இவ்விதமாய், மனுஷர் உங்கள நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” மத்தேயு 5:16
நீங்கள் தினமும் தேவனுடைய பிரசன்னத்திற்குள் பிரவேசிக்க கற்றுக்கொண்டால், நீங்கள் ஒருபோதும் இருக்கின்ற வண்ணம் இருக்க மாட்டீர்கள். உங்களின் சூழ்நிலைகளும் காரியங்களும் தேவனின் பார்வையில் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம், பேசும் விதம் எல்லாவற்றையுமே மாற்றிவிடும். வேறு விதத்தில் கூற வேண்டுமானால், நீங்கள் இதுவரை வாழ்ந்த விதத்தையே மாற்றிவிடும். சாதாரண விவசாயப் பெண்ணான எஸ்தர், ராஜாவுடன் ஒரு இரவிற்காக வருடம் முழுவதும் தன்னை ஆயத்தப்படுத்தினாள்
அந்த ஒரு சந்திப்பிற்குப் பிறகு அவள் அவனை மீண்டும் பார்ப்பாள் என்பதற்கு அவளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முடிவைப் பற்றி யோசிக்காமல், தன்னைத் ஆயத்தப்படுத்தி கொண்டாள். அவளது ஆயத்த நேரம் நேரம் முடிந்ததும், அவள் ராஜாவின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டாள், அன்று முதல், அவள் இனி ' கைப்பற்றப்பட்ட தேசத்து விவசாய பெண் அல்ல, அவள் அந்த தேசத்தின் ராணி. அன்று முதல், அவள் ராணியைப் போல நடந்தாள், அவள் ராணியைப் போல பேசினாள், அவள் தன்னை ராணியைப் போல சுமந்தாள். அவளது ஆயத்தமே அவளுடைய வாழ்க்கைமுறையாக மாறியது.
ஆராதனை என்பது ஒரு ஜெபக் கூட்டத்திலோ அல்லது தேவ ஆலயத்தில் ஆராதிக்கும் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் அல்லது நாம் தேவ பிரசன்னத்தில் தனியாக செலவிடும் நேர மட்டும் கிடையாது. அதுவே நமது வாழ்க்கைமுறையாக மாற வேண்டும். நீங்கள் எங்கு சென்றாலும், நீங்கள் எதைச் செய்தாலும், சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் சரி, அது ஆராதனையின் நறுமணம் கொண்டதாக இருக்க வேண்டும். ராஜாதி ராஜா தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் நம்மில் தங்கியிருப்பதால், நாம் எங்கு சென்றாலும் அவருடைய பிரசன்னத்தை நம்முடன் எடுத்துச் செல்கிறோம். எனவே, ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணமும் ஆராதிக்க ஒரு வாய்ப்பாகவும், ஆராதிக்க ஒரு காரணமாகவும் அமைகிறது.
ஆராதனை என்பது நாம் செய்வதல்ல; அது நாம் யார் என்பதை குறித்தது! நாம் இயல்பிலேயே ஆராதனை வீரர்கள். ராஜாவின் விருப்பமானவர்களாக, நம் முழு வாழ்க்கையும் முழுவதும் ஆராதனையின் செயல்களாக இருக்க வேண்டும்! மத்தேயு 5 இல், கர்த்தராகிய இயேசு ஒரு ஆராதிப்பவரின் தன்மையை விவரித்தார். அவர்கள் ஆவியில் எளிமையுள்ளவர்கள் என்று கூறினார். துயரப் படுவார்கள் (உலகின் பாவத்திற்காக), சாந்த குணம் உள்ளவர்களாக (மென்மையான), நீதியின்மேல் பசி தாகம் உள்ளவர்களாக இருப்பார்கள். இரக்கம் உள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாக, சமாதானம் செய்பவர்களாக இருப்பார்கள். நீதியினிமித்தம் துன்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், அவர்கள் தங்கள் பிதாவாகிய ராஜாவின் பண்புகளை வெளிப்படுத்துகிறார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் செய்யும் செயல்கள் அனைத்துமே தேவனுடைய நாமத்திற்கும் அவரின் பண்புகளுக்கும் மகிமையை பிரதிபலிக்கிறதாக இருக்க வேண்டும். இந்தக் கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: எனது அன்றாட வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான ஆராதனை செயலாக இருக்கிறதா? என் வார்த்தைகளும் என் நடத்தைகளும் கர்த்தராகிய இயேசுவிடம் ஜனங்களின் இழுக்கிறதா அல்லது அவர்களை வழிவிலக செய்கிறதா? உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்!
ஜெபம்
என் முழு இருதயத்துடனும், முழு ஆத்துமாவோடும். , முழு பல த்தோடும் உம்மை ஆராதிக்கிறேன். என் வாழ்க்கை முறையை ஆராதனை செயலாக மாறட்டும். ஜெபங்களை கர்த்தராகிய இயேசுவிடம் ஈர்க்கப்படுவதற்கு என் செயலும் உமக்கு மகிமையையும் உமது குணத்தையும் பிரதிபலிக்க வேண்டும். என் வெளிச்சம் பிரகாசிக்கட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● விடாய்த்த நிலையை வரையறுத்தல்● வார்த்தையின் தாக்கம்
● அன்பின் மொழி
● நீதியின் வஸ்திரம்
● வஞ்சக உலகில் சத்தியத்தை பகுத்தறிதல்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 5
● உங்கள் விடுதலை மற்றும் சுகத்திற்கான நோக்கம்
கருத்துகள்