Daily Manna
0
0
581
நடக்க கற்றுக்கொள்வது
Friday, 3rd of May 2024
Categories :
ஆன்மீக நடை (Spiritual Walk)
”நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.“ ஓசியா 11:3
ஆழமான வாழ்க்கை மாற்றத்திற்கான மிக முக்கியமான கூறுகளில் ஒன்று, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நடக்க (வாழ) கற்றுக்கொள்வது. இவ்வுலகில் எப்படி மனிதனாக வாழ வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டியது போல, தேவனின் உலகில் ஆவிக்குரிய மனிதர்களாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். சரீர ரீதியாக எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டது போல் ஆவிக்குரிய ரீதியில் எப்படி நடக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் பெற்றோர் சரீர ரீதியாக எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்கள், எனவே ஆவிக்குரிய விதத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறர்.
எல்லாவற்றிலும் தேவனை பிரியப்படுத்தும் வகையில் நாம் நடக்க வேண்டும் என்றால், அவரைப் பற்றிய அறிவைப் பெருக்கிக் கொண்டு நடக்க வேண்டும். அப்போஸ்தலன் பவுல், சபை உறுப்பினர்களுக்காக ஜெபித்தார். “இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,“
கொலோசெயர் 1:9-10
உங்கள் சிந்தனையை அறிவிப்பத மட்டுமல்லாமல், உங்கள் மனதை மீண்டும் திட்டமிடவும் வேதத்தை அனுமதியுங்கள்.
தேவனுடன் நடப்பதன் மற்றொரு முக்கியமான குணம் கற்றுக்கொள்ள கூடிய இ௫தயம். இது நாம் ஏற்கனவே அவரில் அடைந்ததைத் தக்கவைத்துக்கொள்ளவும், நாளுக்கு நாள் அவருடன் தீவிரமாக ஈடுபடவும் உதவும்.
பரிசேயர்களின் மிகப் பெரிய வீழ்ச்சி என்னவென்றால், தேவனை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நம்பினார்கள். இதன் காரணமாக, அவர்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் தேக்க நிலையில் இருந்து வாழ்ந்தனர். கர்த்தராகிய இயேசு சொன்னார், ”எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,“
(மாற்கு 10:15) இதன் அர்த்தம், நாம் எந்த நிலையை அடைந்திருந்தாலும், அதிகமாகப் பெற, நாம் கற்றுக்கொள்ள கூடியவர்களாக இருக்க வேண்டும்.
Prayer
தந்தையே, என் பெருமையையும் அகந்தையையும் மன்னியுங்கள். நான் உன்னிடம் கற்றுக்கொள்ள கூடிய ஆவியைக் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel

Most Read
● நாள் 10: 40 நாட்கள் உபவாச ஜெபம்● மனிதனின் பாராட்டுக்கு மேல் தேவனின் பலனைத் தேடுதல்
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● குறைவு இல்லை
● மரியாதையும் மதிப்பும்
● இன்று தேவனால் எனக்கு வழங்க முடியுமா?
● தேவ வகையான விசுவாசம்
Comments