தினசரி மன்னா
கிறிஸ்துவில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாம்
Monday, 26th of February 2024
0
0
635
Categories :
கிறிஸ்துவில் நமது அடையாளம்(our identity in Christ)
”நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி
தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.“
வெளிப்படுத்தின விசேஷம் 1:6
வார்த்தைகளின் வரிசையைக் கவனியுங்கள்: முதலில் அன்புகூர்ந்து, பின்னர் தமது இரத்தத்தினாலே, பின்னர் கழுவினார்.
தேவன் நம்மை ஒருவித கடமை உணர்விலிருந்து கழுவி, பின்னர் நாம் சுத்தமாக இருந்ததால் நம்மை நேசித்தார் என்பது அல்ல. நாம் அழுக்காக இருக்கும்போது அவர் நம்மை நேசித்தார், ஆனால் அவர் நம்மை கழுவினார்.
ரோமர் 5:8, இதையே உறுதிப்படுத்துகிறது: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.“
ரோமர் 5:8
”நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.“
வெளிப்படுத்தின விசேஷம் 1:6
கர்த்தராகிய இயேசு ‘நம்மைக் கழுவுவதில்’ மட்டும் நின்றுவிடவில்லை, மாறாக அவர் நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களாகவும் ஆக்கினார்.
இப்போது சட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு, ராஜாவாகவும் ஆசாரியனாகவும் இருந்த ஒரு மனிதன் இருந்தான் - மெல்கிசேதேக் (ஆதியாகமம் 14:18). இருப்பினும், பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமானம் வழங்கப்பட்ட பிறகு, ராஜாக்களையும் ஆசாரியர்களையும் இணைப்பது தடைசெய்யப்பட்டது. நீங்கள் ராஜாவாகவோ அல்லது ஆசாரியனாகவோ இருக்கலாம் - இருவரும் அல்ல.
யூதாவின் அரசன் உசியா இரண்டு காரியங்களையும் ஒருங்கிணைக்க முயன்று அதற்கான தண்டனையாய் தொழுநோய் பெற்றான். 2 நாளாகமம் 26:16-21 -ஐ வாசியுங்கள்; அது முழு கதையையும் நமக்கு சொல்கிறது.
ராஜாக்களும் ஆசாரியர்களுமாகிய இரு பதவிகளையும் இணைக்க முயன்ற மற்றொரு நபர் சவுல் - அவர் கர்த்தரால் நிராகரிக்கப்பட்டார் மற்றும் அவரது ராஜ்யத்தை இழந்தார். 1 சாமுவேல் 13:8-14ஐ படியுங்கள்.
இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளும் பழைய ஏற்பாட்டில் ராஜாக்களையும் ஆசாரியர்களையும் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், புதிய உடன்படிக்கையின் கீழ், நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல இருக்க முடியும், அவர் ராஜாவாகவும் பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார்.
இப்போது இங்கே ஒரு கொள்கை உள்ளது. கர்த்தராகிய இயேசு ராஜாவாகவும் ஆசரியராகவும் இருந்ததால், அவர் நம்மை தேவனுக்கு ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆக்க முடியும். நீங்கள் இல்லாதவராக வேறொருவரை உருவாக்க முடியாது.
இப்போது 1 பேதுரு 2:9 க்கு செல்lungal: ”நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.“
ராஜரீகமான ஆசாரியத்துவம் என்ற சொற்களின் கலவையைக் கவனியுங்கள். அப்படியானால், தேவன்மீது உண்மையான விசுவாசம் கொண்ட ஒவ்வொருவரும் ஆசாரியராகவும் ராஜாவாகவும் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
கிறிஸ்துவைப் போலவே நாமும் இரு வழிகளிலும் ஊழியம் செய்ய வேண்டும்; ஆசாரியர்களாகிய நாம் தந்தைக்கு முன்பாக துதி மற்றும் பரிந்துரையின் பலிகளைச் செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம். ராஜாக்களாக, சுவிசேஷத்திற்காக நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதன் மூலமும் பிசாசுகளைத் துரத்துவதன் மூலமும் நம் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
வாக்குமூலம்
நான் கிறிஸ்துவில் இருக்கிறேன், எனவே நான் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், நான் அற்புதமான செயல்களை முன்வைத்து, அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்டவன்.
Join our WhatsApp Channel
Most Read
● கிறிஸ்துவில் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நுழைதல்● இந்த புத்தாண்டின் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பது
● தேவனின் பரிபூரண சித்தத்தை ஜெபியுங்கள்
● அசுத்த ஆவிகளின் நுழைவிடம் மூடுதல் - I
● மாறாத சத்தியம்
● நன்றி செலுத்தும் வல்லமை
● ஒரு மரித்த மனிதன் ஜீவனோடு இருப்பவர்களுக்காக ஜெபம் செய்கிறான்
கருத்துகள்