தினசரி மன்னா
உங்கள் இரட்சிப்பின் நாளைக் கொண்டாடுங்கள்
Wednesday, 1st of February 2023
1
0
334
Categories :
Salvation
“யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும். எஸ்தர் 9:27
கர்த்தருடைய ஆவியானவர் நம் வாழ்வில் பிரவேசிக்கும் போது நம்மை புதிய நபராக மாற்றுகிறார்.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இந்தப் புதிய இருப்பு சாத்தியமாகிறது. இந்தப் புதிய வாழ்வில், தேவனின் நியாயப்பிரமானம் இந்தப் புதிய வாழ்க்கையில் நம் இயல்பின் ஒரு பகுதியாகிறது. தேவனுடைய நியாயப்பிரமானங்களை கடைப்பிடிப்பது மூலம் இரட்சிப்புக்கான நமது நன்றியை வெளிப்படுத்துகிறது.
எஸ்தரின் புத்தகத்தில், எஸ்தர் ராணி மற்றும் அவளது உறவினர் மொர்தெகாய் ஆகியோரின் வீரத்தின் மூலம் தேவன் யூத ஜனங்களை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். அத்தகைய விடுதலையை கொண்டாட வேண்டும் என்று யூதர்கள் முடிவு செய்தனர். மேசியா பிறக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் தேசத்தை தேவன் பாதுகாத்ததை நினைவுகூரும் ஆண்டு விழாவை நிறுவினர்.
தேவன் தம்முடைய இரட்சிப்பின் மூலம் நம் வாழ்க்கையை மறுசீரமைத்து, சாத்தானிடமிருந்து நம்மைப் பறித்து, அவருடைய நியாயப்பிரமானத்தை நம் இருதயங்களில் பதித்திருப்பதால், நாமும் கொண்டாட வேண்டும். உங்கள் இரட்சிப்பை நீங்களும் ஏன் கொண்டாட கூடாது? கிறிஸ்தவர்களாக பிறந்தவர்கள் எதையும் அறியாதவர்களாக இருக்கிறார்கள், சில சமயங்களில் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை மிகவும் சாதாரணமாக கருதுகிறார்கள். சந்தோஷம் இல்லை, மகிழ்ச்சி இல்லை. மாறாக, இயேசுவில் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்! நமது இரட்சிப்பைக் கொண்டாடுவது பலரை இயேசுவினிடம் ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
சங்கீதம் 118:21 கூருகிறது, “நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.”
நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. யூத மக்கள் பூரிம் விடுமுறையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். நாம் கிறிஸ்துவில் இரட்சிப்பு அடைந்த நாளை நினைவுகூருவது பாரம்பரியமாக மாற்றுவது நம் இருவருக்கும் வேடிக்கையாக இருக்கலாம். நாம் ஞானஸ்நானம் எடுத்த நாளையோ அல்லது இயேசுவின் மீது எங்களின் விசுவாசத்தை ஒப்புக்கொடுத்த நாளையோ கொண்டாடலாமே. யோசித்துப் பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் எந்த கிறிஸ்தவ மைல்கல்லை நீங்கள் கொண்டாடுகிறீர்கள்? தேவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு புதிய வழக்கத்தைத் தொடங்க இது ஒரு சிறந்த நேரம்.
ஜெபம்
பரலோகத் தகப்பனே, மனிகுலத்திற்கு இரட்சிப்பைச் சாத்தியமாக்க
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பியதற்கு நன்றி. கிறிஸ்து இயேசுவில்
நான் பெற்ற இரட்சிப்புக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இயேசுவின்
நாமத்தில் ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தேவனின் ஏழு ஆவிகள்: வல்லமையின் ஆவி● தேவனின் 7 ஆவிகள்: தேவனுடைய ஆவி
● சுத்திகரிப்பின் எண்ணெய்
● நீங்கள் எவ்வளவு சத்தமாக பேச முடியும்?
● மாற்றத்திற்கான தடைகள்
● கிறிஸ்தவர்கள் மருத்துவர்களிடம் செல்லலாமா?
● நாள் 02:40 நாட்கள் உபவாச ஜெபம்
கருத்துகள்