மக்கள் வர வேண்டியதற்காக
ஏசாயா 43:16-ல் "... சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி", என்று உமது வார்த்தை கூறுகிறது.
சண்முகானந்தா மண்டபத்தில் நடக்கும் W3 கூட்டத்திற்கு கர்த்தரின் மக்களை வரவிடாமல் தடுக்கும் இருளின் சக்திகள், தீமையின் ஒவ்வொரு வடிவமும், மற்றும் தடைகளை
இயேசுவின் நாமத்தினாலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் நான் கட்டுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே W3 கூட்டத்திற்கு மக்கள் வருவதற்கு கர்த்தரே வழி செய்யும்.
அப்போஸ்தலர் 13:44ல் “அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங் குறையப் பட்டணத்தாரனை வரும் தேவவசனத்தைக் கேட்கும் படி கூடி வந்தார்கள்“ என்று உமது வார்த்தை கூறுகிறது. நவம்பர் 13ஆம் தேதி அன்று நடக்கும் W3 கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத படி மக்களைத் தடுத்து நிறுத்தும் ஒவ்வொரு சாத்தானின் சங்கிலிகள், சாத்தானின் வலைகள், தீய பணி நிர்வாகிகள் மற்றும் மதப்பிரிவு ஆவிகள் இயேசுவின் நாமத்தினாலே உடைக்கப்படட்டும். கர்த்தாவே அநேகரை கூட்டத்துக்கு அழைத்து வாரும்.
பிதாவே, மும்பை முழுவதும் நல்ல வானிலை நிலவ ஜெபிக்கிறோம், கூட்டத்தின் நாளில் மழை/ வெள்ளம்/ புயல் இருக்கக் கூடாது. நல்ல போக்குவரத்து வசதிக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம்.
பிதாவே, எங்கள் W3 கூட்டத்தின் பேனரைப் பார்க்கும் அனைவரும் இயேசுவின் நாமத்தில் நவம்பர் 13ஆம் தேதி சண்முகானந்தா ஆடிட்டோரியத்தில் நடக்கும் ஆராதனையில் கலந்து கொள்ளச் செய்யும்.
W3 கூட்டத்தைப் பற்றிய ஒவ்வொரு வதந்திகள், பொய்கள், வீண் பேச்சுகள் , கெட்ட எண்ணங்கள், சந்தேகங்கள், தவறாகப் புரிந்து கொள்ளல், காயப்படுத்துதல் மற்றும் பொறாமைகள் அனைத்தும் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள மக்களிடமிருந்து இயேசுவின் நாமத்தில் பிடுங்கப்படட்டும்.
பாஸ்டர் மைக்கேல், அவரது குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றிய ஒவ்வொரு வதந்திகள், பொய்கள், வீண் பேச்சுகள் , கெட்ட எண்ணங்கள், சந்தேகங்கள், தவறாகப் புரிந்து கொள்ளல், காயப் படுத்துதல் மற்றும் பொறாமைகள் அனைத்தும் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள மக்களிடமிருந்து இயேசுவின் நாமத்தில் பிடுங்கப்படட்டும்.
W3 கூட்டத்தைப் பற்றிய ஒரு நல்ல அறிக்கை இயேசுவின் நாமத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகள் முழுவதும் செல்லட்டும்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில் W3 கூட்டத்திற்கு மும்பை, நவி மும்பை மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து மக்களை அழைத்து வாரும்.
செய்தி
பிதாவே, உமது வார்த்தை யாத்திராகமம் 4:12ல் கூறுகிறது "ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்." கர்த்தாவே, நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் W3 கூட்டத்தில் போதகர் மைக்கேலுக்கு சரியான செய்தியைப் பிரசங்கிக்க கிருபை கொடும்.
அவருக்குச் சரியான வார்த்தைகள், சரியான வேதவசனங்கள், சரியான எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றைக் கொடும், இதனால் சாதாரண மக்கள் மற்றும் அறிவாளியான மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.
நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்: W3 கூட்டத்திலுள்ள மக்களின் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, பாஸ்டர் மைக்கேலின் பேச்சும் அவரின் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருக்கும். (1 கொரிந்தியர் 2:4-5)
நான் ஒப்புக்கொள்கிறேன்: கர்த்தராகிய தேவன் பாஸ்டர் மைக்கேலுக்கு இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அவர் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் அவருக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்;. (ஏசாயா 50:4)
பிதாவே, இயேசுவின் நாமத்தில் W3 கூட்டத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி, அதைக் காணும், கேட்கும் அல்லது படிக்கும் அனைவரின் வாழ்க்கையிலும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும். பலனளிக்கட்டும்; உமது வார்த்தையை மக்கள் விசுவாசிக்கட்டும். உமது வார்த்தை மக்களை ஊக்குவிக்கட்டும், மக்களுக்கு கற்பிக்கட்டும்
பிதாவே, இயேசுவின் நாமத்தில் செய்தியை ஆங்கிலத்திலிருந்து இந்திமொழியில் சரியாக மொழி பெயர்க்கட்டும். உமது வார்த்தை பிரசங்கிக்கப்படும் போது ஒவ்வொரு நபரும் குணமடைவதையும், விடுதலையையும் அனுபவிக்கட்டும்
W3 கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களின் மனம் மற்றும் இதயங்களிலிருந்து வார்த்தையைத் திருட முயற்சிக்கும் இருளின் ஆவிகள், தீய சக்திகளை, நான் இயேசுவின் நாமத்தில் கட்டுகிறேன்.
மக்களைத் திசை திருப்ப முயற்சி செய்யும், குழப்பத்தை ஏற்படுத்தும் அல்லது கர்த்தரின் வார்த்தையைக் கேட்பதற்கு அல்லது புரிந்துகொள்வதற்கு மக்களைத் தடை செய்யும், இருளின் ஆவிகள், தீய சக்திகள் ஆகியவைகளை நான் இயேசுவின் நாமத்தில் கட்டுகிறேன்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில் W3 கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் தங்கள் முழு பைபிள்களையும் கொண்டு வரச் செய்யும்.
தீர்க்கதரிசனம்/குணமாகுதல்/விடுதலை/இரட்சிப்பு
பிதாவே, இயேசுவின் நாமத்தில், ஆவி உலகில் தெளிவாகக் காண பாஸ்டர் மைக்கேலின் கண்களைத் திறந்தருளும்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது குரலை பாஸ்டர் மைக்கேல் தெளிவாகக் கேட்க அவரின் காதுகளைத் திறந்தருளும்.
பாஸ்டர் மைக்கேலின் வாய், உதடுகள் மற்றும் நாக்கை புனிதப்படுத்துங்கள். பரலோகத்தின் நெருப்பே அவருடைய வாயைத் தொடும்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில், தீர்க்கதரிசனத்தின் வரம், அறிவின் வார்த்தை, ஞானத்தின் வார்த்தை மற்றும் விசுவாசத்தில் போதகர் மைக்கேலுடனும், அவர் மூலமாகவும் சக்திவாய்ந்த முறையில் செயல்படச் செய்யும்.
கர்த்தாவே, உம் வசனம் கூறுகிறது, "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." (யோவான் 16:13)
ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே, இயேசுவின் நாமத்தில், பாஸ்டர் மைக்கேலுக்கு எதிர்கால நிகழ்வுகளை துல்லியமாகவும் மற்றும் குறிப்பாகவும் வெளிப்படுத்தும். அவரை இந்த தேசத்திற்கும் மற்றும் உலக நாடுகளுக்கும் உமது தீர்க்கதரிசியாக ஆக்கும். W3 கூட்டத்தில் அவருக்கு துல்லியமான, குறிப்பிட்ட மற்றும் விரிவான தீர்க்கதரிசனங்களை வழங்கும்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில், W3 கூட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் உம்மை ஆவியிலும் மற்றும் உண்மையிலும் ஆராதிக்கும் படி செய்யும்.
