english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. நாள் 05: 40 நாட்கள் உபவாசமும் & ஜெபமும்
అనుదిన మన్నా

நாள் 05: 40 நாட்கள் உபவாசமும் & ஜெபமும்

Tuesday, 26th of November 2024
0 0 477
Categories : உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை ( Fasting & Prayer)

ஆண்டவரே, உமது சித்தம் செய்யப்படுவதாக

“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” ‭‭மத்தேயு‬ ‭6‬:‭10‬ ‭

தேவனுடைய சித்தம் நிறைவேற நாம் ஜெபிக்கும்போது, ​​அவருடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கவும், நம்முடைய வாழ்க்கைக்கான அவருடைய சரியான திட்டங்களை நிறைவேற்றவும் மறைமுகமாக அவரிடம் கேட்கிறோம்.

தேவனுடைய சித்தம் நிறைவேற ஜெபிக்கும்போது நமது பார்வை மாறுகிறது. அவருடைய விருப்பம் தானாகவே நம் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது, எனவே நம் சொந்த விருப்பத்திற்காக நாம் பாடுபட வேண்டியதில்லை. தேவனுடைய சித்தம் நிறைவேற நாம் ஜெபிக்கும்போது நமது "சுய", அகங்காரம் மற்றும் வீண் பெருமை ஆகியவை சிலுவையில் அறையப்படுகின்றன.

அவர் செயலில் இறங்குவதற்கு முன், தேவனின் சித்தம் பூமிக்குரிய உலகில் ஜெபிக்கப்பட வேண்டும். நமது ஜெபம் தேவனை அழைக்கவில்லை என்றால், அவர் உள்ளே பிரவேசிக்க மாட்டார்.

தேவனின் சித்தத்தை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

1. நீங்கள் தேவனின் சித்தத்தை அறியவில்லை என்றால், தேவனின் சித்தத்தின்படி ஜெபிப்பது கடினமாக இருக்கும்
ராஜாக்கள் 4: 33-35 இல், வேதம் காலத்திற்கு முன்பு மரணம் தேவனுடைய விருப்பம் அல்ல என்பதை எலிஷா தீர்க்கதரிசியும் அந்த தாயாரும் அறிந்தார்கள், எனவே, சிறுவன் ஜீவன் பெரும் வரை எலிஷா தீர்க்கதரிசி உருக்கமாக ஜெபித்தார். நீங்கள் தேவனின் விருப்பத்தை அறியாத நிலையில், வாழ்க்கை வழங்கும் எதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

2. நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறியவில்லை என்றால், நீங்கள் பாவம் செய்ய தூன்டபடும் போது நீங்கள் தோல்வியடையலாம்
2 மத்தேயு 4:1-11 இல், இயேசு பிசாசின் சோதனைகளை வென்றார், ஏனென்றால் அவர் தேவனுடைய சித்தத்தை முழுமையாக புரிந்துகொண்டார். சில சமயங்களில், பிசாசு தேவனுடைய வார்த்தையை தவறாக சித்தரிக்கிறான், ஆனால் இயேசு அவனை எதிர்த்தார். தேவனின் விருப்பத்தை நீங்கள் அறியவில்லை என்றால், பிசாசு உங்கள் வாழ்க்கையை விளையாடி உங்களை சிக்க வைப்பான்.

3. நமது பாதுகாப்பு, ஆசீர்வாதம் மற்றும் செல்வம் ஆகியவை தேவனின் சித்தத்தற்கு உட்பட்டவை
நாம் தேவனுடைய சித்தத்தைப் பற்றி அறியாமல் இருந்தால், பிசாசு நம்மைச் சாதகமாக்கிக் கொள்ளலாம்.
“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.” (3 யோவான்‬ ‭1‬:‭2‬ )
சிலர் வியாதி தங்கள் வாழ்க்கைக்கான தேவ சித்தத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள். வறுமையின் மூலம் தாழ்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தேவன் விரும்புவதாக சிலர் நினைக்கிறார்கள். பிசாசின் இன்னல்களை ஏற்று ஏமாற்ற படுகிறார்கள். உங்கள் வாழ்க்கையில் தேவனின் விருப்பத்திற்குக் குறைவான எதையும் எதிர்க்க வேண்டிய நேரம் இது.

