Daily Manna
0
0
611
தலைப்பு: அவர் காண்கிறார்
Monday, 16th of June 2025
Categories :
சீடத்துவம் (Discipleship)
“மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”
1 சாமுவேல் 16:7
ஒரு நாள் ஆண்டராகிய இயேசு தேவாலயத்திலுள்ள காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்திருந்தபோது, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார். (மாற்கு 12:41) கர்த்தராகிய இயேசு ஆலயத்தின் காணிக்கைப்பெட்டியில் ஜனங்கள் வைத்த தொகையை மட்டும் பார்க்கவில்லை, ஆனால் ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுத்த மனப்பான்மையைக் கண்டார் என்று நான் நம்புகிறேன்.
அற்பமான தோற்றமுடைய ஒரு விதவை ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போடுவதை இயேசுவின் கண்கள் கண்டது. அது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இயேசுவின் கவனத்தை ஈர்த்தது காணிக்கையின் அளவு அல்ல, மாறாக விதவையின் கொடுக்கும் மனப்பான்மை. உங்கள் காணிக்கை தேவனின் கவனத்தை ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பதையும் இது சொல்கிறது.
2 நாளாகமம் 16:9 சொல்கிறது, “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.”
நலிந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும், வல்லமையற்றவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த செய்தி. உங்களுக்கு ஒரு அற்புதம் தேவையா? உங்கள் இருதயம் அவருக்கு உண்மையாக இருந்தால், உங்கள் சூழ்நிலையில் வல்லமை வாய்ந்ததாகக் காண்பிக்க தேவனின் கண்கள் உங்கள் மீது உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
“பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.”
ஆதியாகமம் 6:11-12
ஆனால் நோவா வித்தியாசமாக இருந்தார். அவர் கூட்டத்தோடு ஓடாமல், தன் குடும்பத்தோடு சேர்ந்து தேவனைத் தேடினார். "ஆனால் நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபையை கிடைத்தது" என்று வேதம் கூறுகிறது. (ஆதியாகமம் 6:8)
இறந்த மீன்கள் கூட கீழ்நோக்கி பாயும், ஆனால் உயிருள்ள மீன் மட்டுமே ஓட்டத்திற்கு எதிராக செல்ல முடியும் என்று ஒருவர் கூறினார். ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி அநாகரீகம் அதிகரித்து வருகிறது, ஆனால் அதற்கு நம்மை விட்டுக்கொடுக்கக் கூடாது.
அதற்கு பதிலாக, நோவாவைப் போல நாம் கர்த்தரை மேலும் மேலும் பற்றிக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய கண்களுக்கு எதுவும் மறைக்கப்படவில்லை என்பதை நினைவில் வையுங்கள். "ஆண்டவரே, நான் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், எனக்கு உதவும், ஆண்டவரே" என்று தினமும் தேவனிடம் ஜெபிப்போம். உங்கள் எதிரிகள் கூட உங்கள் வாழ்க்கையில் தேவனின் வேலையை அங்கிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.
Bible Reading: Job 3-8
Prayer
பிதாவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உமக்கு விசுவாசமாக இருக்கும் இருதயத்தை எனக்குத் தாரும். உமது கிருபை இன்றும் என்றும் என் மீது இருக்கட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● ஜெபயின்மை தேவதூதர்களின் செயல்பாட்டைத் தடுக்கிறது● அவர்களை இளமையாகப் இருக்கும்போதே பிடிக்கவும்
● சர்ப்பங்களின் தன்மைகளை நிறுத்துதல்
● ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும்
● நீங்கள் தேவனுடைய அடுத்த இரட்சகராக முடியும்
● கடனில் இருந்து வெளியேறவும்: Key # 2
● நடக்க கற்றுக்கொள்வது
Comments
