Daily Manna
0
0
55
உங்கள் முழு திறனை அடையுங்கள்
Tuesday, 5th of August 2025
Categories :
சிறப்பு (Excellence)
“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” சங்கீதம் 139:14
உங்கள் உன்னதத் திறனை நீங்கள் அடைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இப்போது நீங்கள் அப்படிப் பேசும்போது, நம் சொந்த கிறிஸ்தவ சகோதரர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம் நமது ஆரம்ப நிலைதான்; கிறிஸ்துவைப் பின்பற்றவேண்டுமானால் நாம் கற்பிக்கப்பட்டிருப்பது தாழ்ந்தவராகவும் முக்கியமற்றவராகவும் இருக்க வேண்டும் என்பதே.
“ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்பது முற்றிலும் உண்மை (யாக்கோபு 4:6). உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் விட நீங்கள் thaan சிறந்தவர் என்று நீங்கள் நினைப்பதை கர்த்தர் விரும்புவதில்லை என்பதே இந்த வேத வசனத்தின் பொருள் - அது பெருமை. இருப்பினும், நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
ஒருவர் இப்படி சொன்னது சரிதான். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நேசிக்கிறார், ஆனால் அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அவ்வாறே இருக்க முடியாது. நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த முறையில், பிதா மகிமைப்படுத்தப்படுகிறார். (யோவான் 15:8)
தேவன் உங்களிடம் கேட்கும் எதையும் நீங்கள் செய்ய வல்லவர் என்று நம்புவது பெருமை அல்ல; அது விசுவாசம்!
“நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், ராஜாக்களைப் போல விருந்து புசிப்பீர்கள்.” (ஏசாயா 1:19 MSG) ஒரே நிபந்தனை, எந்த நேரத்திலும் நம் வாழ்க்கையில் தேவனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிவதுதான். தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார், பாலைவனத்தில் அல்ல. அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தவர்கள் ராஜாக்களைப் போல் வாழ்ந்தார்கள்.
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். இது உங்கள் வாழ்க்கையில் கவலையையும் பயத்தையும் கொண்டு வரும். இருப்பினும், உங்களில் உள்ள சிறந்ததை வெளிக்கொணடு வர நீங்கள் தேவனை அனுமதிக்கும் போது, உங்களை சிறந்தவராக மாற்றுவார், விவரிக்க முடியாத நிறைவையும் திருப்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு (ரோமர் 1:17), பலத்திலிருந்து பலத்திற்கு, மகிமையிலிருந்து மகிமைக்கு முன்னேறுவீர்கள். (2 கொரிந்தியர் 3:16-18). தேவனின் பிள்ளைகளாக நாம் கொண்டிருக்கும் உயர்வு, மாற்றம், மகிமைப்படுத்தல் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான முடிவற்ற சாத்தியத்தை இந்த வேத வசனங்கள் பிரதிபலிக்கின்றன.
Bible Reading: Isaiah 45-48
Prayer
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது பாதையில் விடாமுயற்சியுடன் இருப்பதற்கான திறனை எனக்குத் தாரும், எல்லா நேரங்களிலும் உமது நோக்கத்தில் உறுதியாகத் தொடர உதவும். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● கடைசி காலத்தின் 7 முக்கிய தீர்க்கதரிசன அடையாளங்கள்: #2● தூரத்தில் பின்தொடர்கிறது
● நாள் 28: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● இன்றைய காலத்தில் இதைச் செய்யுங்கள்
● உங்களுக்கு ஏன் ஒரு வழிகாட்டி தேவை
● மூன்று மண்டலங்கள்
● கடனில் இருந்து விடுபடுங்கள் : திறவுக்கோள் # 1
Comments