english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. இயேசுவை நோக்கிப் பார்த்து
தினசரி மன்னா

இயேசுவை நோக்கிப் பார்த்து

Tuesday, 10th of June 2025
0 0 74
Categories : கவனம் (Focus)
“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” எபிரெயர்‬ ‭12‬:‭2 ‭

1960 இல் கனடாவில் ஜான் லாண்டி மற்றும் ரோஜர் பானிஸ்டர் ஆகிய இரு சிறந்த ஓட்டப்பந்தய வீரர்களுக்கு இடையே ஒரு பிரபலமான பந்தயம் நடந்தது. பந்தயத்தின் பெரும்பகுதிக்கு ஜான் லாண்டி முன்னிலை வகித்தார், மேலும் முடிவதற்கு சுமார் இருநூறு மீட்டர்கள் மட்டுமே இருந்தன. ஜான் லாண்டி தனது எதிராளி எங்கு இருக்கிறார் என்று பார்க்க பின்னால் பார்த்தார். அந்த நேரத்தில், ரோஜர் பானிஸ்டர் அவரை கடந்து முன் சென்றார்.

பந்தயத்தில் தோற்று, திரும்பிப் பார்த்த ஓட்டப்பந்தய வீரராக சரித்திரத்தில் இடம் பெற்றார். அவர் தனது சொந்த ஓட்டத்தில் அக்கறை கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் எல்லைக் கோட்டிலிருந்து கண்களை எடுத்து தனது எதிரியைப் பார்த்தார், அதனால் அவர் பந்தயத்தை இழந்தார். வரலாறு மீண்டும் தொடராமல் இருக்க எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் உங்கள் கண்களை உண்மையில் செலுத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

Amplified மொழிப்பெயர்ப்பு  அழகாக சொல்கிறது. “நம்முடைய விசுவாசத்தின் தலைவராகவும் ஆதாரமாகவும் இருக்கும் இயேசுவை [திசையை திருப்பும் எல்லாவற்றிலிருந்தும்] நோக்கிப் பாருங்கள் …(எபிரெயர் 12:2)

தலைவர்கள், போதகர்கள், தீர்க்கதரிசிகள்,  அப்போஸ்தலர்கள் போன்றவர்களை எல்லாம் தேடிக் கொண்டிருந்து ஓட்டத்தை கைவிட்டவர்களும் உண்டு. பின்னர் தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தலைவர் எங்கோ, எப்போதோ, இப்போதும் தோற்றுப்போனார்கள். முற்றிலும் மனம் உடைந்துவிட்டது. அவர்கள் தங்கள் நம்பிக்கையிலிருந்து பின்வாங்கிவிட்டனர்.

நீங்கள் நிச்சயமாக ஒரு தலைவர், ஒரு போதகர் போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்றாலும், அவர் அல்லது அவள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், எங்களுக்கு சரியான உதாரணம் அல்ல. நீங்கள் அவர்களைப் பார்த்து உங்கள் ஓட்டத்தை ஓடாதீர்கள். நீங்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும். அவர் மட்டுமே நமக்கு சரியான உதாரணம். அவரே நமது விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறரார்.

நாம் எதை பார்க்கிறோமோ அது  போல் ஆகிவிடுவோம். நாம் நமது ஓட்டத்தில், இயேசுவின் மீது நம் கண்களை வைத்திருக்கும்போது, ​​தேவன் நம்மீது செயல்படுகிறார், மேலும் நம்மை அவருடைய குமாரனைப் போலாக்குகிறார். இறுதியில், அவர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வெகுமதிக்கு நம்மைக் கொண்டுவருவார்.

Bible Reading: Nehemiah 7-9
ஜெபம்
தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
தந்தையே, இயேசுவின் நாமத்தில், ஓட்டத்தை முடிக்க எனக்கு உதவுங்கள். உமது கிருபைக்கு என் வாழ்க்கையை சாட்சியாக மாற்றுவீராக.


Join our WhatsApp Channel


Most Read
● உங்கள் உண்மையான மதிப்பைக் கண்டறியவும்
● தெய்வீக ஒழுக்கம் - 2
● அவரது அலைவரிசைக்கு இசைதல்
● பயனுள்ள 40 நாட்கள் உபவாச ஜெபத்திற்கான வழிகாட்டுதல்கள்
● காலத்தின் அடையாளங்களை பகுத்தறிவீர்களா?
● வீழ்ச்சியிலிருந்து மீட்புக்கு ஒரு பயணம்
● தேவனின் வல்லமைமிக்க கரத்தின் பிடியில்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய