Daily Manna
0
0
57
தலைப்பு: பாவத்தின் தொழுநோயைக் கையாளுதல்
Friday, 25th of April 2025
Categories :
பாவம்(Sin)
மாற்றம்(transformation)
பண்டைய எபிரேய கலாச்சாரத்தில், ஒரு வீட்டின் உட்புற சுவர்களில் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் தோன்றுவது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாகும்.
வீட்டில் ஒருவித தொழுநோய் வெடித்ததற்கான அறிகுறியாக அது இருந்தது.
கட்டுக்குள் வைக்கப்படாவிட்டால், தொழுநோய் வீடு முழுவதும் பரவி, சுவர்கள், தரைகள் மற்றும் கூரைக்கு கூட மாம்சிகபிரகாரமான சேதம் விளைவிக்கும்.
மேலும், வீட்டிற்குள் வசிப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வும் ஆபத்தில் உள்ளன.
அசுத்தமான சுவர்கள் மற்றும் தளங்கள் உடனடியாக ஒரு ஆசாரியனால் கவனிக்கப்பட வேண்டும், அவர் வீட்டை பரிசோதித்து, அது தனிமைப்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிப்பார்.(லேவியராகமம் 14ஐ வாசியுங்கள்). இந்த செயல்முறை பாவத்தின் தீவிரத்தை நினைவூட்டுகிறது மற்றும் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் பரவாமல் தடுக்க உடனடி நடவடிக்கையின் அவசியத்தை நினைவூட்டுகிறது.
பழைய ஏற்பாட்டில், தொழுநோய் ஒரு பயங்கரமான நோயாகும், இது பெரும் பயத்தையும் தனிமையையும் ஏற்படுத்தியது.
தொழுநோயால் கண்டறியப்பட்டவர்கள் தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்டனர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களை விட்டு நகரச் சுவர்களுக்கு வெளியே வாழ வேண்டியிருந்தது.
(லேவியராகமம் 13:46).தொழுநோய் பாவத்தின் அடையாளமாக இருந்தது, இது நம்மை தேவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிரிக்கிறது.
தொழுநோய் சிறிய அறிகுறிகளுடன் தொடங்கி வேகமாக வளர்ந்து வருவது போல, பாவமும் கூட.
இச்சையின் பாவத்தில் தொடங்கி இறுதியில் விபச்சாரத்தையும் கொலையையும் செய்த தாவீது ராஜாவின் கதையில் இதை நாம் காண்கிறோம் (2 சாமுவேல் 11). அதைத் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாவம் விரைவில் கட்டுப்பாட்டை மீறும்.
தொழுநோயின் விளைவுகளைப் போலவே பாவத்தின் விளைவுகளும் கடுமையானவை.
தொழுநோய் உடலை அழித்து, நரம்பு பாதிப்பு மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது.
பாவம் ஆன்மாவை அழித்து, தேவனிடமிருந்து நம்மைப் பிரித்து, அழிவின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.
லேவியராகமம் 13-14 அதிகாரங்களில், ஒரு தொழுநோயாளி தூய்மையானவராக அறிவிக்கப்பட வேண்டிய செயல்முறையை நாம் பார்க்கிறோம்.
ஆசாரியன் அந்த நபரை பரிசோதித்து, அவர் இன்னும் அசுத்தமாக இருக்கிறார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பார்.
அவர்கள் இருந்தால், அவர்கள் குணமடையும் வரை முகாமுக்கு வெளியே வாழ வேண்டியிருக்கும்.
அவர்கள் தூய்மையானவர்கள் என்று அறிவிக்கப்பட்டவுடன், அவர்கள் மீண்டும் சமூகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல், பாவத்திலிருந்து தூய்மையாக்கப்படுவதற்கு, நாம் பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
1 யோவான் 1:9 கூறுகிறது,"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". நாம் நமது பாவங்களை ஒப்புக்கொண்டு அவற்றை விட்டு விலக வேண்டும்.
மாற்கு 1:40-45 இல் உள்ள தொழுநோயாளியை இயேசு குணப்படுத்திய கதை, இயேசு எவ்வாறு உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் குணப்படுத்த முடியும் என்பதற்கு ஒரு வல்லமையான எடுத்துக்காட்டு.
தொழுநோயாளி இயேசுவிடம் வந்து, குணமடைய வேண்டி, இயேசு அவனைத் தொட்டு, "எனக்கு சித்தமுன்டு. சுத்தமாகு!" என்றார்.
உடனே அந்த மனிதன் குணமடைந்தான்.
லேவியராகமத்தைப் போலவே, தொழுநோயாளியும் தங்களைச் சுத்தமாயிருப்பதற்கும் பலிகளைச் செலுத்துவதற்கும் ஒரு ஆசாரியரிடம் தங்களைக் காட்ட வேண்டியிருந்தது.
மாற்கு 1ல், கர்த்தராகிய இயேசு, தொழுநோயாளியிடம் சென்று, ஆசாரியனிடம் அவனனக் காட்டும்படி அறிவுறுத்துகிறார்.
மேலும், லேவியராகமத்தில், தொழுநோயாளி அவர்கள் தூய்மையானவர்கள் என்று அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் சமூகத்தில் சேர முடிந்தது.
மாற்கு 1 இல், கர்த்தராகிய இயேசு குணமடைந்த தொழுநோயாளிக்கு அவனை ஆசாரியரிடம் காட்டவும், பரிந்துரைக்கப்பட்ட பலிகளைச் செலுத்தவும் அறிவுறுத்தினார், இது அவனை சமூகத்திற்கு மீட்டெடுக்க அனுமதிக்கும்.
எனவே இதை நீங்கள் பார்க்கும்பொழது, கர்த்தராகிய இயேசு நம்முடைய பரம வைத்தியர், அவரால் மட்டுமே நமது சரீரம் மற்றும் ஆன்மீக நோய்களை குணப்படுத்த முடியும்.
அவர் நமது பாவத்தின் அவமானத்தையும் தனிமையையும் நீக்கி, பிதா உடனும் மற்றவர்களுடனும் நம்மை மீண்டும் ஒரு உறவில் கொண்டு வர முடியும்.
எனவே இன்றும் எப்பொழுதும் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்புக்காக நமது பரம வைத்தியராகிய இயேசுவிடம் திரும்புங்கள்.
Bible Reading: 1 Kings 8
Prayer
அன்பின் பிதாவே, தொழுநோயாளி உமது தொடுகையால் குணமடைந்தது போல், என்னைத் தொட்டு, குணமாக்கி, என்னை நலமாக்குங்கள்.
உங்கள் சமூகத்தில் நான் சரியான இடத்தைக் கண்டுபிடித்து, உங்கள் சக்திக்கும் மகிமைக்கும் சாட்சியமளிக்கவும் நான் ஜெபம் செய்கிறேன்.
இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel

Most Read
● பொருளாதார சிக்கலில் இருந்து வெளிவருவது எப்படி?● நீண்ட இரவுக்குப் பிறகு சூரிய உதயம்
● நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் தகுதியுள்ளவரா?
● கவனிப்பில் ஞானம்
● செயற்கை நுண்ணறிவு அந்திக்கிறிஸ்துவா?
● தேவன் மீது தாகம்
● கொடுப்பதன் கிருபை - 1
Comments