4. தேவனின் விருப்பத்தை அறிந்தால் மட்டுமே நாம் அதற்குக் கீழ்ப்படிந்து வாழ முடியும்
நாம் தேவனுடைய சித்தத்தைப் பற்றி அறியாமல் இருந்தால், அவருடைய சித்தத்திற்கு எதிரான காரியங்களை நாம் தானாகவே செய்துவிடுவோம்.
அப்பொழுது நான், 'இதோ, நான் வந்தேன் - தேவனே, உமது சித்தத்தைச் செய்யும்படி, என்னைப் பற்றி புத்தகத்தின் தொகுதியில் எழுதப்பட்டிருக்கிறது.'' (எபிரெயர் 10:7) என்றேன்.

5. நாம் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்காத போதெல்லாம், பிசாசு நம்மைத் தாக்க செயலில் இறங்குகிறான்
பிசாசுக்கும் இடம் கொடுக்காதீர்கள். (எபேசியர் 4:27)

6. நாம் தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக வாழும்போது பிசாசு நம்மைக் குற்றம் சாட்டுகிறான்
பின்பு, பிரதான ஆசாரியனாகிய யோசுவா கர்த்தருடைய தூதருக்கு முன்பாக நிற்பதையும், சாத்தான் அவனை எதிர்த்து நிற்க அவனுடைய வலதுபாரிசத்தில் நிற்பதையும் எனக்குக் காட்டினான். (சகரியா 3:1)

7. தேவன் தன் சித்தத்திற்கு மாறாக எதையும் செய்ய முடியாது
“நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.”
‭‭(யாக்கோபு 4:3). நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்கும்போது நாம் பதில்களைப் பெற முடியாது.

8. தேவனின் சித்தத்திற்கு புறம்பாக நாம் விதியை நிறைவேற்ற முடியாது
“என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” யோவான்‬ ‭15‬:‭4‬-‭7‬

 ‭
2 தேவனின் விருப்பத்தையும் உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தையும் அறிந்துகொள்வதற்கான முக்கியமான திறவுகோல்கள்

  • தேவனோடு நடவுங்கள் 

நீங்கள் தேவனுடன் உங்கள் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அவரை அறிய முற்பட வேண்டும், அவரைப் பற்றி அறிய முற்படுவதில்லை.

அவருடைய வார்த்தையில் நேரத்தைச் செலவழிப்பதன் மூலமும், ஜெபத்திற்காக நேரத்தை ஒதுக்குவதன் மூலமும், சபையின் ஊழியத்தில் ஈடுபடுவதற்கும், J-12 தலைவரின் கீழ் பெறுவதற்கும் உங்களால் முடிந்த ஒவ்வொரு வாய்ப்பையும் எடுத்துக்கொள்வதன் மூலம் அந்த உறவை நீங்கள் சிறப்பாக வளர்த்துக்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த ஒழுக்கங்களை நீங்கள் நாடும்போது, ​​தேவன் செய்வார். அவருடைய திட்டத்தை உங்களுக்கு வெளிப்படுத்த முதல் படிகளைத் தொடங்குங்கள்.

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭3‬:‭5‬-‭6‬ ‭

  • தேவடைய சித்தம் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததைக் கடைப்பிடியுங்கள்

பலர் தங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புவதாகத் தோன்றுகிறது, ஆனால் அவருடைய சித்தத்தின் 98 சதவீதம் ஏற்கனவே அவருடைய வார்த்தையின் மூலம் கவனமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை அவர்கள் கவனிக்கவில்லை. தேவன் தனது விருப்பத்தின் பல, பல அம்சங்களைப் பற்றி மிகவும் தெளிவாக இருக்கிறார். உதாரணமாக, வேசிமார்க்கத்துக்கு நாம் விலகி இருக்க வேண்டும் என்பது தெளிவாக அவருடைய திட்டம்.

“நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,”
1 தெசலோனிக்கேயர்‬ ‭4‬:‭3‬ ‭

அவருடைய சித்தம் என்று தேவன் நமக்குத் தெளிவாகக் காட்டிய காரியங்களுக்கு நாம் கீழ்ப்படியவில்லை என்றால், நம் வாழ்க்கைக்கான அவருடைய திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலை அவர் வெளிப்படுத்துவார் என்று நாம் எப்படி நினைப்போம்?

Bible Reading Plan :  Matthew : 25 - 28
ప్రార్థన
1.பிதாவே, உமது சித்தம் இயேசுவின் நாமத்தினாலே என் வாழ்க்கையில் நிறைவேறட்டும். (மத்தேயு 6:10, லூக்கா 22:42)

2.என் பரலோகத் தகப்பன் என் வாழ்வில் விதைக்காத எதையும் இயேசுவின் நாமத்தில் அக்கினியால் அழிக்கபடட்டும்.(மத்தேயு 15:13)

3.நான் செழிக்க வேண்டுமென்பது தேவனுடைய சித்தம்; எனவே, இயேசுவின் நாமத்தில் என் வாழ்க்கையில் தோல்வி, இழப்பு மற்றும் தாமதம் போன்ற செயல்களை நான் தடை செய்கிறேன்.(3 யோவான் 1:2, எரேமியா 29:11)

4.நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதே தேவ விருப்பம்; எனவே, இயேசுவின் நாமத்தில் என் சரிரத்தில் உள்ள வியாதி மற்றும் நோயின் எந்தவொரு வைப்புகளையும் அழிக்கிறேன். ( யாத்திராகமம் 15:26, ஏசாயா 53:5 )

5.தேவனின் விருப்பம் நான் கடனாளியாக இருக்க வேண்டும் என்று அல்ல, கடன் வாங்குபவன் அல்ல; எனவே, இயேசுவின் நாமத்தில் என்னை கடனில் அடைப்பதற்கான தீய நிகழ்ச்சி நிரலை நான் அழிக்கிறேன்.  (உபாகமம் 28:12, ரோமர் 13:8)

6.இயேசுவின் இரத்தத்தால், எனக்கு எதிரான எந்த சட்டமும் இயேசுவின் நாமத்தில் சிலுவையில் அறையப்படட்டும். (கொலோசெயர் 2:14)

7. இயேசுவின் நாமத்தில் என்னை இலக்காகக் கொண்ட மந்திரங்கள், கணிப்புகள், சாபங்கள் மற்றும் தீமைகளை நான் சிதறடிக்கிறேன். (எண்ணாகமம் 23:23, ஏசாயா 54:17)

8. நான் கட்டளையீடுகிறேன், தீமை, மரணம், அவமானம், இழப்பு, வலி, நிராகரிப்பு மற்றும் தாமதம் என் வாழ்க்கையிலிருந்து இயேசுவின் நாமத்தில் அகற்றப்படட்டும். (சங்கீதம் 91:10, உபாகமம் 7:15)

9.எனக்கு எதிராக உருவாக்கப்பட்ட எந்த ஆயுதமும் செழிக்காது, இயேசுவின் நாமத்தில் எனக்கு எதிராக எழும் எந்த நாவையும் நான் கண்டிக்கிறேன். (ஏசாயா 54:17)

10. ஆண்டவரே, உமது சித்தத்தைச் செய்யவும், இயேசுவின் நாமத்தில் பூமியில் உமது ராஜ்யத்தை விரிவுபடுத்தவும் எனக்கு அதிகாரம் தாரும். (அப்போஸ்தலர் 1:8, மத்தேயு 28:19-20)

Join our WhatsApp Channel


Most Read
● கடந்த காலத்தின் அலமாரியைத் திறக்கிறது
● தெய்வீக ஒழுக்கம் - 2
● நாள் 04: 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
● இச்சையை மேற்கொள்வது
● உடனடியாக கீழ்ப்படிதலின் வல்லமை
● முற்போக்கான தாக்கத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்துவது எப்படி?
● ஆவியிலே அனலாயிருங்கள்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్