இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நமது கல்வியாளர்களை கௌரவிப்பதற்கும் மற்றும் நன்றி தெரிவிப்பதற்காகவும் நினைவுகூரப்படுகிறது, ஏனென்றால் அவர்களின் அறிவுறுத்தல்கள் நம்மை சிறந்த மனிதனாக உருவாக உதவு கிறது.
மும்பை மற்றும் நவி மும்பை ஆசிரியர்களுக்கு கருணா சதன் சேவை ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அதன் சில சிறப்பம்சங்கள்.
இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். (சங்கீதம் 22:3). கருணா சதன் ஆராதனைக் குழுவினர் அவரது நாமத்தை உயர்த்தி பாடினர். அங்கே கர்த்தரின் ஒரு அற்புதமான பிரசன்னம் இருந்தது.
"மிகப்பெரிய ஆசிரியரைப் பின்பற்றுதல்" என்ற தலைப்பில் ஒரு சக்திவாய்ந்த பிரசங்கத்தை போதகர் மைக்கேல் பகிர்ந்து கொண்டார்.
ஏராளமான ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த பெரிய விழா தொடக்கத்தில், கேக் வெட்டி ஆசிரியர்களை கவுரவித்து மற்றும் பாராட்டினார்கள்
பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் சுவையான ரசமலை கேக் வழங்கப்பட்டது.
"ஒரு நேரத்தில் ஒரு குழந்தையை மாற்றி ஆசிரியர்கள் உலகையே மாற்றுகிறார்கள்" என்ற பழமொழி எவ்வளவு சரியானது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக திருமதி தெரசா கோயிஸ் குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் எடுத்த நேர்மையான முயற்சிகளை பாஸ்டர் மைக்கேல் மற்றும் பாஸ்டர் அனிதா ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.
பாஸ்டர் மைக்கேலையும், 23 ஆண்டு காலமாக கரத்தரின் வார்த்தைகளை போதித்ததற்காக, கருணா சதன் குழுவினர் கௌரவித்துள்ளனர்.
KSM ஸ்கேனிங் குழு பாஸ்டர் மைக்கேல் அவர்களை பரிசு வழங்கி கௌரவித்தது
KSM ஊழியர்கள் பாஸ்டர் மைக்கேல் அவர்களை பூங்கொத்து கொடுத்து கெளரவித்தனர்
சிற்றுண்டி வழங்கப்பட்டது. கருணா சதன் தொண்டர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர். மிக்க நன்றி!!
ஆசிரியர் தின நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு மற்றும் மரியாதையின் அடையாளமாக பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கர்த்தர் இந்த பேனாக்களை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று பாஸ்டர் மைக்கேல் அவர்கள் ஜெபித்தார்.
ஆசிரியர்களுக்கு பேனா விநியோகிக்கும் தொண்டர்கள்
இந்த பேனாக்களை நீங்கள் பயன்படுத்தும்போது ஒரு திருப்புமுனையை எதிர்பார்க்கலாம். உங்கள் சாட்சி கர்த்தரை மகிமைப் படுத்தும் .
நிகழ்ச்சியின் முடிவில், போதகர் மைக்கேல் அனைத்து ஆசிரியர்களுக்காகவும் கைகளை வைத்து தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்தார். ஆவியால் நிரப்பப்பட்டதாகவும், முன்பு எப்போதும் இல்லாத வகையில் கரத்தரி ன் வல்லமையை அனுபவித்ததாகவும் பலர் சாட்சியளித்தனர்.
ஆல் செட்!!🎊 அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசுகள் பேக் செய்து தயார் நிலையில் வைக்கப் பட்டது. . இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்ததற்காக KSM ஊழியர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆயிஷா டிசோசா அவர்கள் எங்கள மாலை நேர கொண்டாட்டத்தின் உற்சாகமான தொகுப்பாளர், எல்லா ஆசிரியர்களையும் உற்சாகத்தோடு எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைத்தார்
ஆசிரியர் தினத்தின் கேளிக்கை நேரம் - தொப்பி விளையாட்டு
தொப்பி விளையாட்டு வெற்றியாளர்களுக்கு பாஸ்டர் அனிதா அவர்கள் பரிசுகளை வழங்கினார்🎩 வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் 🥳
மிக உயர்ந்த யூகங்களைக் கொண்ட ஆசிரியர் குழுவிற்கு பாஸ்டர் மைக்கேல் மற்றும் பாஸ்டர் அனிதா அவர்கள் வெகுமதி அளிக்கிறார்கள்.
இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளை உங்களால் யூகிக்க முடியுமா ?
எங்கள் ஆசிரியர்கள் செய்த இந்த சிகை அலங்காரங்களை பாருங்கள்! கற்றுகொடுப்பதில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல 😁 வீட்டில் உள்ள திறமையான ஆசிரியர்கள்🎉
பகிர்ந்து கொள்வதே வெற்றியின் சிறப்!🤩
இதோ ... சிகை அலங்காரம் விளையாட்டின் வெற்றியாளர்கள் 💇🏻
நடன விளையாட்டில் வெற்றி பெறும் ஆசிரியர்கள், தாங்கள் உள்ளத்தில் குழந்தைகளாக இருப்பதாக காண்பிக்கிறார்கள் #teachersday #happyteacherday
நடன விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் பாஸ்டர் அனிதா அவர்களிடமிருந்து பரிசு களைப் பெற்றனர்🎉 உற்சாகமாக ஆசிரியர்கள் விளையாட்டில் பங்கு கொண்டதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது
👯
மேலும், எல்லாவற்றிலும் சிறந்த ஆசிரியரான கர்த்தராகிய இயேசுவை, வாவ் (WOW) சர்வீஸ், மும்பை, பாந்த்ராவில் உள்ள குழந்தைகள், பாடிப் போற்றினர். குழந்தைகள் கையால் செய்யப்பட்ட கிரீட்டிங் கார்டை பாஸ்டர் மைக்கேல் அவர்களுக்கு வழங்கினர்.
குறிப்பாக மாணவர்களுக்கு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் சேவை செய்யும் ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். நிகழ்ச்சி முடிவடைந்ததும், போதகர் மைக்கேல் மற்றும் பாஸ்டர் அனிதா ஆகியோர் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து, அவர்களின் எதிர்காலம் வளமாக அமைய வாழ்த்தினார்கள்.🙏
Join our WhatsApp Channel
கருத்துகள்