Daily Manna
0
0
7
இயேசு இப்போது பரலோகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
Sunday, 10th of August 2025
Categories :
பிரார்த்தனை (Prayer)
மன்றாட்டு (Intercession)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்போது பரலோகத்தில் இருக்கிறார், உங்களுக்காகவும் எனக்காகவும் பரிந்து பேசுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
எபிரேயர் 7:25 நமக்குச் சொல்கிறது, “மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”
மேலும் ரோமர் 8:34 நமக்கு சொல்கிறது, “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.”
இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இயேசுவின் ஊழியம் மணன்றாடுவது, மன்றாடுவது இயேசுவின் ஊழியம் என்றால், அது நம்முடைய ஊழியமாகவும் இருக்க வேண்டும், மன்றாட்டு ஊழியம் இறுதிக்கால ஊழியம்.
இயேசு சிங்காசனத்தின் முன் பரிந்து பேசுகிறார் என்பது, இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதையும், நம்முடைய பரிபூரண பிரதான ஆசாரியராக பிதாவிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார் என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
பழைய ஏற்பாட்டில், பிரதான ஆசாரியர்கள் மக்கள் சார்பாக செயல்பட நியமிக்கப்பட்டனர்.
1. அவர்கள் இஸ்ரவேலர்களுக்காக பாவநிவாரண பலிகளை கொண்டுவந்து அவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டியிருந்தது.(எபிரெயர் 5:1).
2. ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருந்தது.
3. ஆசாரியர்கள் இறந்துவிட்டார்கள், எனவே புதிய ஆசாரியர்கள் நியமிக்கப்பட வேண்டியிருந்தது (எபிரேயர் 7:23).
வித்தியாசம் என்னவென்றால்:
1. இயேசு ஒரே ஒரு முறை பலியை கொண்டு வர வேண்டும்.அவர் பின்னர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார். இது அவருடைய தியாக மரணத்தின் நித்திய மதிப்பை நமக்கு காட்டுகிறது.
2. அவர் நித்திய நித்தியமாய் உயிரோடிருப்பதால், அவர் முடிவில்லாமல் நமக்காக பரிந்து பேச வல்லவராயிருக்கிறார்.
இயேசுவின் பரிந்துரையின் ஊழியம் சாத்தானின் செயல்பாட்டை எதிர்க்கிறது, அவன் தேவனுக்கு முன்பாக எப்போதும் நம்மைக் குற்றம் சாட்டுகிறான் (வெளிப்படுத்துதல் 12:10).
ஒருவேளை ஏதோ உங்களைத் தொந்தரவு செய்திருக்கலாம், அதினிமித்தம் சமாதானம் இல்லை. இப்போது இயேசு உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் பரிந்து பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Bible Reading: Isaiah 65-66 ; Jeremiah 1
Prayer
கர்த்தராகிய இயேசுவே, பிதாவுக்கு முன்பாக என்னைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், நீர் எப்போதும் எனக்காகப் பரிந்து பேசுகிறீர். இந்த ஆறுதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், பரிந்து பேசவும் எனக்கும் கற்றுத்தாரும். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● பெந்தெகொஸ்தே நாளுக்காக காத்திருக்கிறது● ஆராதனையை ஒரு வாழ்க்கைமுறையாக மாற்றுதல்
● நாள் 15: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● நாள் 39:40 நாட்கள் உபவாச ஜெபம்
● பந்தயத்தில் ஓடுவதற்கான உத்திகள்
● இயேசு ஏன் கழுதையிiன் மேல் பவனி வந்தார்?
● விடாமுயற்சியின் வல்லமை
Comments