W3 கூட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களை பிடித்து வைத்திருக்கும் ஒவ்வொரு இருளின் சங்கிலியும் இயேசுவின் நாமத்தில் உடைக்கப் படட்டும்.
மக்கள் ஒவ்வொரு வியாதி, நோய் மற்றும் வலியிலிருந்தும் குணமடைவார்களாக. தேவன் புதிய உறுப்புகளையும் மற்றும் உடல் உறுப்புகளையும் உருவாக்குவாராக.
அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுவிக்கப்படட் டும்.
அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு சாபமும் உடைக்கப்படட் டும்.
போதையின் சங்கிலிகளை உடைத்தருளும்.
அடையாளங்கள், அதிசயங்கள் மற்றும் அற்புதங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.
கடவுளை மகிமைப்படுத்தும் படியாக மக்கள் சாட்சிகளுடன் முன் வர வேண்டும்.
ஆடிட்டோரியம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில் சண்முகானந்தா ஆடிட்டோரியத்தை இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் மூடுகிறோம். மண்டபத்திலும், மண்டபத்தைச் சுற்றியுள்ள ஒவ்வொரு இருளின் ஆவியும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படட்டும்.
சண்முகானந்தா ஆடிட்டோரியம் தொடர்பான அனைத்து அதிகாரிகளையும் இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் மூடுகிறோம். அவர்கள் எங்களுக்கு சாதகமாக இருக்கவும், எங்களோடு ஒத்துழைக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம்.
பிதாவே, உமது வார்த்தை கூறுகிறது, "தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்." (ஆதியாகமம் 1:2). கர்த்தாவே, உமது ஆவி முழு ஹால் மீதும் W3 கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் அசைவாடட்டும்.
ஒலி
பிதாவே, W3 கூட்டத்திற்கான ஒலி அமைப்பு உயர் தரத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். பயன்படுத்தப்படும் அனைத்து ஒலி உபகரணங்களையும் இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் மூடுகிறோம்.
ஊடகம்
பிதாவே, சரியான ஊடகங்கள் அமைக்க நாங்கள் ஜெபிக்கிறோம். எல்லா புரொஜெக்டர்/திரைகளையும் இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் மூடுகிறோம்.
பிதாவே, W3 கூட்டத்திற்கு சரியான கேமரா உபகரணங்களைப் பயன்படுத்த நாங்கள் ஜெபிக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளும் சரியாக படமாக்கப்ப டட்டும்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில், ஒலி மற்றும் ஊடகக் குழுவிற்கு இடையே சரியான ஒருங்கிணைப்புக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களுக்கு இடையே சமாதானமும் மற்றும் புரிந்து கொள்ளுதலும் இருக்கட்டும்.
தொண்டர்கள்
பரலோகப் பிதாவே, W3 கூட்டத்தில் வந்து உதவ விருப்பமுள்ள தொண்டர்களின் படையை நீங்கள் எழுப்ப வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
W3 கூட்டத்திற்கு தொண்டர்களாக தங்களைப் பதிவு செய்த ஒவ்வொரு நபரையும் இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் மூடுகிறோம். நான் அவர்களின் வீடுகளையும் மற்றும் குடும்பங்களையும் இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன். அவர்களுக்கு எதிராக வரும் பிசாசின் அனைத்து செயல்களும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படட்டும்.
பிதாவே, ஒவ்வொரு தொண்டரையும் உங்கள் ஞானம் மற்றும் புரிந்து கொள்ளுதலின் ஆவியால் நிரப்பும், இதனால் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு வேலையையும் இயேசுவின் நாமத்தில் சிறப்பாகச் செய்வார்கள்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில், தொண்டர்கள் குழுவை வழிநடத்தும் அனைத்து தொண்டர் தலைவர்களையும் ஆசீர்வதிக்கும் படி நாங்கள் ஜெபிக்கிறோம். உங்கள் ஞானத்தையும் மற்றும் புரிந்து கொள்ளும் ஆவியையும் அவர்களுக்குக் கொடும்.
