ஆசீர்வதிக்கப்பட்ட பரலோகப் பிதாவே,
என் வாழ்க்கையில் இன்னும் ஒரு வருடத்தை கூட்டிக் கொடுத்ததற்காக நான்நன்றிசெலுத்துகிறேன். நான் என் தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்பே நீர் என்னை அறிந்திருந்ததற்காகவும், பரிசுத்த அழைப்புடன் என்னைப் பிரித்தெடுத்து மற்றும்நியமித்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
நான் தற்செயலாக அல்லாமல், ஆனால் ஒரு நோக்கத்துடன்பிறந்தேன். நான் பிரமிக்கத்தக்.அதிசயமாய்உருவாக்கப்பட்டதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். என்னில்ஒருநல்லவேலையைத் தொடங்கிய நீர், இயேசு கிறிஸ்து திரும்பவும் வரும் நாள் வரை அதைத் தொடர்ந்த செய்து,பூரணப்படுத்துவீர் என்பதில் நான் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறேன்.
என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள் எனக்கு முன்னால் உள்ளன என்றும், இந்த ஆண்டும் வரவிருக்கும் நாட்களும் உமது நன்மை மற்றும் கருணையால்முடிசூட்டுவீர் என்று நான் ஆணையிட்டுஅறிவிக்கிறேன். தயவு செய்து எனக்குப் போதித்து, நான் செல்ல வேண்டிய வழியை எனக்குக் கற்றுக் கொடும்.
கர்த்தாவே, என்னை இந்த உலகிற்குகொண்டு வருவதற்ககாரணம இருந்த என் பெற்றோருக்காக நன்றி கூறுகிறேன். என் வாழ்வின் எல்லா நாட்களிலும் அவர்களைக் கனம் பண்ண எனக்குக் கற்றுக் கொடும், அதனால் அது எனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும் மற்றும் நான் ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். என்று இயேசுவின் நாமத்தினாலேஜெபிக்கிறேன். ஆமென்.
Join our WhatsApp Channel