தினசரி மன்னா
இன்று தேவனால் எனக்கு வழங்க முடியுமா?
Saturday, 15th of June 2024
1
1
304
Categories :
ஏற்பாடு (Provision)
இஸ்ரவேல் புத்திரர் ஒருமுறை கர்த்தரிடம் கேலியாக இந்தக் கேள்வியைக் கேட்டார்கள், "தேவனால் வனாந்தரத்தில் ஒரு பந்தியை ஆயத்தம் செய்ய முடியுமா?" சங்கீதம் 78:19). அந்தக் கேள்விக்கான பதில் ஒரு உறுதியான 'ஆம்!" உண்மையில், பரலோக மன்னா ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு காலையிலும் தங்கள் சொந்த வீட்டு முற்றத்தில் விழுந்தது. "இஸ்ரவேலர்கள் உணவை மன்னா என்று அழைத்தனர். அது கொத்தமல்லி விதை போல வெண்மையாகவும், தேன் அடை போலவும் இருந்தது. (யாத்திராகமம் 16:31).
மீண்டும், இஸ்ரவேல் புத்திரர் மன்னாவுக்குப் பதிலாக இறைச்சியைப் புசிக்க விரும்பியபோது, கர்த்தர், ”அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்“ என்று பதிலளித்தார். (எண்ணாகமம் 11:23)
இந்த வார்த்தையை தொடர்ந்து, ”அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், அந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது, அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.“
எண்ணாகமம் 11:31-32
அற்புதங்கள் நிற்கவில்லை. இஸ்ரவேல் புத்திரர் ஒருபோதும் தேய்ந்து போகாத ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருந்தார்கள், அவர்களுடைய கால்கள் வீங்கவில்லை! (நெகேமியா 9:21). இந்த செயல்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களாகும்.
இதையெல்லாம் படித்த பிறகு, பல கிறிஸ்தவர்கள் உணர்கிறார்கள், "ஓ, நிச்சயமாக, நான் அதை நம்புகிறேன், ஆனால் அது எப்பொழுதோ நடந்தது." அவர்களில் ஒருவராக இருக்க வேண்டாம். உங்கள் சொந்த அதிசய ஏற்பாட்டிற்காக தனிப்பட்ட முறையில் தேவனை நம்பும் போது உங்கள் நம்பிக்கையை அசைக்க அனுமதிக்காதீர்கள். தயவு செய்து நான் இப்போது சொல்லவிருப்பதைக் கவனமாகக் கவனியுங்கள்: "தேவன் உங்களுக்கு வழங்குவதற்கான திறன் வெளிப்பாட்டின் மூலம் உங்களுக்குள் பிறக்க வேண்டும். அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் வர வேண்டும்."
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அடுத்த ஏழு நாட்களுக்கு, இயற்கைக்கு அப்பாற்பட்ட தொடர்பான வேதவசனங்களைப் படித்துக்கொண்டே இருங்கள். அந்த வேதங்களைப் படித்த பிறகு, கர்த்தரிடம் உங்களுடைய தேவைகளை சந்திக்கும்மாறு கேளுங்கள். என் வார்த்தைகளைக் குறித்து கொள்ளுங்கள்; உங்கள் வாழ்க்கையில் காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும். இது உங்களுக்கு வேலை செய்யும் போது, வாழ்நாள் முழுவதும் பயிற்சி செய்யுங்கள், மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.
நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்று நான் நம்புகிறேன். வரவிருக்கும் உபத்திரவத்திற்கு முன் "பிரசவ வலி" என்று வேதம் முன்னறிவிக்கிறது (மத்தேயு 24:8). ஆயினும்கூட, நல்ல நேரங்களிலும் கடினமான நேரங்களிலும் தேவன் உங்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டதை வழங்க முடியும் என்பதை வேதங்களும் சரித்திரமும் வெளிப்படுத்துகின்றன!
ஜெபம்
பிதாவே, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை பற்றிய உமது வார்த்தையை நான் பெறுகிறேன். நீர் மாறவில்லை. நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நீர் என் தேவைகளை சந்திபவர். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தேவனின் மகிழ்ச்சி● வார்த்தையால் வெளிச்சம் வருகிறது
● கடைசி காலத்தின் 7 முக்கிய தீர்க்கதரிசன அடையாளங்கள்: #1
● வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் - 1
● நீதியின் வஸ்திரம்
● மனித தவறுகளுக்கு மத்தியில் தேவனின் மாறாத இயல்பு
● ஆராதனையை ஒரு வாழ்க்கை முறையாக்குதல்
கருத்துகள்