தினசரி மன்னா
0
0
6
உங்கள் விடுதலையை இனி நிறுத்த முடியாது
Monday, 4th of August 2025
Categories :
விடுதலை (Deliverance)
“அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.” லூக்கா 19:29-31
நான் முதலில் கொண்டு வர விரும்புவது என்னவென்றால், இது ஞானத்தின் வார்த்தைக்கு ஒரு உன்னதமான உதாரணம். எங்கு செல்ல வேண்டும், எந்த திசையில் செல்ல வேண்டும், அங்கு என்ன இருக்கும், எந்த நிலையில் இருக்கும் என்ற தெளிவான வழிமுறைகளை இயேசு கொடுத்ததைக் கவனியுங்கள். இவை அனைத்தையும் இயேசு அங்கு நேரடியாகச் செல்லாமல் அல்லது எந்த முன்னறிவும் இல்லாமல் கூறினார். நமது தேவனின் தீர்க்கதரிசனத் துல்லியத்தைக் கண்டு நான் அடிக்கடி வியப்படைகிறேன்.
அடுத்ததாக நீங்கள் பார்க்க வேண்dயது என்னவென்றால் அந்த கழுதை "கட்டியிருந்தது". எவ்வளவு நேரம் கட்டியிருந்தது என்று தெரியவில்லை. சீஷர்களின் பணி கழுதைக்குட்டியை கட்டவிழ்ப்பதும், குட்டியை விடுவிப்பதாகும். விடுவிக்கும் பணியில் ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், விடுதலையின் நோக்கத்தை அவர்கள் குறிப்பிட வேண்டும் - ஏனென்றால் கர்த்தருக்கு அது தேவை.
ஒரு நாள் பிசாசின் வல்லமையிலிருந்து விடுதலை தேவைப்படும் ஒரு பெண்மணிக்காக ஜெபம் செய்தது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. நான் இயேசுவின் நாமத்தினாலே பிசாசுக்குக் கட்டளையிட்டபோது, ஒரு குரல் கேட்டது. ஒரு மனிதன் பேசுவது போல் ஒலித்தது, "அவள் எனக்கு சொந்தமானவள், நான் அவளை விட மாட்டேன்" என்று அந்த நேரத்தில், இந்த வேதப்பகுதி என் மனதில் நினைவுக்கு வந்தது. கட்டப்பட்டிருக்கும் கழுதையை விடுவிப்பதை கேள்வி கேட்கும் எவருக்கும் சீஷர்கள், "தேவனுக்கு இது தேவை" என்று சொல்ல வேண்டும். நான் மீண்டும் பேசினேன், "ஆண்டவருக்கு அவள் தேவை, அவளை விட்டுவிடு" உடனே, பொல்லாத ஆவி அவளை விட்டு வெளியேறியது, அவள் சுதந்திரமானாள்.
கழுதைக்குட்டியைப் போலவே, உங்களுக்கும் உங்கள் வாழ்க்கையில் ஒரு தெய்வீக நியமிப்பு உள்ளது, அது தேவனுக்கு சேவை செய்வதாகும். உங்களைத் தவிர வேறு யாராலும் நிறைவேற்ற முடியாத தெய்வீக பணியை நிறைவேற்றவே நீங்கள் இந்த பூமிக்கு வந்தீர்கள் என்ற இந்த உண்மையை உங்கள் ஆத்துமாவில் ஆழமாகப் பற்றிக்கொள்வீர்களேயானால், நீங்கள் விடுதலையைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் அழைப்பில் நடப்பீர்கள்.
உங்கள் தற்போதைய சூழ்நிலை அல்லது உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பார்க்க வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு தெய்வீக பணி உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். காரியங்கள் மாற ஆரம்பிக்கும்.
எருசலேமுக்குள் பிரவேசிக்கக் கொடுக்கப்பட்ட இந்தக் கழுதையையே கர்த்தர் பயன்படுத்தினார். தேவன் தம்முடைய மகிமையை அறிவிக்க உங்களைப் பயன்படுத்துவார். (லூக்கா 19:37-38)
Bible Reading: Isaiah 42-44
வாக்குமூலம்
கர்த்தருக்கு நான் தேவைப்படுகிறேன். என் வாழ்க்கையில் எனக்கு ஒரு தெய்வீக பணி உள்ளது. இயேசுவின் நாமத்தில், என் வாழ்க்கையில் தேவனின் கடமையை நிறைவேற்றுவேன். நான் தேவ மகிமையின் பாத்திரம்.
Join our WhatsApp Channel

Most Read
● அன்பின் மொழி● மலைகளை பெயர்க்கத்தக்க காற்று
● செழிப்புக்கான மறக்கப்பட்ட திறவுகோல்
● உங்கள் வாழ்க்கையை மாற்ற பலிபீடத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்
● ஜெபம்யின்மையின் பாவம்
● தயவு முக்கியம்
● அவர்கள் சிறிய இரட்சகர்கள்
கருத்துகள்