தினசரி மன்னா
0
0
38
தேவனுடைய ஏழு ஆவிகள்
Sunday, 17th of August 2025
Categories :
கடவுளின் ஆவி (Spirit of God)
“யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,”
)வெளிப்படுத்தின விசேஷம் 1:4 )
விசித்திரமான சொற்றொடரைக்
கவனியுங்கள், "... அவருடைய
சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்"
ஒரே ஒரு ஆவி மட்டுமே உள்ளது - பரிசுத்த ஆவியானவர்.
ஏழு என்பது வேதாகம குறியீட்டில் எப்போதும் முழுமை அல்லது நிறைவை குறிக்கும் எண். இவ்வாறு, 'ஏழு' என்ற எண், பரிசுத்த ஆவியின் முழுமையையும், கிறிஸ்தவர்களுக்கு அவருடைய பல்வேறு செயல்பாடுகள் அல்லது ஊழியங்களையும் குறிக்கிறது.
வேதம் கூறுகிறது, "யோசேப்பு பலவர்ண மேலங்கியை" அவருடைய தகப்பனார் யாக்கோபு அவருக்கு வழங்கினார். (ஆதியாகமம் 37:3). இந்த அங்கி பரிசுத்த ஆவியின் மேலங்கியின் அடையாளமாக இருந்தது என்பதை வேதாகம அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். யோசேப்பு பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் மாதிரியாக இருந்தார். இப்போது இங்கே கர்த்தராகிய இயேசு பல வண்ணங்களின் மேலங்கியை அணிந்திருக்கிறார், அவருடைய பரலோகத் தகப்பனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் மேலங்கி.
இப்போது ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 11:2 இல் கிறிஸ்துவைப் பற்றி தீர்க்கதரிசனமாகப் பேசுகிறார், பரிசுத்த ஆவியின் ஏழு வெவ்வேறு ஊழியங்களைப் பற்றி தெளிவாகக் கூறுகிறார்:
“ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.” ஏசாயா 11:2
1. கர்த்தருடைய ஆவியானவர்
2. ஞானத்தின் ஆவியானவர்
3. உணர்வை அருளும் ஆவியானவர்
4. ஆலோசனை அருளும் ஆவியானவர்
5. பெலனை அருளும் ஆவியானவர்
6. அறிவை அருளும் ஆவியானவர்
7. கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவியானவர்
"தேவனுடைய ஏழு ஆவிகள்" என்பது பரிசுத்த ஆவியின் ஏழு 'பண்புகள்'. இவை ஆவியின் நிறைவையும் குறிக்கின்றன. இந்த ஆவியின் முழுமை கர்த்தராகிய இயேசுவின் மேல் தங்கியிருந்தது. ஒரு வித்தியாசமான ஒளியை உருவாக்கும் ஏழு வெவ்வேறு வண்ணங்களைப் பிரதிபலிக்கக்கூடியது போல, நமது தேவன் ஆவியின் பல்வேறு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.
இந்த தேசம் முழுவதும் மற்றும் உலகின் சில பகுதிகளுக்கு நான் எங்கு சென்றாலும். ஒரே பரிசுத்த ஆவியானவரை நான் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு வழிகளில் பார்க்கிறேன். சிலருக்கு, அவர் வல்லமையுடன் ஊழியம் செய்கிறார் - அவர்கள் குணமாகிறார்கள், விடுவிக்கப்படுகிறார்கள், சிலருக்கு, அவர் ஞானத்தையும், சிலருக்குப் உணர்வையும் தருகிறார். "கர்த்தருடைய ஏழு ஆவிகள்" என்ற 'முழுமையை' நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவரை கேட்க வேண்டும். (லூக்கா 11:13-ஐ வாசியுங்கள்)
Bible Reading: Jeremiah 19-22
வாக்குமூலம்
இயேசுவின் நாமத்தில், கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் தங்கியிருக்கிறார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும் இருப்பார்” (ஏசாயா 11:2-3)
Join our WhatsApp Channel

Most Read
● சிறையில் துதி● கவனிப்பில் ஞானம்
● விசுவாசம்: கர்த்தரைப் பிரியப்படுத்த ஒரு உறுதியான பாதை
● யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்- 3
● உங்கள் பாதையில் தரித்திருங்கள்
● நிச்சயமற்ற காலங்களில் ஆராதனையின் வல்லமை
● உங்கள் பழிவாங்கலை தேவனிடம் கொடுங்கள்
கருத்துகள்