அன்புள்ள பிதாவே,
நான் உம்மை ஆராதிக்கிறேன், ஏனென்றால் நீர் உயிருள்ள தேவன். உமது வேதவார்த்தையை வாசிக்கவும், படிக்கவும், தியானிக்கவும் நீர் எனக்குக் கொடுத்த பாக்கியத்திற்கு நன்றி. உமது ஆவியை என்மேல் ஊற்றி, உமது வார்த்தையை எனக்குத் தெரியப்படுத்தும்.
ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே, என்னை எல்லா உண்மையிலும் வழிநடத்தும். உமது போதனையின் குரலைத் தெளிவாகக் கேட்க என் செவிகளைத் திறந்தருளும். இன்று உமது வார்த்தையின் மூலம் என்னோடு பேசும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே, மகிமையின் பிதாவே, எனக்கு ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியைத் தந்து, உமது வார்த்தையில் உள்ள அற்புதமான விஷயங்களைக் காண என் புரிதலின் கண்களை தெளிவுறுத்தும்.
உமது வார்த்தை என் வாழ்வின் அங்கமாகி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலிலும் குணத்திலும் என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றட்டும். என் வாழ்வில், என் குடும்ப உறுப்பினர்களில், என் சுற்றுப்புறத்தில் உமது வார்த்தை நூற்றுக்கணக்கான பலனைத் தருவதற்குத் தடையாக இருக்கும் எதையும் இப்போது வேரோடு பிடுங்கி எறிந்து விடும்.
Help me hide Your Word in my heart that I may live in victory over sin, the world and the devil.
நான் பாவம், உலகம் மற்றும் பிசாசு மீது வெற்றியுடன் வாழ உமது வார்த்தையை என் இதயத்தில் மறைத்து வைக்க எனக்கு உதவும்.
Let it be done to me according to Your Word. Speak Lord Your servant is listening. In Jesus’ Name, I pray. Amen.
உமது வார்த்தையின்படி எனக்குச் செய்யக்கடவது. சொல்லும் கர்த்தாவே உமது அடியேன் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
[Now pray in tongues for some time]
[இப்போது சில நேரம் அந்நிய பாஷைகளில் பேசி ஜெபியுங்கள்]
Scripture References:
[Proverbs 1:23, John 16:13, Revelation 3:22, Ephesians 1:17-18, Romans 12:2, Matthew 15:13, Psalm 119:11, Luke 1:38, 1 Samuel 3:10]
வேத குறிப்புகள்:
[நீதிமொழிகள் 1:23, யோவான் 16:13, வெளிப்படுத்துதல் 3:22, எபேசியர் 1:17-18, ரோமர் 12:2, மத்தேயு 15:13, சங்கீதம் 119:11, லூக்கா 1:38, 1சாமுவேல் 3:10]
Join our WhatsApp Channel