தினசரி மன்னா
நீங்கள் தேவனிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணரும்போது எப்படி ஜெபிப்பது
Friday, 4th of August 2023
0
0
708
Categories :
பிரார்த்தனை (Prayer)
தேவன் தொலைவில் இருக்கிறார் அல்லது என் வாழ்க்கையில் ஆர்வம் காட்டவில்லை என்று நான் உணர்ந்த ஒரு காலம் என் வாழ்க்கையில் இருந்தது. நீங்கள் எப்போதாவது ஜெபிக்க சிரமப்படுகிறீர்களா, ஏனென்றால் நீங்கள் தேவனுடன் ஒரு தொடர்பை உணரவில்லையா? உங்களில் சிலர், தேவன் எங்கேயோ அடைய முடியாத தூரத்தில் இருக்கிறார் என்று நினைத்து, ஒருவேளை அவ்வாறே உணரலாம்.
உங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவப் பிரசன்னத்தை உணராவிட்டாலும், அவர் உங்களுக்காக எப்போதும் இருக்கிறார் என்பதை பல ஆண்டுகளாக நான் என் அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டேன். நீங்கள் உங்கள் கைகளை நீட்டாதபோதும் அவர் உங்களை அணுகுகிறார்.
உண்மை எளிமையானது. உங்கள் வாழ்க்கையில் தேவனை அதிகமாக அனுபவிக்க விரும்பினால், நீங்கள் அதிகமாக கேட்க வேண்டும். நீங்கள் வேதத்தைப் படிக்கும்போது அவர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க விரும்பினால், கேளுங்கள்.
“மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” லூக்கா 11:9-10
ஆகவே, நீங்கள் தேவனிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணர்ந்தால், அவருடைய பிரசன்னத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உங்களுக்கு உதவுமாறு அவரிடம் கேளுங்கள். கர்த்தர் தம்முடைய சொந்த மகனாகவும் மகளாகவும் உங்களை நேசிக்கிறார். அவருடைய முன்னிலையில் இருப்பதற்கான உரிமையை நீங்கள் சம்பாதிக்க வேண்டியதில்லை. இயேசு ஏற்கனவே விலை கொடுத்து உங்களுக்காகவும் எனக்காகவும் இதைச் செய்திருக்கிறார்!
உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலான இடைவெளியை மூடுவதற்கான வழிகளில் ஒன்று, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவரிடம் கூறுவது. இது உங்கள் பாரத்தை நீக்கி இயேசுவிடம் ஒப்படைக்கும். அவருடைய பலத்தில் நாம் இளைப்பாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார், நம்முடைய சொந்த பலத்தில் அல்ல (மத்தேயு 11:28-30).
ஜெபம்
ஒவ்வொரு ஜெபக்குறிப்பையும் குறைந்தது இரண்டு நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஜெபிக்க வேண்டும்
தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, என் முறிவையும் வலியையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். எனக்குள் உள்ள அனைத்தும் என் தேவனே, உம்மை நோக்கி மன்றாடுகின்றன. தயவுசெய்து எனக்கு உதவும்! உம்மால் முடியும் என்பதை அறிந்திருக்கிறேன்; ஆகவே நான் உம்மிடம் வருகிறேன். ஆமென்.
குடும்ப இரட்சிப்பு
பரிசுத்த ஆவியின் அக்கினி இயேசுவின் நாமத்தினாலே என் மீதும் என் குடும்ப உறுப்பினர்கள் மீதும் மீண்டும் விழுகிறது. ஆண்டவரே, என் வாழ்க்கையில், என் குடும்பத்தில் பரிசுத்தமில்லாத அனைத்தையும் உமது அக்கினி இயேசுவின் நாமத்தினாலே எரிக்கட்டும்.
பொருளாதார முன்னேற்றம்
உதவிக்காக என்னைப் பார்ப்பவர் ஏமாற்றமடையமாட்டார். என் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதை விட அதிகமாகவும், தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கும் ஏராளமாக இருக்கும். நான் கடன் கொடுப்பவன், கடன் வாங்குபவன் அல்ல. இயேசுவின் நாமத்தினாலே.
கேஎஸ்எம் சபை
பிதாவே, பாஸ்டர் மைக்கேல், அவரது குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஞானம், புரிதல், அறிவுரை வலிமை, அறிவு மற்றும் கர்த்தருக்குப் பயந்து நடக்க பிரார்த்தனை செய்கிறேன் (ஏசாயா 11:2-3)
தேசம்
பிதாவே, உமது நீதி எங்கள் தேசத்தை நிரப்பட்டும். எங்கள் தேசத்திற்கு எதிரான இருள் மற்றும் அழிவு சக்திகள் அனைத்தும் அழிக்கப்படட்டும். எங்கள் தேசத்தின் ஒவ்வொரு நகரத்திலும், மாநிலத்திலும் அமைதியும் வளமும் நிலவட்டும். இயேசுவின் நாமத்தினாலே.
Join our WhatsApp Channel
Most Read
● அக்கிரமத்தின் வல்லமையை உடைத்தல் – (I)● கவனிப்பில் ஞானம்
● இயேசுவைப் பார்க்க ஆசை
● விசுவாசத்தின் வல்லமை
● தேவனுடைய வார்த்தைகளை ஆழமாக உங்கள் இருதயத்தில் பதியுங்கள்
● நேரத்தியான குடும்ப நேரம்
● விசுவாசத்தில் மிகுதியாய் வளருதல்
கருத்துகள்