Daily Manna
0
0
66
கடவுளை மகிமைப்படுத்தி உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்
Monday, 30th of June 2025
Categories :
அந்நிய பாஷைகளில் பேசுங்கள் ( Speak in Tongues)
“அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.” அப்போஸ்தலர் 10:45-46
நாம் எதையாவது மகிமைப்படுத்தும்போது அதை பெரிதாக்குகிறோம். ஆனாலும், தேவன் மாறாதவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்; தேவனைப் பற்றிய நமது பார்வையே மாற்றப்படுகிறது; தேவன் அப்படியே இருக்கிறார். இருப்பினும், அந்நிய பாஷைகளில் பேசுவது தேவனைப் பற்றிய நமது உணர்வை மாற்றுகிறது, இது நமக்கு நல்லது.
இந்த வாழ்க்கையின் கவலைகளும் போராட்டங்களும் அவர்கள் மீது சந்திக்கும் போது, அவர்கள் பிரச்சனையை பெரிதாக்கத் தொடங்குகிறார்கள். நிலைமை எவ்வளவு பெரியது, எவ்வளவு மோசமானது, எவ்வளவு நம்பிக்கையற்றது என்று அவர்கள் பேசுகிறார்கள். தேவனை பெரிதாக்குவதற்கு பதிலாக பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள். நாம் அந்நியபாஷைகளில் பேசும்போது, அதற்கு பதிலாக தேவன் மகிமைப்படுத்தப்படுவார்.
“சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது”
1 தீமோத்தேயு 4:8 l
நம் சரீரம் சரியாகவும் திறம்படவும் செயல்பட உடற்பயிற்சி தேவைப்படுவது போல், நம் நம்பிக்கைக்கும் தினசரி உடற்பயிற்சிகள் தேவை. உடற்பயிற்சி மூலம், ஒருவர் தனது உடலை கட்டமைக்க முடியும். அதுபோலவே, உங்கள் விசுவாசத்தைப் பயிற்சிவிக்கும்போது அதை வளர்த்து, கட்டியெழுப்புகிறது.
“நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,”
யூதா 1:20
நாம் அந்நியபாஷைகளில் ஜெபிக்கும்போது, நம்முடைய விசுவாசத்தின் உயர்ந்த நிலைக்கு நம்மைக் கட்டியெழுப்புகிறோம், அதன் மூலம் நமது விசுவாசத்தைத் தூண்டி செயல்படுத்துகிறோம்.
Bible Reading: Psalms 48-55
Confession
என்னில் ஒரு நற்கிரியை ஆரம்பித்த கர்த்தர், இயேசு கிறிஸ்துவின் நாளில் அதை நிறைவேற்றுவார் என்று நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் அந்நியபாஷைகளில் பேசும்போது, நான் கர்த்தரை மகிமைப்படுத்துகிறேன், அவர் பெரியவரும் போற்றப்படத்தக்கவருமாக இருக்கிறார். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● துக்கத்திலிருந்து கிருபைக்கு நகருதல்● மற்றவர்களுக்கு கிருபையை புரியுங்கள்
● நமது ஆவிக்குரிய வாளை காத்தல்
● மேற்கொள்ளூம் விசுவாசம்
● ஆவிக்குரிய எற்றம்
● கத்தரிக்கும் பருவங்கள்- 3
● தேவனுடைய வார்த்தை உங்களை புண்படுத்த முடியுமா?
Comments