தினசரி மன்னா
சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 3
Sunday, 28th of April 2024
0
0
500
Categories :
வளிமண்டலம் (Atmosphere)
சூழல்கள்களைப் பற்றி நாம் கற்றுக்கொண்டு வருகிறோம். இன்று, வளிமண்டலங்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவதற்கான எங்கள் தேடலைத் தொடர்கிறோம்.
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, "நாம் ஒரு சூழ்நிலையை ஆயத்தம் செய்ய முடியுமா?" பதில் "ஆம்". இதற்கு, நமது முன்னோடியும் சரியான முன்மாதிரியுமான ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். (எபிரெயர் 6:20, 1 பேதுரு 2)
கர்த்தராகிய இயேசு, தன் மகளைக் குணப்படுத்த யவீரிவின் வீட்டிற்குச் செல்லும் வழியில், அவள் மரித்து விட்டாள் என்ற செய்தியைப் பெறுகிறார். “இயேசு அதைக் கேட்டபோது, அவருக்கு (யாவீர்) மறுமொழியாக, “இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்." அவர் வீட்டிற்குள் வந்தபோது, பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் சிறுமியின் தந்தை மற்றும் தாயைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. (லூக்கா 8:50-54)
இயேசு அந்தச் சிறுமியை உயிரோடு எழுப்புவதற்கு முன், கேலி செய்தவர்களை வெளியேற்றினார். அவர் ஒரு அற்புதத்திற்கான சூழ்நிலையை ஆயத்தம் செய்தார்.
எல்லா கேலி செய்பவர்களையும் நாம் மௌனமாக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், பெருமை, மன்னிக்காத தன்மை போன்றவற்றை நம் வாழ்விலிருந்து நிச்சயமாக வெளியேற்ற முடியும். ஒருவருக்காக ஜெபிப்பதற்கு முன், நீங்கள் அவர்களை மனந்திரும்புதலின் ஜெபத்தில் வழிநடத்தி, இயேசுவை அவர்களின் இரட்சகராகப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் ஒருவருடன் ஜெபிக்கும்போது, நீங்கள் சிறிது நேரம் ஆராதனையில் செலவிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், பின்னர் மட்டுமே பரிந்துரை ஜெபத்தில் ஈடுபடுங்கள், ஏனெனில் இது உங்கள் இ௫தயங்களை அவருடைய ஆவியுடன் இணைக்கும்.
அப்போஸ்தலனாகிய பேதுரு, அற்புதங்களுக்கான சூழலை தயார்படுத்தும் இந்த ரகசியத்தை அவருடைய கர்த்தரும் எஜமானருமான - கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொண்டார்.
”பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.“
அப்போஸ்தலர் 9:40
கர்த்தராகிய இயேசுவைப் போலவே பேதுருவும், தடைகளை நீக்கி அற்புதங்களுக்கான சூழலை ஆயத்தம் செய்தார். நாமும் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எஜமானன் மற்றும் அவருடைய பெரிய அப்போஸ்தலர்களின் அடிச்சுவடுகளில் நடக்கலாம்.
இன்னும் ஒரு உண்மையைப் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள்.
”பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.“
மத்தேயு 16:19
வளிமண்டலத்தில் உள்ள பொல்லாத ஆவிகளை கட்டும் வல்லமையை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு இடத்தில் ஜெபிப்பதற்கு முன், நாம் இயேசுவின்நாமத்தில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் ஒவ்வொரு தடைகளையும், மற்றும் அற்புதங்கள் வெளிப்படுவதைத் தடுக்கும் ஒவ்வொரு தீய வல்லமையையும் கட்ட வேண்டும். அதிசயத்திற்கான சூழ்நிலையை இப்படித்தான் ஆயத்த செய்ய வேண்டும்.
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனக்கும் எதிராக இருளின் வல்லமைகளை நான் கட்டுகிறேன், எங்கள் முன்னேற்றத்தைப் பெறுவதைத் தடுக்கும் வல்லமையை தடுக்கிறேன். நான் என் வாழ்க்கை மற்றும் குடும்பத்தின் மீது விடுதலை மற்றும் ஆதரவாக பேசுகிறேன். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும்● பலிபீடமும் மண்டபமும்
● தேவனின் எச்சரிக்கைகளை புறக்கணிக்காதீர்கள்
● நாள் 37: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● சாத்தான் உங்களை அதிகம் தடுக்கும் ஒரு பகுதி
● நீங்கள் ஜெபியுங்கள், அவர் கேட்கிறார்
● நாள் 35 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
கருத்துகள்