சுயநலமாக இருந்தன, மேலும் அவன் தனது அதிகாரத்தை பல ஆண்டுகளாக தவறாக பயன்படுத்தினான்.


நாம் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் ராஜாவைச் சூழ்ந்திரிந்தனர், ஆனால் அவருக்குத் அது தெரியாது. நீங்கள் ஏற்கனவே எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறீர்களா? அவர்களை பெஸ்டி என்றும், தனிப்பட்ட உதவியாளர் என்றும், செயலாளர் என்றும் அழைக்கலாம்? மனிதர்களாக நம்மிடம் வந்தாலும் உண்மையான எதிரி அந்த நபர் அல்ல என்பதே உண்மை. பிசாசானவன் தான் உண்மையான எதிரி. இந்த நாளின் தலைப்பு, "உங்கள் எதிரி, பிசாசு" என்று கூறுகிறது. இருப்பினும், அவன் நம்மைத் தாக்க நம்மைச் சுற்றியுள்ளவர்களை ஈடுபடுத்துகிறான். அவன் நம் வாழ்வில் ரகசியமாக பதுங்கியிருந்து ஊடுருவி ஒரு இடத்தைத் தேடுகிறான்.


அவன் பேதுருவுக்குள் நுழைந்தான், இயேசு, "எனக்குப் பின்னாகப்போ சாத்தான்னே " என்று அதட்டினார். எனவே, எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க நாம் உணர்வுடன் இருக்க வேண்டும்.


நெகேமியா‬ ‭6‬:‭10‬-‭13ல் வேதம் சொல்கிறது,‬

‭“மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன். தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன். நான் பயந்து அப்படிச் செய்து பாவங் கட்டிக்கொள்ளுகிறதற்கும், என்னை நிந்திக்கத்தக்க அபகீர்த்திக்கு முகாந்தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைக்கூலி கொடுத்திருந்தார்கள்.”


நெகேமியாவின் எதிரிகள் ஒரு உளவாளியை அவர் சாதாரணமாக பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் வடிவத்தில் அனுப்பினார்கள். அவனுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் பல வழிகளில் முயற்சித்தார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டார், அதனால் அவர்கள் எதிரிகளால் பணியமர்த்தப்பட்ட அவரிடம் செமாயாவை அனுப்பினார்கள். ஆனால் நெகேமியா ஆவியில் உணர்திறன் உடையவராக இருந்ததால், அவர் எதிரியின் வலையில் சிக்கவில்லை. அவர் தப்பித்து தனது வேலையைத் தொடர்ந்தார்.


நீங்கள் உணர்திறன் இல்லாததால் எத்தனை முறை எதிரியின் வலையில் விழுகிறீர்கள்? எதிரியை உங்கள் மனதில் பதுங்கி உங்கள் செயல்களைக் கட்டுப்படுத்த எத்தனை முறை அனுமதிக்கிறீர்கள்? அவனுக்கு எதிராக ஒரு வலிமையான பாதுகாப்பை உருவாக்க வேண்டிய நேரம் இது. தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை, எனவே தேவனுடன் இணைந்திருங்கள்.


உங்களைச் சுற்றியுள்ள எதிரிகளை வெளிப்படுத்தும்படி தேவனிடம் கேளுங்கள், அதினால் நீங்கள் சிக்கிக்கொள்ளமாட்டிர்கள். யோபு 27:7ல் வேதம் சொல்கிறது, “என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.”


உங்களுக்கு எதிராய் இருக்கும் அத்தனை எதிரிகளையும் தேவன் வெளிப்படுத்துவாராக என்று நான் தீர்க்கதரிசனம் கூறுகிறேன்.


Bible Reading: Numbers 18-20

ஜெபம்

பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, நான் என்னை உமக்குக் ஒப்புக்கொடுக்கிறேன், தீமையிலிருந்து என்னைக் காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். எதிரிகள் எனக்கு எதிராக செய்யும் சோதனைக ளில் எதிர்த்து நிற்க கிருபை தரும்படி ஜெபிக்கிறேன். என் வாழ்க்கையைச் சுற்றி எனக்கு எதிராய் இருக்கும் எதிரிகளின் செயல்களைக் காண என் கண்களைத் திறக்க நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● ஜெபத்தின் நறுமணம்
● ஆவியால் நடத்தப்படுதல் என்றால் என்ன?
● ஜெபத்தில் கவனச்சிதறல்களை எவ்வாறு சமாளிப்பது
● சாந்தம் பலவீனத்திற்கு சமமானதல்ல
● நாள் 09: 40 நாட்கள் உபவாசம் & பிரார்த்தனை
● ஆசீர்வாதத்தின் வல்லமை
● வார்த்தையால் வெளிச்சம் வருகிறது
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய