தினசரி மன்னா
வார்த்தையால் வெளிச்சம் வருகிறது
Sunday, 21st of July 2024
0
0
204
Categories :
தேவனின் வார்த்தை ( Word of God )
வெளிச்சமும் இருளும் இணைந்து செயல்பட முடியாது. ஒன்றின் இருப்பு மற்றொன்று இல்லாததைக் குறிக்கிறது. உண்மையில், ஒரு பிரபலமான கிறிஸ்தவ வல்லுநர் இதை இவ்வாறு கூறினார்: "ஒளியைக் கொடு, இருள் தானாகவே மறைந்துவிடும்." இருப்பினும், இருள் என்பது வெளிச்சம் இல்லாதது மட்டுமல்ல; அதை விட அதிகமாக அர்த்தம் கொடுக்கலாம்.
பொதுவாக, இருளில் இருக்கும்போது, ஒருவர் எதையும் பார்க்கமுடியாது, என்ன செய்வது என்று ஒருவருக்குத் தெரியாது, ஒருவர் வெறுமனே துப்பு இல்லாமல் இருப்பார். ஒரு பரந்த பொருளில், இருளின் நிலை என்பது குழப்பம், ஊக்கமின்மை, மறதி, சோர்வு, இழப்பு போன்றவற்றின் தருணங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். இருப்பினும், இருளின் பரிமாணம் எதுவாக இருந்தாலும், ஒளியை வழங்குவதே தீர்வு என்பது நல்ல செய்தி.
வேதத்தில், அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வகையான வெளிச்சத்தை காண்கிறோம். இது வெளிச்சத்தில் எந்த நேரத்திலும் நமது சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகும். இது நம் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டும் ஒன்றாகும். இந்த வெளிச்சம் தேவனின் வார்த்தை.
“உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து...”சங்கீதம் 119:130
ஆகவே, தேவனுடைய வார்த்தையை நம் இருதயங்களில் அனுமதிக்க வேண்டும். இது இருளை அகற்றும், மேலும் நம் வாழ்வு வெளிச்சம் நிறைந்ததாக இருக்கும். குழப்பம் நீங்கும். மனச்சோர்வு ஓடிவிடும். தெளிவு உண்டாகும். இருப்பினும், இது தானாகவே நடக்காது, நாம் எப்போதும் நம் வேதத்தை நம்முடம் எடுத்துச் செல்கிறோம் என்பதால் நடக்காது; வார்த்தை நம் இருதயங்களில் ஊடுருவ வேண்டும் - உள்ளத்தின் ஆழத்தில் செல்ல வேண்டும். வார்த்தை நமக்கு வரும்போது அதைப் பற்றிய நமது புரிதலையும் இது உள்ளடக்கும்.
“உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.”
சங்கீதம் 119:130
வார்த்தையைப் புரிந்துகொள்வதில், நாம் புரிந்துகொள்ளுதலைப் பெறுகிறோம், மேலும் இது சரியான முறையில் வார்த்தையை நம் வாழ்வில் பயன்படுத்த உதவுகிறது. எனவே, தேவனுடைய வார்த்தையை மேலோட்டமாக அறிந்துகொள்வதைத் தாண்டி நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். தேவனுடைய வார்த்தையின் வெளிச்சம் நம்மீது படரும் வரை நாம் விடாமுயற்சியுடன் வார்த்தையைப் படித்து, தியானிப்போம்.
இது நம் பங்கில் அர்ப்பணிப்பை எடுக்கும், மேலும் நாம் பரிசுத்த ஆவியில் செயல்படும்போது இது சாத்தியமாகும்.
எபேசியர் 1:17 - 18ல், அப்போஸ்தலன் பவுல் ஜெபித்தபோது, இதன் மகத்தான முக்கியத்துவத்தை நாம் காண்கிறோம்,
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;”
ஜெபம்
பிதாவே, வெளிச்சத்தையும் புரிதலையும் தரும் உமது வார்த்தையின் பிரசித்தத்க்காக உமக்கு நன்றி. உமது வார்த்தையின் வெளிச்சம் என் இருதயத்தில் எப்போதும் உதிக்கட்டும். என் புரிதலின் கண்கள் ஒளிரட்டும், உமது வார்த்தை என் வாழ்வில் கனி தரட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றுவது● நோக்கத்தோடே தேடுதல்
● குற்றத்தின் பொறியில் இருந்து விடுபடுதல்
● உங்கள் போராட்டம் உங்கள் அடையாளமாகி விடாதீர்கள் -2
● முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே
● ஆவியானவர் ஊற்றப்படுதல்
● விசுவாசத்தில் அல்லது பயத்தில்
கருத்துகள்