பாஸ்டர் மைக்கேல் மற்றும் அவருடைய குடும்பம்
1. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், ஆவி உலகில் தெளிவாகக் காண பாஸ்டர் மைக்கேலின் கண்களைத் திறந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, அவருடைய கண்களை, அபிஷேகம் செய்யும்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், உமது குரலை இன்னும் தெளிவாகக் கேட்க பாஸ்டர் மைக்கேலின் காதுகளைத் திறந்தருளும். ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே அவருக்கு பகுத்தறியும் செவிகளைக் கொடுங்கள்.
3. தேவனின் புனித நெருப்பே பாஸ்டர் மைக்கேலின் உதடுகள், நாக்கு மற்றும் வாயைத் தொடுங்கள். உமது வார்த்தையை அவர் தேசங்களுக்கு சரியாகப் பேசும்படியாக அவருக்குப் பரிசுத்தமான வாயைக் கொடுங்கள்.
4. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், பாஸ்டர் மைக்கேல், அவரது மனைவி, குழந்தைகள், தந்தை, மற்ற குடும்பத்தினர்கள் மற்றும் குழுவினரை நான் இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன். அவர்கள் அனைவரையும் சுற்றி நெருப்புச் சுவராக இருங்கள். உமது பரிசுத்த தேவதூதர்களால் அவர்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு எதிராக வரும் எதிரியின் ஒவ்வொரு செயலையும் அழித்து விடுங்கள். அவர்களை எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருங்கள்.
5. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், பாஸ்டர் மைக்கேலின் வாழ்விலும், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் குழுவினர்களிலும் உமது பரிசுத்தம், தூய்மை மற்றும் தாழ்மை இருப்பதற்காக நான் ஜெபிக்கிறேன்.
6. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், பாஸ்டர் மைக்கேல், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் குழுவினர் கள் சரியான நபர்களுடன், சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில் இருக்கச் செய்யுங்கள். அவரையும் மற்றும் அவரது குடும்பத்தினர்களையும் எப்போதும் சரியான நபர்களுடன் இணைந்திருக்கச் செய்யுங்கள்.
7. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், பாஸ்டர் மைக்கேல் தனது மனைவிக்கு நல்ல கணவராகவும், குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும், அவரின் தந்தைக்கு நல்ல மகனாகவும், உலக நாடுகளுக்கு வலிமையான, பயனுள்ள மற்றும் பலனளிக்கும் தலைவராகவும் இருக்கச் செய்யுங்கள்.
8. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், பாஸ்டர் மைக்கேல் பண்பும் மற்றும் நேர்மையும் கொண்ட மனிதராக இருக்க வேண்டும். பண ஆசையிலிருந்து அவரை விலக்கி வையுங்கள். அவர் தன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஒருபோதும்
விரும்பக் கூடாது.
9. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், பாஸ்டர் மைக்கேல் உம்முடைய வார்த்தையில் வளரச் செய்யுங்கள். உம்முடைய வார்த்தையிலிருந்து அவருக்கு இரகசியங்களை வெளிப்படுத்துங்கள்.
10. பிதாவே, இயேசுவின் நாமத்தினால், பாஸ்டர் மைக்கேல் ஜெபத்திலும் உபவாசத்திலும் வளரச் செய்யுங்கள். அவரின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு எதிராக எதிரி கொண்டு வரும் ஒவ்வொரு செயலையும் இயேசுவின் நாமத்தினால் நான் கட்டிப் போடுகிறேன்.
11. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, பரிசுத்த ஆவியின் அனைத்து வரங்களும் அவருக்குள்ளும் அவர் மூலமாகவும் எப்போதும் சிறப்பாகச் செயல்படட்டும். அற்புதமான மற்றும் குறிப்பிடத்தக்க அற்புதங்களை அவர் மற்றும் அவருடைய ஊழியத்தின் மூலம் செய்யுங்கள்.
