தினசரி மன்னா
நீங்கள் ஜெபியுங்கள், அவர் கேட்கிறார்
Thursday, 18th of July 2024
0
0
209
Categories :
பிரார்த்தனை (Prayer)
பொதுவாக, நீங்கள் மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது, பதிலுக்கு பதிலை எதிர்பார்க்கிறீர்கள். சில நேரங்களில், நீங்கள் பதில்களை முழுமையாக நம்பாத நபர்களிடம் கோரிக்கைகளை வைக்கலாம். இது போன்ற நபர்களுடன் முந்தைய பரிவர்த்தனைகள் காரணமாக இருக்கலாம், ஏராலமான ஏமாற்றங்கள் உங்களை உடைந்த இருதயங்களுடன் கண்ணீர் விட வைத்திருக்கலாம்.
உண்மையில், மனிதன் உங்களைத் தோல்வியடையச் செய்யலாம், ஆனால் தேவம் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்! வேதம் தெளிவாகக் கூறுகிறது: “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?”
எண்ணாகமம் 23:19 நீங்கள் ஜெபிக்கும்போது உங்கள் விண்ணப்பங்களுக்கான பதில்களுக்காக தேவன் நம்பலாம்.
தேவ மனிதர் ஒருமுறை கூறினார், “நம்முடைய விண்ணப்பங்கள் சங்கடமாக இருக்கலாம். நமது முயற்சிகள் பலவீனமாக இருக்கலாம். ஆனால் ஜெபத்தின் வல்லமை அதைக் கேட்பவனிடமே உள்ளது, அதைச் சொல்பவரிடமில்லை, நமது ஜெபங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.“
மக்கள் சிறு குழந்தைகளுக்கு வாக்குறுதிகளை அளிக்கும்போது, அது உறுதியளித்தபடி நிச்சயம் செய்யப்படும் என்று அவர்கள் எப்படி அப்பாவித்தனமாக நம்புகிறார்கள் என்பதை நாம் அறிவோம். நாம் எதையாவது அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிசாய்ப்பார் என்று அவருடைய வார்த்தை நமக்குச் சொல்கிறபடி, தேவனிடம் நாம் செய்யும் ஜெபத்தில் இது தூரமாக இல்லை. ஒரு சிறு குழந்தை சிகரெட் கேட்டால், அறிவுள்ள ஒரு பெரியவர் அதற்கு பதில் சொல்லமாட்டார். நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். 1 யோவான் 5:14-15.
சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் இன்னும் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். தேவன் அவர்களின் ஜெபக் விண்ணப்பங்களை கேட்டு பதில் அளிப்பதைக் கண்ட மனிதர்களின் கதைகளால் வேதம் நிரம்பியுள்ளது. அப்படிப்பட்டவர்களில் தீர்கதரிசி சகறியா ஒருவர். அவருக்கு ஒரு குறிப்பிட்ட சவால் இருந்தது, அது அவரும்அவர் மனைவிக்கும் ஒரு குழந்தையைப் இல்லாமல் இருந்தது, ஆனால் அவர் கைவிடவில்லை. இறுதியில், ஒரு குறிப்பிட்ட நாளில், அவர் வெறுமனே தனது ஆசாரியப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, தேவதூதர் தோன்றி, "சக்காரியாவே, பயப்படாதே, உன் ஜெபம் கேட்கப்பட்டது" (லூக்கா 1:13) என்றார்.
அப்போஸ்தலனாகிய பேதுரு எப்போது சிறையில் அடைக்கப்பட்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவருடைய விடுதலையைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் வேறு வழிகளைத் தேடியிருக்கலாம், ஆனால் பேதுருவின் விடுதலையைப் பற்றி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று நடந்தது. அப்போஸ்தலர் 12:5 கூறுகிறது, “அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.”
நீங்கள் என்ன தேடுகிறீர்கள் - வேலை, நல்ல திருமணம், ஊழியத்தில் வெற்றி, நல்ல ஆரோக்கியம், குழந்தை? நமக்கு எல்லா நல்ல பரிபூரணமான ஈவுகளை தரும் கர்த்தரிடம் ஜெபியுங்கள். ( யாக்கோபு 1:17 ) ஜெபத்தில் உங்கள் சவால்களை தேவனிடம் எடுத்துச் செல்லுங்கள், உங்கள் பிரச்சினையைப் பற்றி தேவனிடம் சொல்ளுங்கள், அவர் நிச்சயமாக அதை உங்களுக்குச் செய்வார்.
ஜெபம்
என் ஜெபத்திற்கு எப்பொழுதும் செவிசைப்பாதற்கு நன்றி. ஜெபங்களுக்கு பதிலளிக்கும் தேவனை நான் சேவிப்பதால் என் இருதயம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. என் வழிகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆண்டவரே, என் நம்பிக்கை வேறு யாரிடமும் இல்லை, உன்னில் மட்டுமே உள்ளது. இயேசுவின் வல்லமையான நாமத்தில். ஆமென்
Join our WhatsApp Channel
Most Read
● தேவனின் குணாதிசயம்● ஆராதனையின் நறுமணம்
● யுத்தத்திற்க்கான பயிற்சி - 1
● ஐக்கியம் மற்றும் கீழ்ப்படிதல் ஒரு தரிசனம்
● உடனடியாக கீழ்ப்படிதலின் வல்லமை
● அவர்கள் சிறிய இரட்சகர்கள்
● ஆவியானவர் ஊற்றப்படுதல்
கருத்துகள்