தினசரி மன்னா
தேவதூதர்கள் சுற்றிலும் பாளையமிறங்கியிருக்றார்கள்.
Sunday, 9th of July 2023
0
0
738
Categories :
Angels
இந்த கடைசி காலத்தில், பலர் கடினமான காலங்களை கடந்து செல்கின்றனர். ஒரு கடினமான சூழ்நிலை அல்லது உங்கள் தொழில், வேலை அல்லது வியாபாரம் தொடர்பான சில நிச்சயமற்ற சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கலாம். இன்றைய தின தியானம் உங்கள் சூழ்நிலையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.
ஆதியாகமம் 32-ல் பார்க்கும்போது, யாக்கோபு ஒரு பயணத்தில் இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தெரியாததை எதிர்கொள்ளும்போது, அவர் பயப்படுகிறார்.
“யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.”
ஆதியாகமம் 32:1-2
"மக்னாயீம்" என்ற வார்த்தையின் அர்த்தம் "இரண்டு பரிவாரம்". யாக்கோபு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உடைமைகள் அங்கு முகாமிட்டுள்ளனர், மேலும் தேவதூதர்களின் கூட்டமும் அங்கு முகாமிட்டுள்ளது.
ஒருவேளை, யாக்கோபைப் போலவே, நீங்கள் ஏதோ ஒரு பிரயாணத்தில் இருக்கலாம். அல்லது, உங்கள் தற்போதைய சூழ்நிலையைப் பற்றி தேவன் உங்களிடம் பேச விரும்பலாம்.
கர்த்தர் உங்களிடம் கூறுகிறார், “இரண்டு பரிவாரம்”. நான் உங்களுக்கு தேவதூதர்களை நியமித்திருக்கிறேன். அவர்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் சார்பாகவும் வேலை செய்கிறார்கள். தயவு செய்து இந்த வெளிப்பாட்டை உங்கள் உள்ளான மனதினில் பிடித்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள் எதிரியின் படைகள் எலிசாவையும் அவனுடைய வேலைக்காரனையும் சூழ்ந்தன. எலிசா தீர்க்கதரிசனமாக, "அவர்களுடன் இருப்பவர்களை விட நம்முடன் இருப்பவர்கள் அதிகம்" என்று கூறினார். (2 இராஜாக்கள் 6:16). அப்போதுதான் எலிசாவின் வேலைக்காரன் ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் தங்களைச் சுற்றி முகாமிட்டிருப்பதைக் கண்டான்.
விட்டுக்கொடுக்கும் தருவாயில் இருந்தால், அலை மாறப்போகிறது என்று சொல்வே வந்திருக்கிறேன்.
ஜெபம்
ஒவ்வொரு ஜெபக் குறிப்பையும் குறைந்தது 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் ஜெபம் செய்யப்பட வேண்டும்
ஆவிக்குரிய வளர்ச்சி
என்னோடே இருப்பவர்கள் அவர்களுடன் இருப்பவர்களை விட அதிகம். (இதை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருங்கள்)
குடும்ப இரட்சிப்பு
நான் முழு மனதுடன் நம்புகிறேன், நானும் எனது வீட்டாரும் உம்மையே சேவிப்போம் என்று அறிக்கை செய்கிறேன். வரும் என் தலைமுறையும் கர்த்தருக்கு சேவை செய்யும். இயேசுவின் நாமத்தில் .
பொருளாதார திருப்புமுனை
பிதாவே, எனக்கு வரும் ஒவ்வொரு வாய்ப்பையும் அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான தொழில் மற்றும் மனத் திறன்களைக் தாரும். இயேசுவின் நாமத்தில். என்னை ஆசீர்வாதமாக மாற்றும்.
சபை வளர்ச்சி
பிதாவே நேரலை ஆராதனைகளை, பார்க்கும் ஒவ்வொரு நபரும் குறிப்பிடத்தக்க அற்புதங்களைப் பெறட்டும், அதைப் பற்றி கேட்கும் அனைவரையும் திகைக்க வைக்கும். இந்த அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்படுபவர்களும் உங்களை நோக்கித் திரும்பும் நம்பிக்கையைப் பெற்று, அற்புதங்களைப் பெறட்டும்.
தேசம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இருளின் பொல்லாத வல்லமையின் அமைக்கப்பட்ட அழிவின் ஒவ்வொரு பொறியிலிருந்தும் எங்கள் தேசத்தை (இந்தியா) விடுவித்தருளும்.
Join our WhatsApp Channel
Most Read
● பந்தயத்தில் ஓடுவதற்கான உத்திகள்● கர்த்தர் இருதயத்தை ஆராய்கிறார்
● அசாதாரண ஆவிகள்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -2
● கீழ்ப்படிதல் ஒரு தெய்வீக அறம்
● ஐக்கியதால் அபிஷேகம்
● நாள் 26: 40 நாட்கள் உபவாச ஜெபம்
கருத்துகள்