இசைக்குழு, பாடகர் குழு மற்றும் துதி பாடும் குழு
W3 கூட்டத்திற்காக KSM இசைக்குழுவின் பகுதியாக இருக்கும் ஒவ்வொரு நபரையும் நான் இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன். அவர்களுக்கு எதிராக வரும் பிசாசின் அனைத்து செயல்களும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படட்டும்.
பிதாவே, W3 கூட்டத்தில் சரியான பாடல்களைப் பாடுவதற்காக நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, W3 கூட்டத்தில் இயேசுவின் நாமத்தில் உமது ஆவியின் வல்லமையால் துதியையும் மற்றும் ஆராதனையையும் அபிஷேகம் செய்யும்.
நிதி
கர்த்தாவே, நீர் யெகோவா யீரே - கொடுக்கும் தேவன். W3 அவுட்ரீச் சேவைக்கு ஏராளமான நிதிகளைத் தாரும்.
நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்: தேவன் இரக்கமுள்ளவர் மற்றும் இயேசுவின் நாமத்தில் W3 அவுட்ரீச்க்கு தொடர்பான அனைத்து தேவைகளையும் வழங்குவார்.
பிதாவே,W3 அவுட்ரீச் சேவைக்கு தாராளமாகவும் மற்றும் ஏராளமாகவும் கொடுக்க மக்களின் இதயங்களைத் தூண்டும். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதிமொழிகள் 10:22). உமது ஆசிர்வாதம் உமது வேலைக்காக கொடுக்கும் ஒவ்வொருவரின் மேலும் இருக்கட்டும். இயேசுவின் நாமத்தில் அவர்களிடமிருந்து வறுமை, குறைபாடு மற்றும் பற்றாக்குறை அனைத்தையும் அகற்றும்.
பிதாவே, தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் (1 கொரி.14:33). W3 கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற ஜெபிக்கிறோம். நீர் எப்போதும் உமது குழந்தைகளுக்கு சிறந்ததை கொடுக்க விரும்புகிறீர். "ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7:11)
பதிவு செயல்முறை
பிதாவே, பலர் இருக்கையை முன்பதிவு செய்து கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
W3 கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கையை முன்பதிவு செய்த ஒவ்வொருவரையும் இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் மூடுகிறோம். நான் அவர்களின் வீடுகளையும் மற்றும் குடும்பங்களையும் இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன்.
பாதுகாப்பான பயணம்
பிதாவே, W3 கூட்டத்தின் ஆராதனையில் கலந்து கொள்ள ஆடிட்டோரியத்திற்கு வரும் பாஸ்டர் மைக்கேல் மற்றும் மக்களின் பயணம் பாதுகாப்பான பயணமாக இருக்க இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஆணையிடுகிறோம். நான் வாகனம், ரயில், விமானம் போன்றவற்றை இயேசுவின் நாமத்தில் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால் மூடுகிறேன்.
கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் பயணத்தின் போது சாலையில் / ஆகாயத்தில் எந்தவிதமான விபத்துக்களும் நேரிடாமல் இருக்க உமது தேவதூதர்கள் அனைவரும் முன்னேறிச் செல்ல நாங்கள் அதிகாரத்துடன் ஆணையிடுகிறோம்.
தெய்வீக இணைப்பு
பிதாவே, பாஸ்டர் மைக்கேல் மற்றும் கருணா சதன் ஊழியங்களுக்கு தெய்வீக தொடர்புகள் மற்றும் முன்னேற்றங்களின் புதிய அத்தியாயத்தை திறந்தருளும்.
பிதாவே, பாஸ்டர் மைக்கேல் மற்றும் அவரது குடும்பத்தை இயேசுவின் நாமத்தில் விதியை உயர்த்துபவர்கள் மற்றும் விதி உதவியாளர்களுடன் இணைத்தருளும் .
Join our WhatsApp Channel