தினசரி மன்னா
ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -2
Thursday, 9th of May 2024
0
0
317
Categories :
வாழ்க்கை பாடங்கள் (Life Lessons)
"ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர்" என்ற நமநது தொடரில் நாம் தொடர்கிறோம், நாம் தாவீதன் வாழ்க்கையைப் பார்த்து, குழியை தவிர்க்க மற்றும் வலியைத் தவிர்க்க உதவும் முக்கிய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றோம்.
ஒரு நாள் மாலையில் தாவீது படுக்கையில் இருந்து எழுந்து ராஜாவின் வீட்டின் கூரையின் மேல் நடந்தார். (2 சாமுவேல் 11:2)
ஒரு மாலையில் தாவீது படுக்கையிலிருந்து எழுந்தார் என்று வேதம் கூறுகிறது. இது அரசன் மிகவும் தாமதமாக உறங்குவதைக் குறிக்கிறது.
பொதுவாக, மன்னரின் குடியிருப்பு நகரத்தின் மிக உயர்ந்த நிலத்தில் இருந்தது. அந்த நேரத்தில் எருசலேமில் உள்ள கட்டிடங்கள் தட்டையான கூரைகளைக் கொண்டிருந்தன. மக்கள் பகலில் சூடாக இருக்க கூரையில் தண்ணீர் பாத்திரங்களை வைத்திருப்பார்கள், மாலையில் அவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்க முடியும். இது தற்செயல் நிகழ்வு அல்ல. அந்த நேரத்தில் நகரத்தைப் பார்க்கும்போது தாவீது எதிர்கொள்ளும் சோதனைகளை முன்பே அறிந்திருந்தார். ஆனாலும், அவர் ஈடுபாடு கொண்டார். அவர் தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருந்தார். இது தாவீதின் வீழ்ச்சியை மேலும் தூண்டியது.
பேதுரு கர்த்தரை மறுதலித்தபோது, அவர் எங்கே இருந்தார்? பிரதான ஆசாரியரின் வீட்டிற்கு வெளியே நெருப்பினால் சூடுபிடித்திக் கொண்டிருந்தபோது அவர் மற்ற விசுவாசி
சீshaர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். கேலி செய்பவர்களுடனும் அவிசுவாசிகளுடனும் சுற்றித் திரிந்தார். அங்கே, அந்த நெருப்பின் பிரகாசத்தில், அவர் கர்த்தரை அறியவில்லை என்று மூன்று முறை அப்பட்டமாக மறுத்தார். தெளிவாக, பேதுரு தவறான நபர்களுடன் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்தார். இதுவே அவரது பின்னடைவுக்குக் காரணம்.
தாவீது மற்றும் பேதுருவும் மட்டுமே தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பாவத்தில் விழுந்தவர்கள் என்று வேதத்தில் இல்லை. இந்தக் கொள்கையை மீறியதால் தாவீதின் மனைவி மீகாலும் தானே சிக்கலில் மாட்டிக்கொண்டாள்.
”தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான். அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள். கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.“ 2 சாமுவேல் 6:14-16
”அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.“
2 சாமுவேல் 6:23
மீகாள் ஏன் ஜன்னலின் வழியே ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்? அவள் ஏன் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை? அவள் ஒரு இஸ்ரவேலர், ஆபிரகாமின் வழித்தோன்றல். கர்த்தருடைய பெட்டி வீட்டிற்கு வருவதைப் பார்க்க தாவீதைப் போலவே அவள் உற்சாகமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அவள் செயலில் சரீர ரீதியாக கீழே இருக்காமல் இருப்பதற்கு அவளுடைய சொந்த காரணங்கள் இருக்கலாம், ஆனால் அவளுடைய மனப்பான்மை அவளுடைய இ௫தயம் கீழே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அவள் தன் தந்தை சவுலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினாள், தேவன் என்ன நினைக்கிறார் என்பதை விட மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தாள்.
ஒரு நபர் தவறான இடங்களுக்குச் செல்வதன் மூலமும், தவறான நேரத்தில் தவறான நபர்களுடன் பழகுவதன் மூலமும் தேவையில்லாமல் தனக்குத்தானே சோதனையை ஏற்படுத்திக்கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒருவர் தவறான செயலைச் செய்து முடித்தாலும் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தால், எல்லா சோதனைகளும் விலகிவிடும் என்று நான் இப்போது சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக, நீங்கள் உங்கள் மீது கொண்டு வரும் தேவையற்ற அழுத்தத்தின் கீழ் நீங்கள் வாழ மாட்டீர்கள். நீங்கள் மிகவும் நிம்மதியாகவும் தேவனின் விருப்பத்திலும் இருப்பீர்கள்.
ஜெபம்
தகப்பனே, எங்கள் நாட்களின் எண்ணிக்கையை நீர் நிர்ணயித்ததற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எனக்கு வழங்கிய நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த எனக்கு உதவும். சரியான நபர்களிடையே சரியான நேரத்தில் சரியான இடத்தில் என்னை இருக்கச் செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● தெய்வீக ஒழுக்கம் - 1● வார்த்தையின் உண்மைதன்மை
● அவரை நாடி உங்கள் யுத்தத்தை எதிர்கொள்ளுங்கள்.
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● உங்கள் திருப்புமுனையைப் பெறுங்கள்
● தேவன் பலன் அளிப்பவர்
● தேவன் உங்கள் சரீரத்தைப் பற்றி கவலைப்படுகிறாரா?
கருத்துகள்