குறுத்தோலை ஞாயிறு என்பது உயிர்த்தெழுதலுக்கு முந்தைய ஞாயிறு.
ஆண்டவராகிய இயேசு எருசலேமுக்குள் இரட்சகராகவும் ராஜாவாகவும் வெற்றிகரமாகப் பிரவேசித்ததை நாம் நினைவுகூர்ந்து கொண்டாடும் நாள் இது.
வேதம் கூறுகிறது, “இயேசு கழுதையின் மீது ஏறி எருசலேம் நகருக்குச் சென்றபோது, திரளான மக்கள் கூடி, பனை மரக்கிளைகளையும் அவர்களின் மேலங்கிகளையும் சாலையின் குறுக்கே விரித்து, இயேசுவுக்கு ராஜ மரியாதை அளித்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோதரிக்கப்பட்டவர்!உன்னதத்திலே ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்
(மத்தேயு 21:8-9)
கருணா சதன் சிறுவர்கள் "ஆடைகள் மற்றும் குறுத்தோலைகளை பயன்படுத்தி நடனம் ஆடியது கிறிஸ்துவின் பவனியை நேரடியாக கண்முன்னே கொண்டு வந்தது. குழந்தைகளை சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
Join our WhatsApp Channel
கருத்துகள்