யோசபாத் ராஜா தன் சேனைக்கு முன்னால் தேவனைத் துதித்து பாடும் பாடகர் குழுவை அனுப்பினான். ஒரு பாடகர் குழு ஒரு இராணுவத்தை வழிநடத்துவதை கற்பனை செய்து பாருங்கள். அவர் சந்தேகத்திற்கு இடமின்றி துதித்து பாடுபவர்களை அவர்களின் மரணத்திற்கு அனுப்பவில்லை. அவர் தீர்க்கதரிசன பாடலைக் குறித்த ஒரு வெளிப்பாடு இருந்தது, அப்படியே நீங்களும் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையால் அவர் ஏற்கனவே பெற்ற வெற்றியை அறிவிக்க அவர்களை அனுப்பினார்.
“அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.” 2 நாளாகமம் 20:22-23
அவர்கள் தீர்க்கதரிசனப் பாடலைப் பாடத் தொடங்கியவுடன், அவர்களின் எதிரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கினர். எதிரி முகாமில் குழப்பம் ஏற்பட்டது. தேவனைத் துதிக்கும் பாடலைத் தவிர எந்த ஆயுதமும் இல்லாமல் வெற்றி பெற்றார்கள்.
இது கடைசி காலத்தில் நடக்கப் போகிறது. தேவசபை தீர்க்கதரிசன ஆராதனையின் மண்டலத்திற்குள் நுழையத் தொடங்கும் போது, எதிரிகளின் முகாமில் குழப்பம் ஏற்படும். தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வார்கள்.
உங்களுக்கு எதிராக நரகம் அனைத்தும் உடைந்து போவது போல் உணரும்போது, சத்துருவுக்கு எதிராக பரலோகத்தை திறந்து, ஒரு தீர்க்கதரிசன துதிப்பாடலால் சத்துருவை வெல்லுங்கள்.
சங்கீதம் 149:5-9 தேவப் பிள்ளைகள் பாடி தேவனைத் துதிக்கும்போது வேதம் நமக்குச் சொல்கிறது; அது அவர்களின் எதிரிகளை பழிவாங்கும் கூர்மையான வில்லைப் போன்றது. அந்தகாரப் பொல்லாத வல்லமைகள் கட்டப்படுகின்றன. மேலும், அவருடைய நாமத்தை விசுவாசிக்கிற அனைவருக்கும் அது மகிமையான பாக்கியம் என்று வேதம் சொல்கிறது.
துதித்து பாடுவது நல்ல உணர்வைப் பற்றியது அல்ல, நிச்சயமாக நன்றாக ஒலிப்பதைப் பற்றியது அல்ல. தேவனைத் துதித்து பாடுவதற்கு நீங்கள் பாடகராகவோ அல்லது இசைக்கலைஞராகவோ இருக்க வேண்டியதில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பற்றிக்கொள்ளவும், அவருக்கு பரலோக துதிகளை ஏறெடுங்கள். ஏதோ பெரிய காரியம் நடக்கப் போகிறது!
Bible Reading: Isaiah 6-9
Prayer
ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே என்னைப் பிடித்து, என்னில் துதியை பிறப்பிப்பீராக. என் துதி உமது பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படட்டும். இயேசுவின் நாமத்தில். (இப்போது ஒரு பாடலுடன் தேவனை ஆராதித்து நேரத்தை செலவிடுங்கள்)
Join our WhatsApp Channel

Most Read
● யுத்தத்திற்க்கான பயிற்சி - 1● அந்தப் பொய்களை அம்பலப்படுத்துங்கள்
● பாலியல் சோதனைகளை எவ்வாறு மேற்கொள்வது
● ஆண்டவரே, கவனச்சிதறல்களிலிருந்து என்னை விடுவியும்
● பணம் குணத்தை பெருக்கும்
● அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 1
● சிறந்து விளங்குவது எப்படி
Comments