12.பாஸ்டர் மைக்கேல் ஒவ்வொரு ஆராதனையிலும் பிரசங்கிக்கும் போது அவருடைய தொண்டையும், குரலும் சரியாகவும் மற்றும் நல்லதாகவும் இருக்கவும் மற்றும் பாஸ்டர் மைக்கேல் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வாதமாக இருக்கவும் நான் ஜெபிக்கிறேன்.
13.பாஸ்டர் மைக்கேலுக்காக இந்த ஜெபக் குறிப்புகளை வைத்து ஜெபிக்கும் ஒவ்வொருவரும் அற்புதமான அற்புதங்களையும், பாதுகாப்பையும் மற்றும் தயவையும் பெறுவார்கள் என்று இயேசுவின் நாமத்தினாலே நான் ஆணையிட்டு அறிவிக்கிறேன்.
பாஸ்டர் மைக்கேலின் புத்தகங்கள், பிரசங்கங்கள் மற்றும் பாடல்கள்
1. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவி எப்போதும் பாஸ்டர் மைக்கேல் மீது தங்கியிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உம்முடைய வார்த்தையிலிருந்து ஆழ்ந்த ஆவிக்குரிய நுண்ணறிவுகளை அவருக்குக் கொடுங்கள், இதன் மூலம் அவர் தனது பிரசங்கங்களிலும், புத்தகங்களிலும் அவற்றை எழுத முடியும்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, அவரை எப்போதும் உமது சமாதானத்தால் சூழ்ந்து கொள்ளுங்கள். அவர் எப்போதும் அமைதியான சூழ்நிலையில் இருக்கட்டும். அனைத்து கவனச் சிதறல்களையும் அகற்றி, சக்தி வாய்ந்த பிரசங்கங்களையும் புத்தகங்களையும் எழுதுவதற்கு அவருக்கு நேரத்தையும் மற்றும் கிருபையையும் கொடுங்கள்.
3. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, பாஸ்டர் மைக்கேலின் பிரசங்கங்கள், புத்தகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைத் தொடுங்கள். மக்கள், உமது மகிமைக்காக, அவருடைய பிரசங்கங்களையும், பாடல்களையும் கேட்கும்போதும், அவருடைய புத்தகங்களைப் படிக்கும்போதும், அவர்கள் குணமாக்கப்படட்டும், விடுவிக்கப்படட்டும், இரட்சிக்கப்படட்டும்
4.பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, பாஸ்டர் மைக்கேலின் அனைத்து புத்தகங்களும் சரியாக வடிவமைக்கப்பட்டு மற்றும் அச்சிடப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவருடைய அனைத்து புத்தகங்களும் மற்றும் பிரசங்கங்களும் எந்த விதமான மத உண்மைகளில் தவறு இல்லாமல் இருக்கட்டும் .
5.பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, பாஸ்டர் மைக்கேலின் பிரசங்கங்கள் மற்றும் புத்தகங்களை பல்வேறு மொழிகளில் பிழையில்லாமல் மொழி பெயர்க்கவும் மற்றும் அவை அந்தந்த மொழி குழுக்களை சரியாக சென்றடையட்டும். அவருடைய நூல்களுக்கும் மற்றும் பிரசங்கங்களுக்கும் பொருத்தமான மொழி பெயர்ப்பாளர்களை கொடுக்குமாறு உம்மிடத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் .
ஜெப வீரர்கள்
1. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, ஒவ்வொரு நோவா ஆப் ஜெப வீரர்களையும் அவர்களது குடும்பங்களையும் இயேசுவின் இரத்தத்தினால் மூடுகிறேன். உமது ஆசீர்வாதம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தினர்கள் மீதும் இருக்கட்டும்.
2.பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, நோவா ஆப்பில் அனுப்பப்படும் ஜெப குறிப்புகளுக்காக ஜெபிக்க அவர்களின் இதயங்களைத் தூண்டுங்கள். ஜெப குறிப்புகளுக்காக அவர்கள் ஜெபிக்க நேரத்தையும் மற்றும் கிருபையையும் கொடுங்கள். இரக்கமுள்ள தேவனே, அவர்களின் ஜெபத்தைக் கேளுங்கள்.
3.பிதாவே, உமது வார்த்தையில் "அறுப்பு மிகுதி ஆனால் வேலையாட்களோ கொஞ்சம் " என்று கூறுகிறது. இயேசுவின் நாமத்தினாலே, நோவா ஆப்பில் பெறப்பட்ட ஜெப குறிப்புகளுக்காக ஆர்வத்துடன் ஜெபிக்கும் அதிகமான நோவா ஆப் ஜெப வீரர்களை எழுப்புங்கள்.
ஊழியர்கள்
1. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, KSM இன் ஒவ்வொரு ஊழியர்களும் தெய்வீக ஞானம், புரிதல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் செயல்பட நான் ஜெபிக்கிறேன். அவர்களிடையே சரியான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புக்காக நான் ஜெபிக்கிறேன். ஒவ்வொரு ஊழியர் மீதும் உமது கிருபை மற்றும் தயவின் கரம் இருக்கட்டும்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எதிராக வரும் எதிரியின் ஒவ்வொரு திட்டமும் நெருப்பால் பிடுங்கப்பட வேண்டும்.
3. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, கருணா சதன் ஊழியத்திற்கு உபயோகிக்கும் அனைத்து கருவிகளும் சிறப்பாகச் செயல்படச் செய்யுங்கள். அனைத்து கருவிகளும் முறையாக பராமரிக்கப்பட்டு மற்றும் சேமிக்கப்படட்டும்.
ஜோடி
1.பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, ஜோடி (JODIE) ஆப் பயன்பாட்டிற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த ஆப் பயன்பாட்டின் மூலமாக நீர் பலரின் வாழ்க்கையைத் தொட்டதற்காகவும் மற்றும் மாற்றியதற்காகவும் நான் நன்றி கூறுகிறேன்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, உமது மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர இந்த ஆப் ஐ நீர் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன். நான் ஜோடி (JODIE)ஆப் பயன்பாட்டை இயேசுவின் இரத்தத்தினால் மூடுகிறேன். ஜோடி (JODIE) ஆப் பயன்பாடு அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதில் எந்த பிழைகளும் இருக்கக் கூடாது என்று நான் ஜெபிக்கிறேன்.
3.பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, இந்தியாவின் ஒவ்வொரு டவுண், நகரம் மற்றும் மாநிலத்திலிருந்து வரும் ஒற்றையர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) தங்களை ஜோடி (JODIE) ஆப் இல் பதிவு செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
4.பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, ஜோடி (JODIE) ஆப் இல் பதிவு செய்யப்பட்டவர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து சாத்தானின் தடைகளும் அவர்களை திருமணம் செய்து கொள்ளாமல் தடுக்கின்றவைகளை அழித்துப் போடுங்கள்.
5.பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, ஜோடி (JODIE) ஆப் இல் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபருக்கும், ஜோடி (JODIE) ஆப் மூலமாக நல்ல வாழ்க்கைத் துணைகளைப் பெற நான் ஜெபிக்கிறேன்.
6. ஜோடி (JODIE) ஆப் பயன்பாட்டிற்கு எதிராகவும், ஜோடி (JODIE) ஆப் ஊழியர்களுக்கு எதிராகவும் வரும் எதிரியின் ஒவ்வொரு திட்டமும் இயேசுவின் நாமத்தினாலே துண்டிக்கப்படட்டும்
7.பிதாவே, JODIE ஆப் மற்றும் அதன் நிர்வாகத்தைக் கையாள ஒரு சிறந்த குழுவை உருவாக்குங்கள். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதிமொழிகள் 10:22) இயேசுவின் நாமத்தினாலே
உமது ஆசீர்வாதம் JODIE குழு மீது இருக்கட்டும்.
Join our WhatsApp Channel